சென்னை: இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் அடுத்து வியந்து எதிர்பார்த்துக்கொண்டு காத்திருக்கும் இருக்கும் திரைப்படம் என்றால் கல்கி 2898 ஏ.டி. தான். மகாநடி அதாவது நடிகையர் திலகம் படத்தை இயக்கியது மூலம் இந்திய சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்ற நாக் அஸ்வின் இயக்கும் படம் தான் இந்த கல்கி 2898 ஏ.டி.
தெலுங்கு நடிகரான பிரபாஸ் நடித்து வெளியான ஆதிபுரஷ் படம் பெரும் தோல்வி அடைந்த நிலையில், இதன் பின்பு வெளியான சலார் படமும் நினைத்த அளவுக்கு மக்களிடம் இம்பேக்ட் உருவாக்காத நிலையில், கல்கி 2898 ஏ.டி. படம் பிரபாஸ்-க்கு தனது சினிமா வாழ்க்கையில் முக்கிய ஏணிப்படியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

'கல்கி 2898 ஏடி’ படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பாட்னி என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படம் ஜூன் 27ஆம் தேதி வெளியாக உள்ள வேளையில் இது புராணக் கதைக்களம் கொண்டு ஒரு SCI-FI படமாக உருவாகியுள்ளது. கல்கி 2898 ஏடி இரு துருவமும் இணையும் சங்கமம் ஆகும்.
இந்த படத்தில் பிரபாஸ்-க்கு இணையாக ஒரு கதாபாத்திரம் என்றால் புஜ்ஜி எனப்படும் ஏஐ கார் தான். இந்த கார் தான் தற்போது 'கல்கி 2898 ஏடி’ படத்தின் சென்டர் ஆப் அட்டிராக்ஷன் ஆக உள்ளது. இதை கார் எனக் கூறுவதா அல்லது ஜேசிபி -க்கு தங்கச்சி எனக் கூறுவதாக எனத் தெரியாத வகையில் பேட்மேன் கார் போல கோயம்புத்தூர் நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது.
எதிர்காலத்தை கண்முன்னே காட்டும் ஒரு எலக்ட்ரிக் கார் ஒன்றை, கோயம்புத்தூர்-ஐ சேர்ந்த JA மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. புஜ்ஜி என்று பெயரிடப்பட்ட இந்த 6 டன் எடையுள்ள கார், கோயம்புத்தூர் ஜே.ஏ மோட்டார்ஸ் நிறுவனம், பிரபல கார் உற்பத்தியாளரான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்துடன் இணைந்து, கல்கி 2898 ஏ.டி. திரைப்படத்திற்காகப் பிரத்தியேகமாக வடிவமைத்து உருவாக்கியுள்ளது.
இந்த கார் செட் ப்ராபெர்டி போல் அல்லாமல் நிஜத்தில் சாலையில் இயங்கும் ஒரு முழுகாராக உள்ளது. இந்த கார் மூலம் கோயம்புத்தூர் JA மோட்டார்ஸ் நிறுவனம் பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளது. ஆட்டோமொபைல் துறையில் பேஸ்மெண்ட் ஆக இருக்கும் கோயம்புத்தூரில் இந்த பியூச்சரிஸ்டிக் கார் உருவாக்கப்பட்டு உள்ளது பெருமைக்கு உரிய விஷயம்.

இந்த கார், கோயம்புத்தூரில் உள்ள CoASTT ஹைய் பர்பாமென்ஸ் சென்டரில் சமீபத்தில் சோதனை செய்யப்பட்டது. இதற்கு முன்பு சென்னையிலும், ஹைதராபாத்திலும் வளம் வந்தது. CoASTT என்பது Coimbatore Automotive Steering & Testing Tracks என்பதன் சுருக்கமாகும்.
கல்கி 2898 ஏ.டி. படம், எதிர்காலத்தைக் கருவாகக் கொண்ட அறிவியல் புனைகதையை அடிப்படையாகக் கொண்டது. இந்த படத்தின் கதையோட்டத்திற்கு ஏற்ப futuristic தோற்றத்துடன் கூடிய வாகனம் தேவைப்பட்டதால், ஜே.ஏ மோட்டார்ஸ் நிறுவனம் "புஜ்ஜி" காரை உருவாக்கியுள்ளது.
புஜ்ஜி காரின் சிறப்பம்சங்கள்:
மின்சார வாகனம்: புத்தம் புதுமையான வடிவமைப்புடன் இருந்தாலும், "புஜ்ஜி" ஒரு சுற்றுச்சூழல் சார்ந்த மின்சார கார் ஆகும். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சுத்தமான எரிசக்தி பயன்பாட்டை வலியுறுத்தும் விதமாக இது அமைந்துள்ளது.
6 டன் எடை: அதன் மாபெரும் தோற்றத்திற்கு ஏற்ப, "புஜ்ஜி" கார் சுமார் 6 டன் எடையுடன் உள்ளது. இதனை இயக்குவதற்குப் பெரிய பலம் கொண்ட மின்சார மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சக்கரம்: இந்த வாகனத்தின் வீல் அமைப்பு மிகவும் புதிதாக உள்ளது, சென்டர் ஹப் இல்லாமல் புதுவிதமாகத் தயாரித்துள்ளது கோயம்புத்தூர் ஜே.ஏ மோட்டார்ஸ் நிறுவனம் மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனங்களின் கூட்டணி. இந்த புஜ்ஜி கார் ஒரு ஏஐ தொழில்நுட்பம் கொண்டது என்பதால் இந்த காருக்கு ஒரு வாய்ஸ் உள்ளது, இதற்குக் குரல் கொடுத்தவர் மகாநடி திரைப்படத்தின் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications