தமிழ்நாட்டை போல, கர்நாடக அரசின் குட்நியூஸ்.. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை..!

இந்தியாவில் 4 நாட்களாக பெட்ரோல், டீசல் உயர்ந்து வந்த நிலையில் இன்று எவ்விதமான மாற்றத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்காத காரணத்தால் மக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.

மேலும் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், தங்கம், விலை மூலம் நாட்டின் மொத்த வர்த்தக பற்றாக்குறையின் அளவீடுகள் பெருமளவில் பாதித்துள்ளது. இந்த வேளையில் மத்திய அரசும் இந்த பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தமிழ்நாடு - ஸ்டாலின்

தமிழ்நாடு - ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை மூலம் மக்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளைக் குறைக்க பெட்ரோல் விலை குறைப்பு என்பது தேர்தல் வாக்குறுதியில் முக்கியமான ஒன்றாக இருந்தது. இதன் மூலம் தமிழக அரசு விதிக்கும் மதிப்புக் கூட்டு வரியைக் குறைத்தது பெட்ரோல் விலை குறைக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகா - பசவராஜ் பொம்மை

கர்நாடகா - பசவராஜ் பொம்மை

இதேபோல் தற்போது தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் இடைத்தேர்தல் முடிந்த பின்பு மாநிலத்தின் பொருளாதாரம், நிதிநிலையை ஆய்வு செய்த பின்னர் வரி குறைப்பின் மூலம் பெட்ரோல் விலையை குறைக்க முடிவு எடுக்கப்படும் என கார்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

அக்டோபர் மாதம்

அக்டோபர் மாதம்

அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை சுமார் 13 முறை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சாமானிய மக்கள் வாங்கும் அனைத்து முக்கிய நுகர்வோர் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.

நுகர்வோர் பொருட்கள்

நுகர்வோர் பொருட்கள்

காய்கறி முதல் உணவு பொருட்கள் வரையில் பெரு நகரங்களில் விலைவாசி அதிகரித்துள்ளது. இதேதொடர்ந்து பல தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை அதிகரிக்கவும் ஆலோசனை செய்து வருகிறது. இதேவேளையில் சமையல் எரிவாயு விலையும் அதிகரித்துள்ளதால் மக்கள் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

இன்றைய பெட்ரோல் விலை (Oct 18)

இன்றைய பெட்ரோல் விலை (Oct 18)

சென்னை - 103.01 ரூபாய், டெல்லி - 105.84 ரூபாய், கொல்கத்தா - 106.43 ரூபாய், மும்பை - 111.77 ரூபாய், பெங்களூர் - 109.53 ரூபாய், ஹைதராபாத் - 110.09 ரூபாய், கோழிக்கோடு - 106.31 ரூபாய், போபால் - 114.45 ரூபாய், இந்தூர்- 114.49 ரூபாய்.

இன்றைய டீசல் விலை (Oct 18)

இன்றைய டீசல் விலை (Oct 18)

சென்னை - 98.92 ரூபாய், டெல்லி - 94.57 ரூபாய், கொல்கத்தா - 97.68 ரூபாய், மும்பை - 102.52 ரூபாய், பெங்களூர் - 100.37 ரூபாய், ஹைதராபாத் - 103.18 ரூபாய், கோழிக்கோடு - 100.03 ரூபாய்.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

திங்கட்கிழமை சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தக சந்தையில் ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை 1.49 சதவீதம் அதிகரித்து 83.51 டாலராக உயர்ந்துள்ளது, இதேபோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.08 சதவீதம் அதிகரித்து 85.78 டாலராக இதன் விலை உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டை போல, கர்நாடக அரசின் குட்நியூஸ்.. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை..!

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+