ஆணாதிக்கம் நிறைந்த இந்த உலகில் பெண்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள பல்வேறு முட்டுக்கட்டைகளைத் தகர்த்து ஏறியவேண்டியுள்ளது.
அப்படி இந்த சிரமங்களையெல்லாம் முட்டிமோதி தகர்த்து ஜோதி ரெட்டி என்ற பெண்மணி ஒரு பில்லியன் டாலர் சாப்ட்வேர் கம்பெனியின் சிஇஓ-வாக உருவாகியுள்ளார்.
ஜோதி ரெட்டியின் தந்தை ஒரு தினக்கூலி. அவருக்கு 5 பிள்ளைகள், பிள்ளைகளை வளர்க்க வசதியில்லாததால் ஜோதியை ஒரு அநாதை ஆசிரமத்தில் சேர்த்து விட்டுவிட்டார். அங்கு தங்கி ஒரு அரசுப்பள்ளியில் ஜோதி படித்தார்.

அவருக்கு 16 வயது இருக்கும்போது கட்டாயப்படுத்தப்பட்டு திருமணம் செய்து வைக்கப்பட்டார். 18 வயது இருக்கும்போது அவரது கையில் இரண்டு குழந்தைகள். வறுமை காரணமாக தினசரி 5 ரூபாய் கூலிக்காக விவசாய வேலையில் ஈடுபட்டார்.
இந்தச் சமயத்தில்தான் ஜோதிக்கு அதிர்ஷ்டவசமாக மத்திய அரசு திட்டத்தின் கீழ் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஒரு வேலை கிடைத்தது. இதில் சொற்ப சம்பளமே கிடைத்ததால் இரவு நேரத்தில் தையல் வேலை செய்து குடும்பத்தைக் கவனித்துக் கொண்டார்.
ஒருபக்கம் குடும்பச் சுமை மறுபக்கம் சமூக அழுத்தங்கள். இருந்தாலும் ஜோதி மனம் தளராமல் டாக்டர் பிஆர் அம்பேத்கர் ஓபன் யுனிவர்சிட்டியில் 1994 ஆம் ஆண்டில் பி.ஏ. பட்டம் முடித்தார். 1997இல் காகாத்திய யுனிவர்சிட்டியில் மாஸ்டர் டிகிரியைப் பெற்றார். இந்தப்பட்டங்கள் மூலம் அவரது சம்பாத்தியம் மாதம் ரூ.398ஆக உயர்ந்தது. இருப்பினும் குடும்பத்துக்கு அது போதவில்லை.
அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த மற்றொரு திருப்புமுனை அமெரிக்காவில் இருந்து வந்த அவரது உறவினர் ஒருவர் மூலம் அமைந்தது. அமெரிக்காவில் ஏராளமான வேலைவாய்ப்பு இருப்பதை தெரிந்து கொண்டார். இதன் பின்னர் ஜோதி கம்ப்யூட்டர் கோர்ஸ்களை படித்து முடித்தார். வேலை பார்ப்பதற்கான தகுதி வந்துவிட்டது என்பதை அறிந்து கொண்டதும் அமெரிக்காவுக்குக் கிளம்பிச் சென்றார்.
'அமெரிக்காவில் இருந்து அம்மா நிறைய சம்பாதித்து அனுப்புகிறேன். கவலைப்படாதீர்கள் பிள்ளைகளா' என்று சொல்லிவிட்டு கண்ணீர் மல்க டாடா சொல்லிவிட்டுத்தான் புறப்பட்டார். அமெரிக்காவிலும் ஜோதிக்கு நிறைய சகடைகள் காத்திருந்தன. முதலில் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்தார். பின்னர் ஆயா வேலை. இப்படி சிறுசிறு வேலைகள்தான் கிடைத்தது. முதன்முதலாக அவருக்குக் கிடைத்த கௌரவமான வேலை என்றால் அது வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யும் 'ரெக்ரூட்மென்ட் புரொபஷனல்' பணி.
2021இல் 40,000 டாலர்கள் சேமித்து வைத்திருந்த நிலையில் தனக்கென்று ஒரு சொந்த பிசினஸை 'Key Software Solutions' என்ற பெயரில் ஜோதி தொடங்கினார். மெல்ல மெல்ல அவரது கம்பெனி வளர்ச்சியடைந்து ஆண்டுக்கு 15 மில்லியன் டர்ன்ஓவர் செய்தது.
ஒருகட்டத்தில் 2017ஆம் ஆண்டில் அவரது கம்பெனி ஒரு பில்லியன் டாலர் மதிப்புக்கு உயர்ந்தது. சாதிக்க வயது மட்டுமல்லாமல் பாலினமும் ஒரு தடையல்ல என்ற நிரூபித்த ஜோதி ரெட்டி இன்றைக்கு பல பெண்களுக்கு கலங்கரை விளக்கமாக உள்ளார்.


Click it and Unblock the Notifications