உச்சநீதிமன்ற தீர்ப்பால் JSW ஸ்டீல் நிறுவனத்திற்கு வந்த பிரச்சினை..! லாபத்தில் பெரிய ஓட்டை..!

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் வருமானம் 10 முதல் 15 சதவீதம் வரை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டு திவால் நிலையில் இருந்த பூஷன் பவர் ஸ்டீல் நிறுவனத்தை 19,700 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. பூஷன் பவர் ஸ்டீல் நிறுவனம் திவால் நிலைக்கு சென்றதை எடுத்து அந்த நிறுவனத்திற்கு கடன் வழங்கிய நிறுவனங்கள் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தன. இதனை அடுத்து ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனம் இந்த நிறுவனத்தை 19700 கோடி ரூபாய் கொடுத்து வாங்குவதற்கு தயாராக இருப்பதாக அறிவித்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்பால் JSW ஸ்டீல் நிறுவனத்திற்கு வந்த பிரச்சினை..! லாபத்தில் பெரிய ஓட்டை..!

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயமும் இதற்கு அனுமதி தந்தது. இதனை அடுத்து இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தியாளராக ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் உருவானது. தற்போதைக்கு இந்த நிறுவனம் 34.2 மில்லியன் டன்கள் ஸ்டீல் உற்பத்தி திறனை கொண்டிருக்கிறது. இதில் பூஷன் ஸ்டீல் நிறுவனம் 13 சதவீத பங்களிப்பை கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அன்று உச்சநீதிமன்றம் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் பூஷன் பவர் நிறுவனத்தை வாங்கியது செல்லாது என தீர்ப்பு அளித்துள்ளது.

இது ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி நிறுவனத்தின் இந்த ஆண்டு உற்பத்தி 15 சதவீதம் வரையும் வருமானம் 10% வரையும் குறையும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எடுத்து ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம், பூஷன் பவர் நிறுவனத்தை கைவிட வேண்டி இருக்கும். இது ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இது நிறுவனத்தின் பங்கு மதிப்பையும் முதலீட்டாளர்கள் நிறுவனத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் பெருமளவில் குறைக்கும் என சொல்லப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு தங்களுடைய துணை நிறுவனமாக பூஷன் பவர் நிறுவனத்தை பதிவு செய்தது ஜேஎஸ்டபிள்யூ. இந்த நிறுவனத்தின் மூலதன செலவினத்திற்காக ஜே எஸ் டபிள்யூ நிறுவனம் 4500 கோடி முதலீடு செய்திருக்கிறது. இதன் மூலம் பூஷன் ஸ்டீல் நிறுவனம் தன்னுடைய உற்பத்தி திறனை 2.75 மில்லியன் டன்களில் இருந்து 4.5 மில்லியன் டன்களாக உயர்த்தியுள்ளது. 2027 ஆம் ஆண்டுக்குள் இந்த நிறுவனத்தின் உற்பத்தியை 5 மில்லியன் டன்களாக உயர்த்த வேண்டும் என ஜேஎஸ்டபிள்யூ இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது.

ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் பூஷன் நிறுவனத்தை வாங்கிய போது அதன் மதிப்பு 19,500 கோடி ரூபாய் தற்போது மதிப்பு 35 ஆயிரம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பை சந்திக்கும் என சொல்லப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+