இந்தியாவின் முன்னணி நகை கடை உரிமையாளரான கல்யாண் ஜுவல்லர்ஸ், வரும் வாரத்தில் பொது பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது.
இந்த பங்கு வெளியீட்டினை மார்ச் 16, 2021 அன்று தொடங்கவுள்ளது. இந்த பங்கு வெளியீட்டில் விலை 86 - 87 ரூபாயாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் 1750 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 1175 கோடி ரூபாய் மதிப்பில் மட்டுமே திரட்ட திட்டமிட்டுள்ளது.
மூலதன செலவுக்காக நிதி திரட்டல்
இதில் புதிய பங்கு வெளியீடாக 800 கோடி ரூபாய்க்கும், 375 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும் விற்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆக இந்த பங்கு விற்பனையின் மூலம் 125 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2 கோடி மதிப்பிலான பங்குகளை கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம் ஒதுக்க திட்டமிட்டுள்ளது.
லாட் சைஸ் என்ன?
இந்த நிதி திரட்டலானது அதன் மூலதன செலவினங்களுக்காக பயன்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 172 பங்குகள் வாங்கலாம். அதற்கும் அதிகமாக வாங்க வேண்டுமெனில் 172ன் மடங்கில் வாங்கலாம். உண்மையில் இது சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு தான்.
நிறுவனம் பற்றி
கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம் கடந்த 45 வருடங்களாக சில்லறை நகை வியாபாரத்தில் இருந்து வருகின்றது. இந்த நிறுவனம் கடந்த 1993ல் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட நிலையில் திரிச்சூர், கேரளாவில் ஒரே ஒரு ஷோரூம் மட்டும் தொடங்கியது. ஆனால் இன்று அதன் ஷோரூம்கள் 21 மாநிலங்களில் 107 ஷோரூம்கள் உள்ளன. இதே சர்வதேச அளவில் 30 ஷோரூம்கள் உள்ளன.
ஆன்லைனிலும் விற்பனை
இவற்றோடு இந்த நிறுவனம் candere.com. என்ற இணையத்தின் மூலமாகவும் நகை விற்பனையை செய்து வருகின்றது.
அதோடு இன்னும் கூடுதலாக ஷோரூம்களை திறக்க திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த பங்கு வெளியீட்டினை ஆக்ஸிஸ் கேப்பிட்டல், சிட்டி குரூப் குளோபல் மார்கெட்ஸ் இந்தியா, ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், எஸ்பிஐ கேப்பிட்டல் மார்கெட்ஸ், பிஓபி கேப்பிட்டல் மார்கெட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நிர்வகிக்க உள்ளன.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications