சன் டிவி கலாநிதி மாறன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு.. தயாநிதி மாறன் அனுப்பிய பரபர நோட்டீஸ்..!

சென்னை: சன் டிவி குழுமம் தென்னிந்தியாவின் மிகப் பெரிய ஊடக தொழில் குழுமமாக இருக்கிறது. தென்னிந்தியாவில் அசைக்க முடியாத ஊடக குழுமம். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சகோதரியின் மகனான முரசொலி மாறன் தான் சன் டிவியை நிறுவியவர்.

முரசொலி மாறனால் தொடங்கப்பட்ட சன் டிவி: 1993ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சன் டிவி மிகவும் குறைந்த காலக்கட்டத்திலேயே தென்னிந்தியாவின் மிகப்பெரிய மீடியா சாம்ராஜ்ஜியமாகவும் அளவுக்கு வளர்ந்து ஆலமரமாக நின்றது. முரசொலி மாறனுக்கு கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

சன் டிவி கலாநிதி மாறன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு.. தயாநிதி மாறன் அனுப்பிய பரபர நோட்டீஸ்..!

இவர்களில் கலாநிதி மாறன் தான் சன் டிவி நெட்வொர்க், சன் பிக்சர்ஸ் மற்றும் ஐபிஎல் அணியான ஹைதராபாத் சன்ரைசர்ஸ் போன்றவற்றை நிர்வாகம் செய்து வருகிறார். தயாநிதி மாறன் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு முன்பு இவர் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர். தற்போது எம்பியாக அவர் பதவி வகித்து வருகிறார்.

கலாநிதி மாறனுக்கு தயாநிதி நோட்டீஸ்: அண்மை காலமாகவே மாறன் சகோதரர்கள் இடையே மனக்கசப்பு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. தற்போது அது பொதுவெளிக்கு வந்திருக்கிறது. தயாநிதி மாறன் தனது சகோதரர் கலாநிதி மாறனுக்கு சட்டப்பூர்வமான நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கலாநிதி மாறன் மோசடி செய்து சன் டிவி நிறுவன பங்குகளை கைப்பற்றியதாக அதில் தயாநிதி மாறன் குற்றம் காட்டியிருக்கிறார். கலாநிதி மாறன், அவருடைய மனைவி காவேரி கலாநிதி உட்பட ஏழு பேருக்கு தயாநிதி மாறன் இந்த நோட்டீசை அனுப்பி இருக்கிறார்.

மோசடி செய்து பங்குகளை கைப்பற்றினார்: சன் டிவி நெட்வொர்க் என்பது கிட்டத்தட்ட 24,000 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட ஒரு குழுமம். இதன் தலைவராகவும் மேலாண் இயக்குனராகவும் இருப்பவர் தான் கலாநிதி மாறன். அவர் 2003 ஆம் ஆண்டு மோசடி செய்து சன் டிவி நிறுவன பங்குகளை தன் வசப்படுத்தி நிறுவனத்தை தன் கட்டுக்குள் கொண்டு வந்தார் என தயாநிதி மாறன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

சன் டிவி குழுமத்தை பொறுத்தவரை மாறன் குடும்பத்தினரும் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பத்தினரும் சமமான அளவு பங்குகளை கொண்டிருக்கின்றனர். இதேபோல தான் குங்குமம் பதிப்பகத்திலும் உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

அனுமதி பெறாமல் பங்குகளை கைப்பற்றினார்: தயாநிதி மாறன் தரப்பில் இருந்து வழக்கறிஞர் கே. சுரேஷ் மூலம் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உட்பட ஏழு பேருக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், கடந்த 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி சன் டிவி நெட்வொர்க்கில் கலாநிதி மாறன் 12 லட்சம் ஈக்விட்டி பங்குகளை முறையான மதிப்பீடுகள் எதுவும் செய்யாமல், பங்குதாரர்களின் அனுமதி பெறாமல், நிர்வாக குழு உறுப்பினர்களின் ஒப்புதலை பெறாமல் தன் பெயரில் மாற்றிக் கொண்டார் என குற்றம் சாட்டியுள்ளார். எனவே இந்த விவகாரம் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்படக்கூடிய ஒரு விஷயமாக மாறி இருக்கிறது.

ரூ3,500 கோடி மதிப்புள்ள பங்குகள்: தலா 10 ரூபாய் என மதிப்பீடு செய்துக்கொண்டு இந்த பங்குகளை அவராகவே முடிவு செய்து தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொண்டார் என குற்றம் சாட்டியிருக்கும் தயாநிதி மாறன், அந்த சமயத்திலேயே கலாநிதி மாறன் தன்னுடைய பெயரில் மாற்றிக் கொண்ட பங்குகளின் மதிப்பு 3,500 கோடி ரூபாய் என கூறுகிறார். தன்னுடைய தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சருமான முரசொலி மாறனின் மரணத்தின் போது இது நிகழ்ந்ததாக கூறுகிறார்.

தந்திரமாக நிறுவனத்தை கைப்பற்றினார்: 2003 நவம்பர் 23ஆம் தேதி அன்று தான் முரசொலி மாறன் காலமானார் . அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் இந்த பங்கு பரிமாற்றம் என்பது நடைபெற்று இருக்கிறது. மேலும் தங்களின் தந்தையின் இறப்பை பயன்படுத்தி கலாநிதி மாறன் நிறுவனத்தில் தனக்கு சொந்தமான பங்குகளின் மதிப்பை கைப்பற்றியது மூலம் அவருடைய பங்கு இருப்பு 60% ஆக உயர்த்தி நிறுவனத்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார் என கூறியிருக்கிறார். இதேவேளையில் மற்ற முதலீட்டாளர்களின் பங்கு இருப்பு 20 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

பல ஆயிரம் கோடி லாபம்: இது தொடர்பாக அவர் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களான முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவியான எம் கே தயாளு அம்மாள் உள்ளிட்ட யாரையும் கலந்தாலோசிக்காமல் இப்படி ஒரு மோசடி செய்திருக்கிறார் என தெரிவித்திருக்கிறார்.

இந்த நோட்டீஸில் கலாநிதி மாறன் தன்னுடைய பங்கினை இவ்வாறு மோசடியாக சன் டிவி நெட்வொர்க் பங்குகளை கைப்பற்றியதின் மூலம் கலாநிதி மாறன் 2023 ஆம் ஆண்டு வரை 5926 கோடி ரூபாயை ஈவு தொகையாக மட்டுமே பெற்று இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

2024 ஆம் ஆண்டில் மட்டும் இந்த பங்குகள் மூலம் கலாநிதி மாறனுக்கு 455 கோடி ரூபாய் ஈவு தொகையாக கிடைத்திருக்கிறது, அது தவிர போனஸ் பங்குகள் என பல்வேறு பலன்களை அவர் அனுபவித்திருக்கிறார் என தெரிவித்திருக்கிறார்.

சன் ரைசர்ஸ் அணி: மேலும் கலாநிதி மாறன் அவருடைய மனைவி காவேரி மாறன் உள்ளிட்ட ஏழு பேர் முறைகேடாக சன் டிவி சன் டைரக்ட் டிவி, கல் வீடியோஸ், சன் பிக்சர்ஸ், சவுத் ஏசியன் எப்எம், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணி ஆகியவற்றின் வணிகங்களை இந்த மோசடி மூலம் கிடைத்த பணத்தில் நடத்தி வருகின்றனர் என கூறியுள்ளார்.

இவ்வாறு முறைகேடாக பெற்ற பங்குகள் மூலம் கிடைத்த பணத்தை கொண்டு மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் பிற திட்டங்களில் முதலீடு செய்து 8,500 கோடி ரூபாய் வரை லாபம் பார்த்துள்ளனர் என தயாநிதிமாறன் குறிப்பிட்டிருக்கிறார்.

சன் டிவி கலாநிதி மாறன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு.. தயாநிதி மாறன் அனுப்பிய பரபர நோட்டீஸ்..!

பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும்: 2003 ஆம் ஆண்டு சன் டிவி குழும பங்குகள் என்ன நிலையில் இருந்ததோ அதே நிலைமைக்கு திரும்பக் கொண்டு வர வேண்டும், அதாவது 2003 ஆம் ஆண்டு இருந்து அசல் நிலைக்கு நிறுவனத்தின் பங்குகளை மாறன் குடும்பம் மற்றும் கருணாநிதி குடும்பத்திற்கும் மத்தியில் சம பங்கு இருப்பு அளவுக்கு மாற்ற வேண்டும் என குறிப்பிட்டு இருக்கிறார். 7 நாட்களுக்குள் இந்த நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன் என தயாநிதி மாறன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கலாநிதி மாறனுக்கு தயாநிதி எச்சரிக்கை: கலாநிதி மாறன் தன்னுடைய தனிப்பட்ட நலனுக்காக முழு நிறுவனத்தையும் அதன் சொத்துக்களையும் கையகப்படுத்த மற்ற நபர்களோடு சேர்ந்து ஒரு தந்திரமான திட்டத்தை தீட்டி உள்ளார் என அதில் குற்றம் காட்டியிருக்கிறார். தீவிர மோசடி புலனாய்வு அலுவலகத்தில் இது தொடர்பாக தான் விசாரணையை கோருவேன் என்றும் முறைகேடாக பெற்ற பங்குகள் மூலம் கிடைத்த லாபத்தில் நடத்தப்பட்டு வரக்கூடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமம் குறித்து பிசிசிஐக்கு முறையிடுவேன் என்றும் தெரிவித்திருக்கிறார் .

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+