எலான் மஸ்க் தலைமை வகிக்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் ஒரு 14 வயது சிறுவனுக்கு வேலை கொடுத்த சம்பவம் உலக நாட்டு மக்களை வியக்க வைத்தது என்றால் மிகையில்லை.
Kairan Quazi கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்பை 14 வயதிலேயே முடித்துவிட்டு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் கடினமான இன்டர்வியூவ்-வில் சேர்ச்சி பெற்றதை தொடர்ந்து விரைவில் சேர உள்ளதாக லின்கிடுஇன் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்த பதவி உலகளவில் பிரபலமான நிலையில் Kairan Quazi-க்கு முக்கியமான பிரச்சனை தற்போது வெடித்துள்ளது. லின்கிடுஇன் தளத்தின் விதிமுறைகள் படி இத்தளத்தில் சேர விரும்புவோருக்கு குறைந்தது 16 வயது கொண்டு இருக்க வேண்டும்.
ஆனால் Kairan Quazi-க்கு வெறும் 14 வயது மட்டுமே ஆன நிலையில் லின்கிடுஇன் இந்த வைரலான பதிவை தொடர்ந்து விதிமுறைகளை மீறி கணக்கு இயங்கி வந்ததை கண்டுப்பிடித்து, இவருடைய கணக்கை முடக்கியுள்ளது. இந்த சம்பவத்தை பற்றி Kairan Quazi தனது இன்ஸ்டாகிராம்-ல் பதிவிட்டு உள்ளார்.
Linkedin எனக்கு 16 வயது ஆகாததால் எனது கணக்கை நீக்குகிறார்கள் என்ற அறிவிப்பை அனுப்பியுள்ளது. இது என் வாழ்வில் தொடர்ந்து எதிர்கொள்ளும் நியாயமற்ற, பழமையான முட்டாள்தனமான பிரச்சனை. உலகில் மிகவும் முக்கியமான பொறியியல் வேலைகளில் ஒன்றைப் பெறுவதற்கு நான் போதுமான தகுதி பெற்றவனாக இருக்க முடியும்போது...
ஒரு ப்ரொபஷ்னல் சோஷியல் மீடியாவை பயன்படுத்துவதற்கு போதுமான தகுதி இல்லையா? மேலும் LinkedIn சில தொழில்நுட்ப நிறுவனங்கள் எவ்வளவு பின்னடைவான கொள்கைகளை கொண்டிருக்கின்றன என்பதை காட்டுகிறது. மக்களே இந்த பதிவின் ஸ்கிரீன்ஷாட்டை எனக்காக அவர்களின் LinkedIn இல் பகிர்ந்து கொள்ளவும், Instagram இல் என்னுடன் இணையுமாறு மக்களைக் கேட்க முடியுமா? என பதிவிட்டு உள்ளார்.
14 வயதான Kairan Quazi அடுத்த சில மாதத்தில் அமெரிக்காவின் Santa Clara University's School of Engineering கல்லூரியில் இருந்து பட்டம் பெற உள்ள நிலையில் எலான் மஸ்க் கட்டுப்பாட்டில் இயங்கும் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் கடுமையான டெக்னிக்கல் இன்டர்வியூவ்-ஐ க்ளியர் செய்து விரைவில் Starlink நிறுவன பணியில் சேர உள்ளார்.
இதுகுறித்து Kairan Quazi தனது லின்கிடுஇன் கணக்கில் அவர் முன்பு செய்த பதிவில், என்னுடைய அடுத்த ஸ்டாப்: SpaceX, உலகிலேயே மிகவும் சிறப்பான நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக இணைந்து Starlink engineering டீம் உடன் பணியாற்ற உள்ளேன். உலகில் மிகவும் அரிதாக SpaceX என்னுடைய வயதை பொருட்படுத்தாமல் திறமையை ஆய்வு செய்து பணியில் சேர்த்துள்ளது என பதிவிட்டு இருந்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications