சென்னை: 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பாக நாளை நாடு முழுவதும் பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. 10 மத்திய தொழிலாளர் யூனியன்கள் மற்றும் பல்வேறு கூட்டமைப்புகளும் சேர்ந்து பொது வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த இருக்கின்றன .
மத்திய அரசு தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கிறது, விவசாயிகள் விரோதப் போக்கை கடைபிடிக்கிறது ,நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுகிறது என பல்வேறு குற்றச்சாட்டுகளை இந்த தொழிலாளர் யூனியன்கள் முன்வைத்து வேலை நிறுத்த போராட்டத்தை நடத்துகின்றன. போராட்டத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர் யூனியங்களும் கலந்து கொள்கின்றன. இந்த போராட்டத்திற்கு வங்கி , தபால் துறை மற்றும் பல்வேறு மாநில போக்குவரத்து துறை யூனியன்கள், காப்பீடு துறைகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

வங்கிகள் இயங்குமா?: சென்னையில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. வங்கி ஊழியர் சங்கம் போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாக தெரிவித்து இருக்கிறது. எனவே வங்கிகள் நாளை திறந்திருக்கும் ஆனால் குறிப்பிட்ட சில சேவைகள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். ஊழியர்கள் போராட்டங்களில் பங்கேற்பதால் முழுமையான வங்கி சேவைகளை நாளை எதிர்பார்க்க முடியாது.
மருத்துவமனை : மருத்துவ சங்கங்கள் சார்பாக போராட்டத்திற்கு ஆதரவு என எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே மருத்துவமனைகள் மற்றும் பிற அவசர சேவைகளை வழங்கக்கூடிய அமைப்புகள் வழக்கம் போல இயங்கும் என்பதால் பொதுமக்கள் அது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை.
பள்ளி மற்றும் கல்லூரிகள்: பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும், ஆனால் பள்ளி கல்லூரிக்கு செல்பவர்களுக்கு வழக்கம் போல போக்குவரத்து வசதிகள் கிடைப்பதில் பிரச்சனை ஏற்படலாம். ஏனெனில் ஆங்காங்கே தொழிலாளர் சங்கங்கள் சார்பாக போராட்டங்கள் நடத்தப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு செல்வர்களுக்கு சற்றே பாதிப்பு ஏற்படலாம்.
ரயில்கள்: ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் . தொழிலாளர் யூனியன்கள் சார்பாக ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டம் நடைபெற்றால் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது .
பேருந்துகள் இயங்குமா?: தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு திமுகவின் தொழிற்சங்கமான தொமுச, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உட்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் அரசு பேருந்து ஓட்டுநர்களாக இருக்கிறார்கள் என்பதால் நாளைய தினம் அரசு பேருந்து போக்குவரத்தில் சற்று பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
இருந்தாலும் அதிமுக தொழிற்சங்கத்தினர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவிக்கவில்லை என்பதால் பேருந்துகள் இயக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த போராட்டம் காரணமாக எந்தவித பாதிப்பும் இல்லாமல் பேருந்துகள் வழக்கம்போல இயக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஆட்டோக்கள்: தொழிலாளர் யூனியன்களை சேர்ந்த பலரும் ஆட்டோ ஓட்டுநர்களாகவும் இருக்கின்றனர் . எனவே நாளைய தினம் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற இடங்களில் ஆட்டோக்கள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
கடைகள்: வணிகர் சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை. எனவே கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல செயல்படும் .
தபால் நிலையங்கள்: தபால் நிலைய ஊழியர்களுக்கான யூனியனும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது , எனவே நாளை தபால் நிலையம் சம்பந்தப்பட்ட சேவைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். அதே போல காப்பீடு அலுவலகங்களிலும் முழுமையான சேவை எதிர்பார்க்க முடியாது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications