இணையம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களால் ஏற்படும் சமூக மாற்றங்கள் குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், டிஜிட்டல் பிளவை குறைக்கவும் மே 17 உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினமாக அனுசரிக்கப்படுகிறது. உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினத்தை முன்னிட்டு மத்திய பிரதேசம் குவாலியரில் ஒரு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
புரட்சி
அந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: உலகம் முழுவதும் தொலைத்தொடர்பு புரட்சி வேகமாக விரிவடைந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா இந்த இயக்கத்தில் முன்னணியில் உள்ளது. 5ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெறும் 22 மாதங்களில் 99 சதவீத மாவட்டங்களில் 82 சதவீத மக்களை தகவல் புரட்சி அடைந்துள்ளது.

எதிர்வரும் 6ஜி தொழில்நுட்ப விதிமுறைகளை வடிவமைப்பதில் இந்தியா முன்னணியில் இருக்கும். அஞ்சல் துறையில் புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய அஞ்சல் துறை உலகின் மிகப்பெரிய சரக்கு போக்குவரத்து மற்றும் விநியோக வலையமைப்புகளில் ஒன்றாகும். நம் நாட்டில் 1.64 லட்சம் தபால் நிலையங்கள் உள்ளன. 2.5 லட்சம் தபால் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
அஞ்சல் சேவை
2008ல் அஞ்சல் சேவை என்பது பொது சேவை என்ற முழக்கத்துடன் அஞ்சல் துறைக்கான லோகோவை நான் வடிவமைத்தேன். ஒவ்வொரு அஞ்சல் ஊழியரும் இந்த உணர்வோடு செயல்படுகிறார்கள். இந்தியா தொடர்ந்து தொலைத்தொடர்பு புரட்சியை வழிநடத்தும்.
துருக்கி மற்றும் அஜர்பைஜான் பொருட்கள் மற்றும் பயணங்களை புறக்கணிப்பது என்பது நாட்டின் மக்களால் எடுக்கப்பட்ட ஒரு உணர்ச்சிபூர்வமான முடிவு. குடிமக்கள் தாமாக முன்வந்து இந்த முடிவை எடுத்துள்ளனர். இது மக்களின் விருப்பம். தேசமே முதலில், தேசிய நலன் மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் எந்த குடிமகனும் சமரசம் செய்ய மாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூரின் போது, பாகிஸ்தானை துருக்கியும், அஜர்பைஜானும் ஆதரித்தன. இதனையடுத்து இந்த இரு நாடுகளையும் இந்திய மக்கள் புறக்கணிக்க தொடங்கினர். இந்தியாவை தாக்க துருக்கியின் டிரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் முதல் பதவி காலத்தில், ஜோதிராத்திய சிந்தியா மத்திய தகவல் தொடர்புத் துறை இணையமைச்சராக இருந்தவர். தீவிர காங்கிரஸ்காரராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் கட்சியின் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2020ல் அந்த கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். மத்திய பிரதேசத்தில் சிந்தியா குடும்பத்துக்கென தனி செல்வாக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications