ஜூன் 1 மாதத்தின் முதல் நாள் என்பதால் பல முக்கியமான மாற்றங்களும், விதிகளும் நடைமுறைக்கு வரும், அந்த வகையில் ஜூன் 1 ஆம் தேதி அனைத்து தரப்பு மக்களும் அதிகம் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயம் எரிபொருள் மற்றும் எரிவாயு விலை குறைப்பு தான்.
ஒவ்வொரு மாதமும் எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் மாற்றம் குறித்த அப்டேட்-ஐ மத்திய எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இருக்கும் அரசு எரிவாயு நிறுவனங்கள் அந்த மாத துவக்கத்தில், இறக்குமதி விலை மற்றும் இதர செலவுகளை கணக்கில் எல்பிஜி சிலிண்டர்களின் விற்பனை விலையை நிர்ணயம் செய்து வெளியிடும்.

இந்த வகையில் பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் ஜூன் மாத தொடக்கத்திலும் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலையை நிர்ணயம் செய்கின்றன. ஜூன் 01, 2023 முதல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் திருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு மே மாத துவக்கத்தில் வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களின் விலை 171.50 ரூபாய் குறைக்கப்பட்டது, இருப்பினும், வீட்டு சிலிண்டர்களின் விலை மாறாமல் இருந்தது சாமானிய மக்களுக்கு ஏமாற்றம் அளித்தது. இந்த நிலையில் ஜூன் 1 ஆம் தேதி புதிய விலையை நிர்ணயம் செய்து மத்திய அரசு நிறுவனங்கள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளையில் பொதுத்துறை பெட்ரோல் பங்க்குகளில் இருந்து வாடிக்கையாளர்களை ஈர்த்து பெரிய அளவில் வளர வேண்டும் என்ற திட்டத்துடன் தனியார் எரிபொருள் நிறுவனங்கள் அரசுக்கு சொந்தமான சில்லறை விற்பனையகங்களில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலையை காட்டிலும் குறைவான விலைக்கு விற்பனை செய்ய துவங்கியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் ஜியோ BP நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்ய புதிய டீசல் வகையை அரசு நிர்ணயம் செய்த விலையை காட்டிலும் 1 ரூபாய் குறைவாக விற்பனை செய்வதாக அறிவித்தது.
இதேபோல் ரஷ்ய எண்ணெய் நிறவனமான ராஸ்நெப்ட் நிறுவனத்தின் முதலீட்டில் இயங்கும் நயாரா எனர்ஜி ஒரு படிக்கு மேல் சென்று பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டையும் லிட்டருக்கு 1 ரூபாய் குறைவான விலைக்கு விற்பனை செய்யத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு நாளை பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. இதற்கு ஏற்றார் போல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் குறைந்துள்ளது, ஆனால் அரசு தனது வருமானத்தை இழக்க தயாராகி பெட்ரோல், டீசல் விலையை குறைக்குமா என்பது பெரிய கேள்வியாக உள்ளது.
More From GoodReturns

எச்சரிக்கை!! சிலிண்டர் முதல் மருந்து விலை வரை..!! ஏப்ரல் 1 முதல் இதெல்லாமே மாறப்போகுது..!!

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

சிலிண்டர் புக் பண்ணியும் வரலையா? இருக்கவே இருக்கு மினி எல்பிஜி!! அதுவும் 5 நிமிஷத்துல கிடைக்கும்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications