சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படம் தியேட்டரில் வெளியாகி நல்ல வசூலை அள்ளியது. அந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தான் பராசக்தி. இந்த திரைப்படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து இருக்கும் இப்படத்தின் ஓடிடி உரிமம் மற்றும் சாட்டிலைட் உரிமம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 ஆம் தேதி 'பராசக்தி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் இந்த படம், 1960 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்ட படமாக உருவாக்கப்பட்டுள்ளதால், கார், உடை, செட் என அனைத்தும் அதற்கு தகுந்தபடி தத்ரூபமாக படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் பராசக்தி: தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழியில் வெளியாக உள்ள இந்த படத்தில் இருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், மூன்றாவது பாடலான 'நமக்கான காலம்' எனத் தொடங்கும் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த பாடலை அறிவு எழுத, ஹரி சரண், வேல்முருகன், நாகாஷ் அஜீஸ் ஆகியோர் இணைந்து இந்த பாடலை பாடி உள்ளனர்.
சாட்டிலைட் உரிமம்: படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருப்பதால் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கும் நிலையில், பராசக்தி படத்தின் டிஜிட்டல் உரிமையை ஜீ5 நிறுவனம் 52 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. அதன் சாட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பராசக்தி படத்தை வாங்க முன்னணி ஓடிடி நிறுவனங்கள் தயக்கம் காட்டி வந்த நிலையில் தற்போது ஜீ5 நிறுவனம் நல்ல விலைக்கு படத்தை வாங்கி உள்ளது. சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவியிடம் உள்ளதால் விரைவில் படத்தை தொலைக்காட்சியில் பார்க்கும் வாய்ப்பு உள்ளது. புகழ் பெற்ற இயக்குநர் 'சூரரைப் போற்று' படத்தின் வெற்றிக்கு பின்பாக மீண்டும் சூர்யாவை வைத்து படம் இயக்கவிருந்தார். ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக சூர்யா படத்தில் இருச்நது விலகியதை தொடர்ந்து, யாரும் எதிர்பாராத நேரத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து 'பராசக்தி' படத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

விஜய் என்னை உடல் ரீதியாக, மன ரீதியாக, உணர்வு ரீதியாக.. மனைவி சங்கீதா-வின் முக்கிய குற்றச்சாட்டு இதுதான்..!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications