விலைக்கு வந்த அக்ஸோ நோபல் இ்ந்தியா.. குறைந்த விலைக்கு வாங்கும் ஜேஎஸ்டபுள்யூ பெயிண்ட்ஸ்..!!

நெதர்லாந்தை சேர்ந்த அக்ஸோ நோபல் என்வி நிறுவனம் சர்வதேச அளவில் மிகப்பெரிய பெயிண்ட் நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்தியாவில் தனது துணை நிறுவனமான அக்ஸோ நோபல் இந்தியா மூலம் இந்தியாவில் பெயிண்ட் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் 7 சதவீத சந்தை பங்கை கொண்ட இந்த நிறுவனம், இந்த பிரிவில் மிகவும் லாபகரமான நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் ஆண்டுக்கு 25 கோடி லிட்டர் பெயிண்ட் உற்பத்தி திறன் கொண்டது.

கடும் போட்டி
பெயிண்ட் துறையில் பிர்லா ஓபஸ் போன்ற புதிய நிறுவனங்களின் வரவு, கடும் போட்டி போன்றவற்றால் மற்ற பெயிண்ட் நிறுவனங்கள் போலவே அக்ஸோ நோபல் இந்தியாவும் பாதிப்பை சந்தித்தது. கடந்த டிசம்பர் காலாண்டில் அக்ஸோ நோபல் இந்தியா நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் சுமாராக இருந்தது. அந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் லாபம 5 சதவீதம் குறைந்தது.

விலைக்கு வந்த அக்ஸோ நோபல் இ்ந்தியா.. குறைந்த விலைக்கு வாங்கும் ஜேஎஸ்டபுள்யூ பெயிண்ட்ஸ்..!!

இந்நிலையில் கடந்த அக்டோபரில் அக்ஸோ நோபல் என்வி தனது இந்திய வர்த்தக நிறுவன செயல்பாட்டை மறுஆய்வு செய்ய உள்ளதாக தெரிவித்தது. இதனையடுத்து கடந்த பிப்ரவியில் அக்ஸோ இந்தியா தனது பவுடர் கோட்டிங் வணிகத்தை தனது தாய் நிறுவனத்துக்கு விற்க ஒப்புக் கொண்டது. தற்போது ஜேஎஸ்டபுள்யூ பெயிண்ட்ஸ் நிறுவனம் அக்ஸோ நோபல் இந்தியாவை கையகப்படுத்த உள்ளது,

சந்தை மதிப்பு
அக்ஸோ நோபல் இந்தியா நிறுவனத்தில் அதன் தாய் நிறுவனமான அக்ஸோ நோபல் என்வி வசம் உள்ள 74.76 சதவீத பங்குகளை சுமார் ரூ.9,000 கோடிக்கு ஜேஎஸ்டபுள்யூ வாங்க உள்ளது. இதன்படி பார்த்தால், அக்ஸோ நோபல் என்வியின் இந்திய பிரிவு நிறுவனத்தி் மதிப்பு ரூ.12,000-12.500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போதைய சந்தை விலையில் 25 சதவீதம் குறைவாகும். அக்ஸோ நோபல் இந்தியா நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு சுமார் ரூ.16,380 கோடியாகும்

ஜேஎஸ்டபுள்யூ குழும தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் தலைமையிலான ஜேஎஸ்டபுள்யூ புரோமோட்டர் குடும்பம், அக்ஸோ நிறுவனத்தை வாங்குவதற்காக ரூ.3,000 கோடியை பங்குகளாக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல். ஜூன் மாத மத்தியில் இந்த நிறுவன கையகப்படுத்துல் தொடர்பான ஒப்பந்தம் நிறைவேறும் என கூறப்படுகிறது.

கடன்
மேலும், ரூ.3,000 கோடி டாய்ச் வங்கி, எம்யுஎஃப்ஜி மற்றும் ஆக்சிஸ் போன்ற வங்கிகள் மூலம் கடன் பெற திட்டமிடப்பட்டுள்ளது. சிட்டி மற்றும் மோர்கன் ஸ்டான்லி இந்த ஒப்பந்தத்திற்கு (அக்ஸோ நோபல் இந்தியா நிறுவனத்தை வாங்கும் நடவடிக்கை) ஆலோசகர்களாக உள்ளனர்.

அக்ஸோ நோபல் இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்துவதன் மூலம் சில லாபங்களை ஜேஎஸ்டபுள்யூ எதிர்பார்க்கிறது. அக்ஸோவை வாங்குவதன் மூலம் பெயிண்ட் பிரிவில் மூன்றாவது இடத்தில் உள்ள கன்சாய் நெரோலாக்கை நெருங்கும். கடந்த 2023-24ம் நிதியாண்டில் ஜேஎஸ்டபுள்யூ பெயிண்ட்ஸ் நிறுவனம் முதல் முறையாக 3 சதவீத செயல்பாட்டு லாபத்துடன் செயல்பாட்டு மட்டத்தில் லாபகரமாக மாறியது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+