3 வருஷம் அனுபவம் போதும்.. வருஷம் ரூ.20 லட்சம் சம்பளம் கிடைக்கும்.. இன்பத் தகவல்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: டிஜிட்டல் அறிவுக்கான தேவை எல்லா காலத்திலும் அதிகமாக உள்ளது. அதிலும், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு, டேட்டா அறிவியல் மற்றும் மெஷின் கற்றல் போன்றவற்றில் திறமை கொண்ட ஊழியர்களுக்கான தேவை இப்போது மிக அதிகரித்து வருகிறது.

இதுபோன்ற தொழில்நுட்ப வல்லுநர்களை வேலைக்கு அமர்த்த போட்டி நிலவுகிறது. அவர்களின் ஊதியத்தில் குறிப்பிடத்தக்க உயர்வுக்கு வழிவகுத்து வருகிறது.

"டேட்டா சயின்ஸ் துறையில் உயர்ந்த இடத்திற்கு வருவதற்கு, நீங்கள் 10 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதில்லை. மூன்று வருட அனுபவம் உள்ளவர்களுக்கு, இந்த நிறுவனங்கள் ஆண்டுக்கு சராசரியாக 20 லட்சம் ஊதியமாக தர தயாராக உள்ளன, " என்று சொல்கிறார், உலகளாவிய டேட்டா அறிவியல் சமூகமான பிட்கிரிட் ஜப்பானின் இயக்குனர் ஆஷிஷ் மல்ஹோத்ரா.

ஊதிய டிரெண்ட்ஸ்

ஊதிய டிரெண்ட்ஸ்

ராண்ட்ஸ்டாட் இன்சைட்ஸ் நிறுவனம் சம்பள டிரெண்ட்ஸ் குறித்து வெளியிட்ட 2019ம் ஆண்டின் அறிக்கை அடிப்படையில் பார்த்தால், தகவல் தொழில்நுட்பத் துறை (ஐடி) சிறந்த ஊதியம் பெறும் துறையாகும். அவர்களின் பணியாளர் சம்பளம் ஆண்டுக்கு ₹ 4 லட்சம் முதல் 35 லட்சம் வரை இருக்கிறது.
"டிஜிட்டல் திறன்களைக் கொண்ட நிபுணர்களுக்கான தேவை - கிளவுட், தயாரிப்பு மேலாண்மை, பகுப்பாய்வு, AI மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவை-, இந்த ஆண்டு இந்தத் துறையின் வலுவான முன்னெடுப்புக்கு முக்கிய காரணிகளாக இருக்கலாம்" என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

டேட்டா அறிவியல் வல்லுநர்கள்

டேட்டா அறிவியல் வல்லுநர்கள்

டேட்டா வல்லுநர்கள் என்று அழைக்கப்படுவோர், இந்த துறையில் உள்ள உள் விவரங்களை வரையவும், நிகழ்கால சிக்கல்களுக்கான தீர்வுகளைப் பெறவும் நுட்பங்களையும், கருவிகளையும் பின்பற்றுகிறார்கள். டேட்டா செயலாக்கம், புள்ளிவிவர மாடலிங், பேட்டர்ன் அங்கீகாரம் மற்றும் டேட்டா காட்சிப்படுத்தல் ஆகியவை இதில் அடங்கும். கணிதமும் பகுப்பாய்வு மனநிலையும் டேட்டா அறிவியலாளர்களுக்கு அவசியம். லிங்க்ட்இன், கணிப்பு படி, இத்துறை வல்லுநர்களை கொண்ட, முதல் மூன்று நாடுகளில் இந்தியா உள்ளது.

நல்ல வளர்ச்சி

நல்ல வளர்ச்சி

டேட்டா அறிவியல் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 37% வளர்ச்சியைக் கண்டுள்ளன. சுகாதாரம், வங்கி மற்றும் நிதி சேவைகள், காப்பீடு, சில்லறை விற்பனை மற்றும் தொலைத் தொடர்பு போன்ற வழக்கமான துறைகளில் பணியிடங்கள் காத்திருக்கின்றன.

டேட்டா அறிவியலின் எதிர்காலம்

டேட்டா அறிவியலின் எதிர்காலம்

பெரிய அளவிலான டேட்டா கட்டமைக்கப்படாதது, ஆனால் சிஸ்டத்தின், செயல்திறனை மேம்படுத்துவதற்கான மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்தியாவில், டேட்டா அறிவியல் சந்தை 11 பில்லியன் டாலராக உள்ளது - இது 2025 ஆம் ஆண்டில் 326 பில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேவை அதிகம்

தேவை அதிகம்

இந்தியா எவ்வளவு தூரம், தானியங்கி தொழில்நுட்பத்தை நோக்கி நகர்கிறதோ, அவ்வளவு தூரம், டேட்டா அறிவியலாளர்களுக்கு எதிர்காலம் உள்ளது.
அதிக வல்லுநர்கள் தேவைப்படுவார்கள். லிங்க்ட்இன் படி, உலகளவில் டேட்டா விஞ்ஞானிகளில், இந்தியாவில், 10%க்கும் குறைவாகவே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தேவை அதிகரிப்பதை விளக்குகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Just 3 years experience is enough can earn ₹20 lacs per annum

Firms are willing to pay nearly RS 20 lacs per annum for employees with three years of experience.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X