ஜூபல்லி ராமேஷ்வர் ராவ் 1955 ஆம் ஆண்டு ஆந்திராவில் ஒரு நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்தார். ராமேஷ்வர் தனது இளம் வயதிலேயே தந்தையை இழந்த காரணத்தால் குழந்தைப் பருவம் முழுவதும் பல்வேறு கஷ்டங்களையும், சுமைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தன்னை விழிக்காட்ட யாரும் இல்லாததால் வாழ்வின் ஒவ்வொரு படியிலும் பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டார் ராவ்.
இதை தாண்டி ராவ் தொடர்ந்து படிப்பை நிறுத்தாமல் பள்ளிக்கு மைல்கள் நடந்து செல்ல வேண்டி இருந்தும் தொடர்ந்து படிப்பில் அதிகப்படியான ஈடுபாடு உடன் நன்றாக படித்து வந்தார் ஜூபல்லி ராமேஷ்வர் ராவ். இந்த நிலையில் வெற்றிகரமான பள்ளி படிப்பை முடித்து ஹோமியோபதி படிப்பதற்காக, ராமேஷ்வர் 1974 ஆம் ஆண்டில் தனது சிறிய கிராமத்தை விட்டு ஹைதராபாத்-க்கு இடம்பெயர்ந்தார்.

கல்லூரி படிப்பையும் வெற்றிகரமாக முடித்து ராமேஷ்வர் தான் படித்த ஹைதராபாத் நகரின் முக்கிய பகுதியாக இருந்த தில்சுக் நகரில் தனது முதல் ஹோமியோபதி கிளினிக்-ஐ திறந்தார். தந்தையை சிறுவதிலேயே இழந்த காரணத்தால் எப்படியாவது வாழ்வில் முன்னேற வேண்டிய எண்ணம் அதிகமாக இருந்தது.
ராமேஸ்வர் ராவ்-ன் எண்ணம் போலவே அவர் நடத்தி வந்த ஹோமியோபதி கிளினிக் செழித்து விளங்கியது. ஆனால் ராமேஸ்வர் தொடர்ந்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன் தனது இலக்கை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே இருந்தார். இதனால் ராமேஸ்வர் தொழிலை தொடங்கவும் தயாராக இருந்தார்.
இப்போது அது மருத்துவமனைக்கு அதிகப்படியான ரியல் எஸ்டேட் முகவர்கள் வருவதை கண்டு அவர்களிடம் இருந்தே ரியல் எஸ்டேட் தொழில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை அவர் கற்றுக்கொண்டார். இப்போது தான் ரியல் எஸ்டேட் துறையில் இறங்குவதற்கான எண்ணம் அவருக்கு உருவானது.
ராமேஸ்வர் தனது ரியல் எஸ்டேட் துறையில் இறங்கிய புதியதில் சில காலி நிலங்களை விற்று பணம் சம்பாதித்தார். அடுத்தக்கட்டம் செல்ல முடிவு செய்து ஹயத் நகர் என்னும் பகுதியில் சுமார் 50,000 ரூபாய் செலவழித்த நிலத்தை சரி செய்து, பின்னர் அதை திறந்தவெளி நிலங்களாக விற்றார் அது அவருக்கு பெரிய பணத்தையும், ரியல் எஸ்டேட் மீது நம்பிக்கையும் அதிகரித்தது.
இதை தொடர்ந்து 1985 ஆம் ஆண்டில் ராமேஸ்வர்-க்கு அடுக்குமாடி குடியிருப்புகள் அதாவது அப்பார்ட்மென்ட் கட்டும் வாய்ப்பு கிடைத்தது, இங்கு தான் ஜூபல்லி ராமேஷ்வர் ராவ்-ன் உண்மையான ரியல் எஸ்டேட் பயணம் துவங்கியது, திருப்புமுனையாகவும் அமைந்தது.
ராமேஷ்வர் 1980 களில் ஹைதராபாத்தில் மை ஹோம் குரூப் (MY HOME GROUP) நிறுவினார் மற்றும் ரியல் எஸ்டேட், சிமெண்ட் மற்றும் எரிசக்தி தொழில்களில் பணியாற்றத் தொடங்கினார். சரியான நேரத்தில் அவர் எடுத்த சரியான முடிவு அவருக்கு பெரிய அளவில் பலன் அளித்தது,
ராவ் அடுத்த ஆண்டுகளில் மை ஹோம் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட்டின் ஒரு பிரிவாக மஹா சிமென்ட் நிறுவனத்தை நிறுவினார். இந்தியாவில் அந்த காலக்கட்டத்தில் கட்டுமான துறை வேகமான வளர்ச்சி பாதையில் இருந்தது. இதை பணமாக்க முடிவு செய்து 50% மஹா சிமென்ட் பங்குகளை வைத்து 1429 கோடி ரூபாய்க்கு ஐரிஷ் நிறுவனமான CRH plc-க்கு விற்பனை செய்தார்.
இதில் 1,400 கோடி ரூபாய்க்கு ஸ்ரீராம் இபிசி நிறுவனத்திடமிருந்து 3.2 மில்லியன் டன் சிமென்ட் உற்பத்தி வசதி கொண்ட ஸ்ரீ ஜெயஜோதி சிமெண்ட்ஸ் என்னும் நிறுவனத்தை வாங்கினார். இன்று, மஹா சிமென்ட் தென்னிந்தியாவின் மிகப்பெரிய சிமென்ட் நிறுவனங்களில் ஒன்றாகும்.
ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் விற்றுமுதல், ஆந்திராவின் சிமெண்ட் வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க வர்த்தகம் என சிறு வயதில் தந்தையை இழந்து ஹோமியோபதி மருத்துவராக துவங்கி ரியல் எஸ்டேட்-ல் நுழைந்து இன்று சிமெண்ட் தொழிலதிபராக உள்ளார் ஜூபல்லி ராமேஷ்வர் ராவ். இன்று இவருடைய சொத்து மதிப்பு 1.3 பில்லியன் டாலர், கிட்டத்தட்ட 11,000 கோடி ரூபாய்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications