சினிமா முதல் சிலிக்கான் வேலி வரை.. என விண்வெளி நாயகன் கமல்ஹாசன் வெளியிட்ட ஒரு டிவீட் தான் தற்போது திரையுலகினரும், தமிழ்நாடு டெக் வல்லுனர்களும் அதிகம் பேசி வருகின்றனர். கமல்ஹாசனின் சினிமா அறிவு பற்றி பாராட்டாதவர்களே இல்லை, 70 வயதிலும் புதுமையாக விஷயங்களை தேடி தேடி கற்றுக்கொண்டு வரும் கமல்ஹாசனின் கவனம் ஏஐ துறை மீது தற்போது திரும்பியுள்ளது.
ஏஐ தற்போது அனைத்து துறையிலும் முக்கிய பங்கு வகிக்க துவங்கியிருக்கிறது, அதிலும் கிரியேட்டிவ் பிரிவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சினிமாவில் பல மாதங்களாக கிராபிக்ஸ் டிசைனர்கள் செய்யும் வேலையை தற்போது ஏஐ மூலம் சில மணிநேரத்தில் செய்யும் அளவுக்கு வசதிகள் வந்துவிட்டது.

இப்படியிருக்கையில் சினிமா காதலன் கமல்ஹாசன் சும்மா இருப்பாரா என்ன..? தமிழ் சினிமாவுக்கு பல புதுமையான விஷயங்களை கொண்டு வந்தவர் கமல், தற்போது ஏஐ தொழில்நுட்பத்தை சிறப்பான முறையில் கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
சினிமா துறையில் புதிய தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வதற்காக சில மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்ற கமல் தற்போது ஏஐ குறித்து தெரிந்துக்கொள்ள பெர்ப்ளெக்சிட்டி ஏஐ நிறுவனத்தின் தலைமையகத்திற்கு சென்று அதன் சிஇஓ-வான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் அவர்களை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு குறித்த போட்டோ மற்றும் ஒரு அழகிய பதிவியையும் வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்.
சினிமா முதல் சிலிக்கான் வேலி வரை.. புதுமையின் நிலப்பரப்பு தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. கருவிகளும், செயலாற்றும் முறைகள் மாறினாலும், அடுத்தது என்ன, அடுத்து என்ன என்ற எதிர்பார்க்கும் மனிதனின் எண்ணம் மாறாமல் உள்ளது.
இது தான் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பெர்ப்ளெக்சிட்டி ஏஐ நிறுவனத்தின் தலைமையகத்திற்கு என்ன அழைத்து செல்வதற்கு காரணமாக இருந்தது. இங்கு, அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மற்றும் அவரது திறமையான குழுவினரை சந்திதேன், இவர் வலிமையான எதிர்காலத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று கமல்ஹாசன் டிவீட் செய்திருந்தார்.
அமெரிக்க சிலிக்கான் வேலியில் செயற்கை நுண்ணறிவு துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வரும் பெர்ப்ளெக்சிட்டி AI (Perplexity AI) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் ஸ்ரீனிவாஸ், தமிழ்நாட்டை சேர்ந்தவர், இவர் ஐஐடி மெட்ராஸ் கல்லூரியில் பல முன்னணி நிறுவனங்களின் ஏஐ பிரிவில் பணியாற்றி தற்போது பெர்ப்ளெக்சிட்டி AI நிறுவனத்தின் மூலம் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார்.

ஐஐடி மெட்ராஸ்-ல் 2017ஆம் ஆண்டு எலக்ட்ரிக் இன்ஜினியரிங் பிரிவில் பிடெக் மற்றும் எம்டெக் பட்ட படிப்பை முடித்த கையோடு அமெரிக்கா சென்றார். அங்கு கலிபோர்னியா பல்கலைகழகத்தில் கம்பியூட்டர் சையின்ஸ் பிரிவில் பிஹெச்டி பட்டம் பெற்றார்.
படித்துக்கொண்டு இருந்த போதே ஓப்பன் ஏஐ, டீப் மையின், கூகுள் ஆகிய நிறுவனங்களில் ரிசர்ச் இன்டர்ன் ஆக பணியாற்றினார். படிப்பை முடித்த பின்பு ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் ரிசர்ச் சையின்டிஸ்ட் ஆக ஒரு வருடம் பணியாற்றினார்.
இதை தொடர்ந்து தனிப்பட்ட முறையில் ஏஞ்சல் இன்வெஸ்டராக 2 வருடம் பணியாற்றி சுமார 30க்கும் அதிகமான நிறுவனத்தில் முதலீடு செய்து, தனது ஆதிக்கத்தை ஏஐ துறையில் ஆரம்பக்கட்டத்திலேயே டெக் உலகிற்கு காட்டியவர். இந்த நிலையில் தான் ஆகஸ்ட் 2022ல் பெர்ப்ளெக்சிட்டி AI (Perplexity AI) நிறுவனத்தை உருவாக்கி தற்போது அதிகம் பயன்படுத்தும் ஏஐ சேவை தளத்தில் டாப் 5ல் ஒன்றாக உள்ளது.


Click it and Unblock the Notifications