சென்னை: இந்தியாவில் முன்னணி நகை விற்பனை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது கல்யாண் ஜுவல்லர்ஸ். இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் திகழ்கிறது.
நகை விற்பனை: இந்தியாவில் தங்க நகை விற்பனை துறை வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு துறையாக இருக்கிறது. இதின் முன்னணி நிறுவனமாக கேரள மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்ட கல்யாண் ஜுவல்லர்ஸ் செயல்பட்டு வருகிறது. கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தை பொருத்தவரை 406 இடங்களில் தங்களுடைய கடைகளை அமைத்து செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் 287 இடங்களிலும் மத்திய கிழக்கு நாடுகளில் 36 இடங்களிலும் அமெரிக்காவில் இரண்டு இடத்திலும் இந்நிறுவன நகைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

கல்யாண் ஜூவல்லர்ஸ்: Candere என்ற பிராண்டின் கீழ் 81 கடைகளை திறந்து இருக்கிறது. தங்களுடைய கடைகளை மேலும் விரிவாக்கம் செய்வதற்கு திட்டமிட்டு இருப்பதாக கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு இயக்குனரான ரமேஷ் கல்யாணராமன் பிடிஐ தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். தங்களுடைய நிறுவனம் கடன்களை குறைப்பதற்காக Franchise முறையில் கல்யாண் ஜுவல்லர்ஸ் விற்பனை நிலையங்களை அமைப்பதற்கு திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
Franchise மாடலில் கடைகள்: 2025- 26 ஆம் நிதியாண்டில் புதிதாக 120 கிளைகளை திறக்க முடிவு செய்திருப்பதாகவும் இதில் 90 கடைகள் இந்தியாவிலும் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தலா 7 கடைகள் திறக்கப்படும் என தெரிவித்திருக்கிறார் . தங்களுடைய நிறுவனம் தென்னிந்தியா தவிர்த்து வடமாநிலங்களிலும் கால் பதிக்க திட்டமிட்டு இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் அவர் Franchise மாடல் முறையில் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலை சந்தைகளில் நாங்கள் கடைகளை திறக்கப் போகிறோம் என தெரிவித்திருக்கிறார்.

கடனை குறைக்க திட்டம்: இதன் மூலம் எங்கள் நிறுவனத்தின் கடன் அளவு குறையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். கடந்த ஆண்டு எங்கள் நிறுவனத்தின் கடன் அளவில் 400 கோடியை குறைத்திருக்கிறோம் இந்த ஆண்டு மேலும் 300 கோடியை குறைப்பதற்கு திட்டமிட்டு இருக்கிறோம் என தெரிவிக்கும் அவர் Franchise மாடல் முறையில் கடைகளை திறக்கும் முடிவு தங்களின் வருமானத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புவதாக தெரிவித்து இருக்கிறார்.
பங்கு மதிப்பு :Franchise முறையில் நாங்கள் மூலதனம் எதுவும் கொடுக்கத் தேவையில்லை மற்றவர்கள் எங்களிடம் மூலதனம் கொடுத்து கடையை திறக்கப் போகிறார்கள் என்பதால் அந்த பணத்தை கொண்டு நாங்கள் கடன்களை அடைத்து விடுவோம் என தெரிவித்திருக்கிறார். தற்போதைக்கு இந்தியாவில் தங்க நகை விற்பனை சந்தையில் கல்யாண் ஜுவல்லர்ஸ் 9 சதவீதம் வரையிலான பங்களிப்பை கொண்டிருக்கிறது .பங்கு சந்தையில் பார்க்கும்போது இந்த நிறுவனத்தில் ஒரு பங்கு மதிப்பு 596 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறதும் இந்த நிறுவன பங்கின் 52 வார உச்சபட்ச மதிப்பு 795 ரூபாய் ஆகும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications