வசூல்ராஜா MBBS படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் கமல் கட்டிப்புடி வைத்தியம் என்ற விஷயத்தைத் தமிழ்நாடு முழுவதும் பிரபலமாக்கினார்.
மன அழுத்தம், டென்ஷனாக இருப்பவர்களுக்கு மற்றவர்கள் கட்டிப்பிடிப்பது மூலம் மன அழுத்தம் குறையும் என்பது தான் இந்தக் கட்டிப்பிடி வைத்தியத்தின் அடிப்படை. ஆனால் இந்த விஷயம் தற்போது உலகில் பல நாடுகளில் பரவி, தற்போது முக்கிய வர்த்தகமாகவே மாறியுள்ளது.
இந்தக் கட்டிப்புடி வைத்தியத்திற்கு எவ்வளவு கட்டணம் தெரியுமா..?!
வசூல்ராஜா MBBS கமல்
இந்தக் கட்டிப்புடி வைத்தியம் என்பது பல காலமாக இருப்பது தான் ஆனால் வசூல்ராஜா MBBS படத்திற்குப் பின்பு பல தெற்காசிய நாடுகளில் மசாஜ், ஸ்பா போலக் கட்டிப்புடி வைத்தியமும் முக்கியமான சேவையாக மாறியுள்ளது. இதைப் பல விமர்சனம் செய்தாலும், பலர் இதன் மூலம் அதிகளவிலான நன்மை அடைவதாகக் கூறுகின்றனர்.
கட்டிப்புடி வைத்தியம்
இது சரியா தவறா என்பதைத் தாண்டி, தற்போது இது ப்ரொபஷனல் சேவையாக மாறியுள்ளது வியக்க வைக்கிறது. தெற்காசியப் பகுதியிலும், அமெரிக்காவில் சில பகுதிகளில் மட்டுமே இருந்த professional cuddler சேவைகள் தற்போது பிரிட்டன் நாட்டின் முக்கிய வர்த்தகமாகவே மாறியுள்ளது.
பிரிட்டன்
பிரிட்டன் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும் வேளையில் பலர் விநோதமாக விஷயங்கள் மூலம் பணம் சம்பாதிக்கத் துவங்கியுள்ளனர். இதற்கு முக்கியமான உதாரணம் இதே பிரிட்டனில் மனைவி தன் கணவனை வீட்டு வேலை செய்ய வாடகைக்கு விட்ட செய்தி பெரிய அளவில் பிரபலமானது. இதன் வரிசையில் தற்போது professional cuddler சேவை.
Embrace Connections - கட்டிப்புடி சிகிச்சை
ட்ரெவர் ஹூடன் என்பவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் Embrace Connections என்ற கட்டிப்புடி சேவையை வழங்கும் நிறுவனத்தைத் தொடங்கினார். இது வாடிக்கையாளர்களுக்குக் கட்டிப்புடி சிகிச்சை, இணைப்புப் பயிற்சி மற்றும் மசாஜ்களை வழங்குகிறது. கட்டிப்புடி சிகிச்சை பல வகையில் மக்களின் மன வாழ்வை மேம்படுத்துவதாகக் கூறுகிறது Embrace Connections.
75 பவுண்டு கட்டணம்
Embrace Connections நிறுவனம் ஒரு செஷன் கட்டிப்புடி வைத்தியத்திற்குச் சுமார் 75 பவுண்டு வசூல் செய்கிறது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 7100 ரூபாய் ஆகும். இந்தச் சேவையைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க, மறக்காம கமெண்ட் பண்ணுங்க.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications