அரசியல் கட்சிய விடுங்க..!! இது நம்ம இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை படத்துல நடிச்சிருக்காரு தெரியுமா?

தமிழ்நாட்டில் பாஜகவின் அடையாளமாக திகழ்ந்து வந்த அண்ணாமலை பாஜகவில் இருந்து தனி கட்சியை தொடங்கியுள்ளார். 'மாறுவோம், மாற்றுவோம்' என்ற முழக்கத்தை முன்வைத்து, பாஜக மாநில முன்னாள் தலைவரும், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியுமான அண்ணாமலை ஒரு புதிய இயக்கத்தை தொடங்கியுளார்.

அண்ணாமலை தொடங்கியுள்ள 'இது நம்ம இயக்கம்' தமிழ்நாட்டில் டிரெண்டிங்காக பேசப்படும் ஒரு விஷயமாக இருக்கிறது. ஒரே நாளில் இந்த இயக்கத்தில் 12 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தன்னார்வலர்களாக பதிவு செய்துள்ளனர். விரைவில் இது நம்ம இயக்கம், அரசியல் கட்சியாக மாற உள்ளது.அதற்கான அறிவிப்பை, செப்டம்பர் 14ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு உள்ளார்.

அரசியல் கட்சிய விடுங்க..!! இது நம்ம இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை படத்துல நடிச்சிருக்காரு தெரியுமா?

தமிழகத்தில் அடுத்து நடக்கக்கூடிய பொதுத்தேர்தலில் நம் கட்சி போட்டியிடும்; அதில், எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, அதற்கு நம்மை தயார்படுத்த வேண்டும்; நிறைய தலைவர்களை தயார்படுத்த வேண்டும். நிறைய தொண்டர்களை, தன்னார்வலர்களை தயார்படுத்த வேண்டும்; உத்வேகத்துடன் தயார்படுத்த வேண்டும் என அண்ணாமலை பேசியுள்ளார். அரசியல் என்பது ஒரு குடும்பத்திற்கு மட்டுமல்ல; தொடர்ந்து நாம் மட்டும் இருப்போம் என்பது இல்லை. நம் இயக்கம் கட்சியாக மாறும் போது, நிரந்தர தலைவர்கள், நிரந்தர எம்.எல்.ஏ.,க்கள், நிரந்தர அமைச்சர்கள், நிரந்தர எம்.பி.,க்கள் என்பதை நாம் உடைக்கப் போகிறோம் என்றார்.

Also Read

கோவையில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரில் ஒரு மையத்தை ஆரம்பித்து, அதில் பயிற்சி அளிக்க உள்ளோம். சரியான பயிற்சி பெற்றவர்கள், உள்ளாட்சி, சட்டசபை தேர்தலில் நிறுத்தப்படுவர். ஒரு சமூகத்தின் தேவையை அறிந்து அரசியல் செய்யக்கூடிய மனிதர்களாக கொண்டு வரப்படுவர். நாம் யாருக்கும் போட்டி கிடையாது. நம் இயக்கத்தின் கொள்கையே, 'மாறுவோம், மாற்றுவோம்' என்பது தான் என கூறினார்.

அரசியல் கட்சிய விடுங்க..!! இது நம்ம இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை படத்துல நடிச்சிருக்காரு தெரியுமா?

அண்ணாமலையின் இந்த அறிவிப்பை அடுத்து திரளான மக்கள் இந்த இயக்கத்தில் முன்பதிவு செய்து வருகின்றனர். ஒரே நாளில் 12 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்த இயக்கத்தில் தங்களை இணைத்து கொண்டு தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். பாஜகவில் இருந்து விலகியது மற்றும் தனி இயக்கத்தை உருவாக்கியதன் மூலம் மீண்டும் தேசிய அளவிலும் தமிழ்நாடு அளவிலும் செய்திகளில் தலைப்புச் செய்தியாக மாறி இருக்கிறார் அண்ணாமலை.

Recommended For You

ஐபிஎஸ் அதிகாரியாக கர்நாடகாவில் வேலை செய்தபோது கர்நாடக சிங்கம் என அறியப்பட்டார். ஐபிஎஸ் அதிகாரி ஆகவும் அரசியல் பிரமுகராகவும் நமக்கு தெரிந்த அண்ணாமலைக்கு நடிகராகவும் ஒரு முகம் இருக்கிறது. அண்ணாமலையின் இத்தனை ஆண்டு கால வாழ்க்கையில் சில காலம் அவர் நடிகராகவும் தோன்றியிருக்கிறார். கன்னட திரை உலகில் ஒரு திரைப்படத்தின் அவர் நடித்திருக்கிறார். அவர் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடக்கூடிய இந்த காலகட்டத்தில் அவர் திரைப்படத்தின் நடித்தது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் பரவலாக பேசி வருகிறது.

You May Also Like

கன்னட மொழியில் அரபி என்ற ஒரு திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் அண்ணாமலை ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்தார். பாரா ஒலிம்பிக் நீச்சல் வீரரான விஸ்வாஸ் கே எஸ் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் தான் அரபி. ராஜ்குமார் இயக்கிய இந்த திரைப்படத்திற்கு நீச்சல் பயிற்சி வழங்கக்கூடிய பயிற்சியாளராக அண்ணாமலை நடித்தார். இந்த படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் வெறும் ஒரு ரூபாய் தான்.

இரண்டு கைகளை இழந்து தந்தையும் இழந்த ஒரு மாற்றுத்திறனாளி வீரர் நீச்சல் வீரராக சாதிக்கும் படத்தின் கதை தான் இது. இதில் அந்த வீரருக்கு நீச்சல் பயிற்சி தந்து சாதனைக்கு தயார்ப்படுத்தும் கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை அண்ணாமலை வெளிப்படுத்தி இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+