ஜூன் காலாண்டு GDP வீழ்ச்சி முழுமையான சேதத்தினை அறிவிக்கவில்லை..அப்படின்னா முழுமையான சேதம் எவ்வளவு?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த ஆகஸ்ட் 31 அன்று வெளியான ஜிடிபி விகிதமானது 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளதாக பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

மிக கவலைக்குள்ளான ஒரு விஷயமுமாக பார்க்கப்படுகிறது. இதுவே 40 வருடங்களில் இல்லாத அளவா? அதுவும் ஜி20 நாடுகளிலேயே மிக மோசமான பாதிப்பா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளன.

ஆனால் இந்த விகிதம் உண்மையான விகிதம் அல்ல. ஏனெனில் இன்னும் ஜிடிபி விகிதத்தினை கணக்கிடும் முழுமையான தரவுகள் கணக்கிடப்படவில்லை. அதனையும் கணக்கிட்டால் இன்னும் ஜிடிபி விகிதம் இன்னும் மோசமானதாக இருக்கும் என்கிறார் இந்தியாவின் முன்னாள் தலைமை புள்ளிவிவர நிபுணர் ப்ரோனாப் சென்.

இன்னும் மோசமாகக் கூடும்

இன்னும் மோசமாகக் கூடும்

ஏனெனில் இந்த தரவில் லாக்டவுன் சமயத்தில் பாதிக்கப்பட்ட பெரும் நிறுவனங்களின் தரவுகளை மட்டும் கொண்டுள்ளது. சிறிய நிறுவனங்கள் பட்டியலிடப்படவில்லை என்கிறார் சென். உண்மையில் இந்தியாவின் ஜிடிபியில் கணிசமான பங்கினை கொண்ட இந்த சிறு நிறுவனங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், நிச்சயம் ஜிடிபி விகிதம் இன்னும் மோசமாக வீழ்ச்சி காணக்கூடும்.

சிறிய நிறுவனங்கள் தான் மோசமாக பாதிப்பு

சிறிய நிறுவனங்கள் தான் மோசமாக பாதிப்பு

கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் தரவு வரும். அது பட்டியிலிடப்பாத அனைத்து பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களையும் கொண்டு இருக்கும். அதில் தற்போது லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ள பெரிய நிறுவனங்களை விட, லிஸ்டில் சேர்க்கப்படாத சிறிய நிறுவனங்கள் மோசமான பாதிக்கப்பட்டு இருக்கும் என சென் கூறுகிறார். அதோடு முறைசாரா துறையும் இதில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

 இன்னும் லாக்டவுன் எதிரொலி நீடிக்கும்

இன்னும் லாக்டவுன் எதிரொலி நீடிக்கும்

முதல் காலாண்டில் ஜிடிபி விகிதமானது இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட சேதத்தினை எந்த அளவுக்கு பிரதிபலித்தது என்பது குறித்து சென் கூறுகையில், கியூஐ தரவு பூட்டப்பட்டதன் விளைவை மட்டுமே பிரதிபலிப்பதால் இது முதல் படி மட்டுமே. இது உண்மையில் என்ன நடந்தது என்பதற்கான அறிகுறியை வழங்கவில்லை. லாக்டவுனுக்கான விளைவுகள் இன்னும் சிறிது காலம் நீடிக்கும் என்று மணிகன்ட்ரோலுக்கு அளித்த பேட்டியில் சென் தெரிவித்துள்ளார்.

தாக்கம் இன்னும் அதிகரிக்கும்

தாக்கம் இன்னும் அதிகரிக்கும்

இது இப்போது தொடங்கி இன்னும் ஒரு வருடம் அல்லது ஒன்றரை வருடம் கூட தொடரக்கூடும். எனவே பொருளாதாரம் எதிர்கொண்ட ஆரம்ப அறிகுறி என்று சென் கூறியுள்ளார். விவசாயம் தவிர, மற்ற முறைச்சாரா துறைகளில் தரவுகள் இல்லை என்றும் கூறியுள்ளார். ஆக முதல் காலாண்டு அறிக்கையானது கார்ப்பரேட் டேட்டாக்களை பெரும்பான்மையாக கொண்டது. அதுவும் கூட இது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது.

இன்னும் இதெல்லாம் சேர்க்கணும்

இன்னும் இதெல்லாம் சேர்க்கணும்

ஏனெனில் லாக்டவுன் காரணமாக சில நிறுவனங்கள் இன்னும் அறிக்கைகளை சமர்பிக்கவில்லை. லாக்டவுன் காரணமாக செபியும் இதற்கான கால அவகாசத்தினை நீட்டித்துள்ளது. ஆக நிறுவனங்கள் மீண்டும் பதிவு செய்யும் போது, தற்போது கிடைத்துள்ள தரவுகளுக்கு பதிலாக, அனைத்து நிறுவனங்களின் தரவுகளும் கிடைக்கும். இதில் முறைசாரா தொழில் துறையும், சிறிய நிறுவனங்களின் தரவுகளும் இதில் சேரும் என்றும் சென் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

June quarter GDP data does not fully convey the damage of the lockdown

India’s former chief statistician of india pronab sen said, june quarter GDP data does not the damage of the lockdown
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X