ஆனானப்பட்ட கமல்ஹாசனுக்கே வீட்டுல இதுதான் நிலைமை.. கமலே இப்படி சொல்லிட்டாரு..!!

இந்தியாவை சேர்ந்த பெற்றோர்களிடம் சென்று உங்கள் பிள்ளைகள் என்ன ஆக வேண்டும் என கேட்டால் பத்தில் 7 பேர் அரசாங்க வேலைக்கு செல்ல வேண்டும் என்றுதான் கூறுவார்கள். அரசாங்க வேலை தான் பாதுகாப்பானவை , எதிர்காலத்தில் நிம்மதியான வாழ்க்கையை கொடுக்கும் என்ற மனநிலை காலம் காலமாக இந்தியாவில் நிலவுகிறது.

இந்திய பெற்றோரை பொறுத்தவரை தங்களுடைய பிள்ளைகளுக்கு எப்போதும் பாதுகாப்பான மற்றும் நிலையான வேலையில் இருப்பது தான் சரி என நம்புகின்றனர் . அரசாங்க வேலைக்கு செல்ல வேண்டும் என சொல்லி சொல்லி தான் பிள்ளைகளை வளர்க்கிறார்கள் . கால் காசுன்னாலும் கவர்மெண்ட் காசு என்ற ஒரு பேச்சு வழக்கே நம் நாட்டில் உண்டு. இது நம்மைப் போன்ற சாதாரண குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல பெரிய பெரிய பிரபலங்களுக்கும் வீடுகளில் இதுதான் நிலைமை.

ஆனானப்பட்ட கமல்ஹாசனுக்கே வீட்டுல இதுதான் நிலைமை.. கமலே இப்படி சொல்லிட்டாரு..!!

உலக நாயகன் கமலஹாசன் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு கலைஞர். தன்னுடைய திரைப்படங்களில் புதுப்புது தொழில்நுட்பங்களை பரிசோதனை செய்து பார்ப்பதில் வல்லவர் மிகச் சிறந்த நடிகர் .தன்னுடைய நடிப்பாலும் திறமையாலும் பெற்றோருக்கு பெருமை சேர்த்தவர் .ஆனாலும் அவருடைய இத்தனை வருட திரை வாழ்க்கையும் திரையுலக உழைப்பும் அவருடைய தாயாருக்கு மகிழ்ச்சியை தரவில்லை .

கமல்ஹாசன் நடிகராக மட்டுமில்லாமல் மக்கள் நீதி மையம் என்ற ஒரு கட்சியை தொடங்கினார். அண்மையில் அவர் ராஜ்யசபா எம்பி ஆகவும் தேர்வு செய்யப்பட்டார் .இந்த சூழலில் கேரளாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகரும் ராஜ்யசபா எம்பியுமான கமல்ஹாசனிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒரு கேள்வியும் முன் வைத்தார், அதற்கு கமல் அளித்த சுவாரசியமான பதில் தான் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

தற்போது நீங்கள் ராஜ்ய சபா எம்பியாக இருக்கிறீர்கள் ,இந்த தருணத்தை எப்படி உணர்கிறீர்கள் என்ற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு கமலஹாசன் ராஜ்யசபா எம்பியாக நான் என்னுடைய முதல் கையெழுத்தை போடும்போது என்னுடைய பெற்றோர் தான் நினைவுக்கு வந்தனர் என கூறியுள்ளார். எம்பி பதவியேற்கும் போது தந்தை ஸ்ரீனிவாசன் ஐயங்கார் மற்றும் தாயார் ராஜலட்சுமியை தான் நினைத்துக் கொண்டேன் என கூறியிருக்கிறார்.

ஆனானப்பட்ட கமல்ஹாசனுக்கே வீட்டுல இதுதான் நிலைமை.. கமலே இப்படி சொல்லிட்டாரு..!!

எம்பியாக தேர்வான பிறகு நான் முதல் கையெழுத்திடும் போது என் மனதில் தோன்றிய முதல் விஷயம் என்னுடைய தந்தை மற்றும் தாய் தான் என கூறியிருக்கிறார், நான் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டவன். அப்போது முதலே என்னுடைய தாயார் எஸ்எஸ்எல்சி தேர்வையாவது முடித்து விடு , அப்படி முடித்தால் எப்படியாவது ரயில்வேயிலாவது வேலை வாங்கி விடலாம், அரசாங்க வேலை வாங்கி விடலாம் என சொல்லிக் கொண்டே இருப்பார் , படிப்பை விட்டு விட்டாயே என எப்போதுமே என்னுடைய தாயார் என்னை நினைத்து புலம்புவார் எனக் கூறியிருக்கிறார்.

எனக்கு அரசாங்க வேலை வேண்டும் என்று என்னுடைய தாயாரின் கனவை நான் என்னுடைய 71 வயதில் தான் நிறைவேற்றி இருக்கிறேன் என கூறியிருக்கும் கமல், இந்த தருணத்தில் என்னுடைய தாயாரை அழைத்து எனக்கு அரசாங்க வேலை கிடைத்து விட்டது என கூற வேண்டுமென நினைக்கிறேன் ஆனால் இப்போது முடியாது என கூறி இருக்கிறார் .

முன்னதாக பிரபல கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுலும் கூட இதே போன்ற ஒரு கருத்தை முன் வைத்திருந்தார் . இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக இருப்பவர் கே எல் ராகுல். தேசத்திற்காக பல்வேறு போட்டிகளிலும் திறம்பட விளையாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில் தன்னுடைய பட்டப்படிப்பை அதாவது டிகிரியை முடித்தார் .

ஆனானப்பட்ட கமல்ஹாசனுக்கே வீட்டுல இதுதான் நிலைமை.. கமலே இப்படி சொல்லிட்டாரு..!!

அது தொடர்பான சுவாரசியமான தகவலை ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார். நான் டிகிரி முடித்ததற்கு என்னுடைய தாய் தான் முழு காரணம், டிகிரியை முடி என தொந்தரவு செய்து கொண்டே இருந்தார், இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாடியதை விட எனக்கு ரிசர்வ் வங்கி வேலை கிடைத்த போதே எனது பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் இந்தியாவுக்காக நான் விளையாடுது அவர்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை மாறாக அரசு வேலை கிடைத்தது தான் அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது என கூறினார் .

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+