சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்கள் தொடங்கி நடைபெற இருக்கின்றன. இதில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் உள்ளிட்ட அரசின் பல்வேறு சேவைகளையும் மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் அனைவரும் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
நாளை முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: தமிழ்நாடு முழுவதும் நாளை தொடங்கி வரும் நவம்பர் 14ஆம் தேதி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற இருக்கின்றன. ஊரகப்பகுதிகளில் இந்த முகாம்கள் வாயிலாக 46 சேவைகளும், நகர்ப்புற பகுதிகளில் 43 சேவைகளும் வழங்கப்பட இருக்கின்றன. மொத்தம் நான்கு கட்டங்களாக 10,000 முகாம்களை நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது. மக்கள் அரசு சேவைகளை பெற அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டிய தேவையில்லை. ஏனெனில் அனைத்து துறை அதிகாரிகளுமே இந்த முகாம்களில் இருப்பார்கள் என்பதால் பெரும்பாலான சேவைகளை மக்கள் இதில் பெற்றுக் கொள்ளலாம்.

சென்னையில் வார்டுக்கு இரண்டு முகாம்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் தொடர்பாக தன்னார்வலர்கள் அனைத்து பகுதிகளுக்கும் வீடு வீடாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். சென்னையை பொறுத்தவரை உங்களுடன் ஸ்டாலின் முகாம் 15 மண்டலங்களிலும் நாளைய தினம் தொடங்க இருக்கிறது. ஒவ்வொரு வார்டுக்கும் இரண்டு முகாம்கள் என்ற வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மகளிர் உரிமைத் தொகை: முதல் கட்டமாக ஜூலை 15ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை சென்னையில் 109 முகாம்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்களை இந்த முகாம்கள் வாயிலாக சென்று விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கோவையில் 336 முகாம்கள்: கோவை மாவட்டத்தில் 336 முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது . கோவை மாவட்டத்தை பொருத்தவரை 1600 க்கும் அதிகமான தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடர்பான துண்டு அறிக்கையை மக்களிடம் வழங்குகின்றனர் என்றும் அதில் எந்தெந்த பகுதிகளில் முகாம்கள் நடைபெற இருக்கின்றன அதில் என்னென்ன சேவைகள் வழங்கப்பட இருக்கின்றன என்ற விவரங்கள் இடம் பெற்று இருக்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மருத்துவ முகாம்கள்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்களோடு மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகின்றன. எனவே முகாம்களுக்கு வருகை தரும் மக்கள் மருத்துவ முகாம்களிலும் கலந்து கொண்டு பயன்பெறும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். காலை 9 மணி முதலே முகாம்கள் தொடங்கி விடும் என்றும் பல்துறை அதிகாரிகளும் முகாம்களில் இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
45 நாட்களில் மகளிர் உரிமைத் தொகை: மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பம் செய்ய வேண்டும் என எண்ணும் பெண்கள் தங்கள் வார்டில் முகாம் நடைபெறும் இடத்திற்கு சென்று மட்டுமே விண்ணப்பம் செய்ய முடியும். தகுதியுள்ள பெண்கள் இந்த முகாம்களில் விண்ணப்பம் பெற்று தங்களின் விவரங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். ரேசன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் வங்கி கணக்கு விவரங்களோடு சென்றால் ஒரே நாளில் விண்ணப்பத்தை வழங்கிவிடலாம். 45 நாட்களில் இந்த விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்கப்பட்டு உங்களுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை கிடைக்குமா என்பது தெரிந்து விடும். அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications