இந்தியாவின் பிரபலமான கெமிக்கல் நிறுவனமான ஜூபிலண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மனு அஹுஜா டிசம்பர் 9 அன்று காலமானார்.
மும்பை பங்குச்சந்தையில் ஜூபிலண்ட் இண்டஸ்ட்ரீஸ் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் அஹுஜாவின் திடீர் மற்றும் எதிர்பாராத மறைவு JACPL-க்கு (Jubilant Agri and Consumer Products Limited) ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

மேலும் JACPL இன் இயக்குநர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும், வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறார்கள் என தெரிவித்து இருந்தது.
ஜேஏசிபிஎல்-ன் முழு நேர இயக்குனராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்த காலத்தில் அவர் ஆற்றிய மதிப்புமிக்க பங்களிப்புகளுக்கு ஜேஏசிபிஎல், இயக்குநர்கள் மற்றும் நிர்வாகம், சாதனைப் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறது என்று பங்குச்சந்தையில் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் ஜூபிலண்ட் இண்டஸ்ட்ரீஸ் கூறியுள்ளது.
ஜூபிலண்ட் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமாக மனு அஹுஜா மே 2018 இல் நியமிக்கப்பட்டார், இவரது நியமனத்தின் போது ஜூபிலண்ட் நிர்வாக குழு அஹுஜா வணிகத்தை மிகப்பெரிய உயரத்திற்கு கொண்டு செல்வார் என்று இணையதளத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பிரபலமான XLRI ஜாம்ஷெட்பூர் மற்றும் தாபர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங், பாட்டியாலா ஆகிய கல்லூரிகளில் பட்டம் பெற்றவர் மனு அஹுஜா, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பல்வேறு வணிகங்கள் மற்றும் தொழில்களில் சிறந்த அனுபவம் பெற்றவர்.
ஜூபிலண்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் சேர்வதற்கு முன், அவர் ASSA ABLOY நிறுவனத்தின் தெற்காசியாவின் தலைவராக இருந்தார். ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் இந்தியா, சார்க் மற்றும் ஆசியான் பகுதிகளில் சுமார் 18 நாடுகளை நிர்வகித்தார்.
அவர் 1991 ஆம் ஆண்டில் கோட்ஸ் வியெல்லாவுடன் தனது முதல் பணியை தொடங்கினார். இதன் பின்பு வேர்ல்பூல் மற்றும் அக்சோ நோபல் ஆகிய நிறுவனத்தில் தலைமைப் பதவிகளிலும் இருந்துள்ளார்.


Click it and Unblock the Notifications