பிரபல கிரிக்கெட் வீரரான கே.எல்.ராகுல் மற்றும் அவருடைய மாமனாரான பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி ஆகியோர் இணைந்து மும்பைக்கு அருகில் உள்ள தானே வெஸ்டில் இருக்கும் ஓவாலே பகுதியில் 7 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளனர். இதன் விலையை கேட்டால்தான் தலை சுற்றும். ஏனெனில் ரூ. 9.85 கோடி கொடுத்து இந்த இடத்தை வாங்கியுள்ளனர் என்று ஸ்கொயர் யார்ட்ஸ் நிறுவனத்தின் சொத்துப் பதிவு ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
சொத்துப் பதிவு ஆவணங்களின்படி கே.எல்.ராகுல் மற்றும் அவருடைய மாமனார் சுனில் ஷெட்டி ஆகியோர் இந்த நிலத்தை சேர்ந்து தான் வாங்கியுள்ளனர். அதாவது இந்த மொத்த இடமும் இன்னும் பிரிக்கப்படவில்லை. எதிர்காலத்தில் அவர்கள் அந்த நிலத்தை பிரித்துக் கொள்ளலாம் அல்லது கூட்டாகவே பயன்படுத்தலாம்.

இந்த 7 ஏக்கர் நிலம் 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு பெரிய இடத்தின் ஒரு பகுதியாகும். அதோடு சொத்து வாங்கும் போது அரசாங்கத்துக்கு செலுத்தப்படும் ஸ்டாம்ப் டியூட்டியையும் இருவரும் சேர்ந்து செலுத்தியுள்ளனர். இந்த 7 ஏக்கர் நிலத்திற்காக ரூ. 68.96 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது. அவர்கள் வாங்கிய சொத்தின் சந்தை மதிப்பு மற்றும் பரிவர்த்தனை மதிப்பின் அடிப்படையில் தான் இந்த வரி விதிக்கப்படும். ஸ்டாம்ப் டியூட்டி என்பது வெவ்வேறு மாநிலங்களிலும் வெவ்வேறு மாதிரியாக இருக்கும்.
இந்த பரிவர்த்தனை 2025-ஆம் ஆண்டின், மார்ச் 20-ஆம் தேதி அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையையும், தானேவையும் இணைக்கும் முக்கிய பாதைகளில் ஒன்றான கோட்பந்தர் சாலையில் தான் ஓவாலே அமைந்துள்ளது. கே.எல் ராகுலின் மனைவி தான் அதியா சுனில் ஷெட்டி. இவர் சுனில் ஷெட்டியின் மகள் ஆவார்.
மும்பையின் பாந்த்ராவில் உள்ள பாலி ஹில் பகுதியில் 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ரூ.20 கோடிக்கு அடுக்குமாடி குடியிருப்பை இந்த தம்பதியினர் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல்களின்படி 3,350 சதுர அடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு, பாந்த்ராவின் பாலி ஹில் பகுதியில் உள்ள சாந்து அரண்மனை கட்டிடத்தின் 2-வது மாடியில் அமைந்துள்ளது.
கே.எல்.ராகுல் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் ஒரு முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார். அவர் இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல சாதனைகளை முறியடித்துள்ளார். ராகுல் தனது ஐபிஎல் கரியரில் ராயல் சேலஞ்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.


Click it and Unblock the Notifications