இந்திய ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கைக் குழுவின் (MPC) இரு நாள் கூட்டம் ஜூன் 5 முதல் 6 ஆம் தேதிகளில் நடைபெற்று ஜூன் 7 தேதி இக்கூட்டத்தின் முடிவுகளை ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் வெளியிட உள்ளார். இந்திய மக்கள் வட்டி விகித குறைப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில், இந்த கூட்டத்தில் சாதகமான அறிவிப்பு வருமா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது.
தற்போதைய சந்தை நிலவரங்களை ஒப்பிடுகையில், இந்தக் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதங்கள் மாற்றமின்றி அறிவிக்கப்படும் என சந்தை ஆய்வாளர்கள் தங்களது கணிப்பைத் தெரிவித்துள்ளனர். ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டம், லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நடைபெறும் முதல் நிதிக் கொள்கைக் கூட்டம் ஆகும்.

இதனால் இந்தியாவின் தற்போதைய வலுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் குறைந்து வரும் பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் குறைந்தபட்ச இலக்கான 4% ஐ விட சற்று அதிகமாக இருந்தாலும், 4-6 சதவீதம் என்ற அதன் வரம்புக்குள் இருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அடிப்படை வட்டி விகிதத்தை 6.5% ஆக உயர்த்த பிறகு, ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மாற்றாமல் இருந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் ஆர்பிஐ வட்டி விகிதத்தைக் குறைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது, சமீபத்தில் தான் ஆர்பிஐ மத்திய அரசுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் அளவிலான ஈவுத்தொகை கொடுத்தது. இந்த ஈவுத்தொகை கொடுத்த போது ஆர்பிஐ நாட்டின் பணவீக்கம் மற்றும் ரூபாய் மதிப்பு சரிவைத் தடுக்க தேவைப்படும் போதுமான நிதி ஆதாரம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஆனால் கடந்த நிதிக் கொள்கை அறிவிப்பிற்குப் பிறகு பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தக் கூட்டத்தில், பொருளாதார செயல்பாடுகளின் செயல்பாடு, பணவீக்கத்தின் போக்கு, பருவமழை, உள்நாட்டு வர்த்தக இண்டிகேட்டர்கள் மற்றும் சர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் மற்றும் உலகளாவிய நிகழ்வுகள் ஆகியவற்றை ரிசர்வ் வங்கி மதிப்பீடு செய்யும்.
இதனால் வட்டி விகிதம் குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என கருத்துக்கள் நிலவி வருகிறது. ஆர்பிஐ இந்த முறையிலும் வட்டி விகிதத்தை குறைக்கவில்லை எனில் 8வது முறையாக ரெப்போ விகிதம் மாற்றமில்லாமல் ஆர்பிஐ தனது நாணய கொள்கை முடிவுகளை வெளியிடும்.
அமெரிக்கப் பணவீக்கம் (USA Inflation): அமெரிக்காவில் பணவீக்கம் குறைந்து வருவதால், செப்டம்பரில் அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நவம்பர் மாதம் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் வாய்ப்பு சுமார் 54% இருப்பதாக CME FedWatch Tool தற்போது கணித்துள்ளது.
மேலும், அமெரிக்கச் சில்லறை விற்பனையாளர்களின் விலை குறைப்புகள் மற்றும் நுகர்வோர் செலவுகளில் மந்தநிலை ஆகியவற்றின் புதிய தரவுகள், பணவீக்கம் குறைவது குறித்த அமெரிக்க மத்திய வங்கியின் நம்பிக்கையை அதிகரிக்கலாம், இதனால் பணவீக்கம் குறைய வாய்ப்புகள் உள்ளது என்று ராய்ட்டர்ஸ் தனது கணிப்புகளை வெளியிட்டு உள்ளது.
ஐரோப்பிய மத்திய வங்கி (European Central Bank): இந்த வாரம் வியாழக்கிழமை அன்று நடைபெறும் ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) வட்டி விகித முடிவை முதலீட்டாளர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். இந்த கூட்டத்தில் ஐரோப்பிய மத்திய வங்கி தனது வட்டி விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று ராய்ட்டர்ஸ் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
இந்திய ஜிடிபி (India GDP): இந்தியாவின் பொருளாதார செயல்பாடு தொடர்ந்து வலுவாக இருப்பதைக் காட்டுகிறது. இந்த நிலையில் ஐரோப்பிய மத்திய வங்கியின் முடிவை வைத்து இந்திய ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தைக் குறைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications