கஞ்சன்ஜங்கா ரயில் விபத்து: ரயில் பயணக் காப்பீடு வாங்குவது முதல் கிளைம் வரை.. முழு விபரம்..!!

சென்னை: இன்று காலை மேற்கு வங்காளத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்தானதில் பல பயணிகள் உயிரிழந்துள்ளனர், இந்த விபத்து ஒவ்வொரு ரயில் பயணத்தின் போதும் ரயில் பயணிகள் தங்களை இந்திய ரயில்வே துறை அளிக்கும் காப்பீடு மூலம் பாதுகாத்துக் கொள்வதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) பயணிகளுக்காகப் பயணக் காப்பீடு திட்டத்தை வழங்குகிறது. இது பயணத்தின் போது ஏற்படும் விபத்துகள் மற்றும் காயங்களுக்கு நிதி பாதுகாப்பு அளிக்கிறது. இந்த காப்பீடு பற்றி முழுமையாக தெரிந்துகொள்வது அவசியம்.

கஞ்சன்ஜங்கா ரயில் விபத்து: ரயில் பயணக் காப்பீடு வாங்குவது முதல் கிளைம் வரை.. முழு விபரம்..!!

யார் ரயில் பயணக் காப்பீட்டு திட்டத்திற்குத் தகுதியானவர்கள்?: இந்திய குடிமக்கள் மட்டுமே ஐஆர்சிடிசி மூலம் அளிக்கப்படும் இந்த சிறப்பு ரயில் பயணக் காப்பீடு பெற தகுதியுடையவர்கள் ஆவர். இந்த காப்பீடு அனைத்து வகுப்பு ரயில் பயணங்களுக்கும் பொருந்தும் என்றாலும், இது முழுக்க முழுக்க விருப்பத்தேர்வாகும். ரயில் பயணிகள் விருப்பம் இருப்பின் அதை வாங்கலாம் அல்லது மறுத்துவிடலாம், இதற்கான ஆப்ஷன் டிக்கெட் புக் செய்யப்படும் போது அளிக்கப்படும்.

ரயில் பயணக் காப்பீடு பெறுவது எப்படி?: www.irctc.co.in என்ற இணையதளத்தில் உள்ள NGeT இணையதள ஆப் (website application) அல்லது ஐஆர்சிடிசி மொபைல் ஆப் மூலம் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் போது, ரயில் பயணக் காப்பீடு பெற விருப்பப்படும் பயணிகள், காப்பீடுக்கான தேர்வு பெட்டியைக் (checkbox) டிக் செய்ய வேண்டும்.

ரயில் பயணக் காப்பீடு பிரீமியம்: ஐஆர்சிடிசி பயணக் காப்பீடுக்கான ப்ரீமியம் மிகக் குறைவான தொகையே. ஒரு ரயில் பயணிக்கு வெறும் ரூ.0.35 (வரிகள் உட்பட) மட்டுமே. இந்த பிரீமியம் தானாகவே கணக்கிடப்பட்டு, மொத்த டிக்கெட் கட்டணத்துடன் சேர்க்கப்படும்.

யில் பயணக் காப்பீடு வழங்கும் நன்மைகள்: இந்தக் காப்பீட்டு திட்டம், ரயில் விபத்துகள் அல்லது எதிர்பாராத சம்பவங்களால் ஏற்படும் மரணம், நிரந்தர முழு உடல் ஊனம், நிரந்தர பகுதி உடல் ஊனம், மற்றும் மருத்துவமனை செலவுகளுக்குக் காப்பீடு வழங்குகிறது.

ரயில் பயணக் காப்பீட்டின் காலம்: இந்திய ரயில்வே துறை அளிக்கும் 0.35 பைசா மதிப்பிலான காப்பீடு, ரயில் புறப்படும் நேரத்திலிருந்து டிக்கெட் புக்கிங் செய்யப்பட்ட இடத்திற்கு சென்றடையும் வரையிலான பயண நேரம் வரையில் தான் இந்த காப்பீடு செல்லுபடியாகும்.

ரயில் பயணக் காப்பீடு கிளைம் செய்யும் முறை: காப்பீடு செய்யப்பட்ட பயணி அல்லது அவரது நாமினி ஆகியோரில் யாரேனும் ஒருவர் காப்பீடு சான்றிதழ், மருத்துவ அறிக்கைகள் மற்றும் ஆதார் ஆவணங்கள் போன்ற தேவையான ஆவணங்களை காப்பீட்டு நிறுவனத்திடம் ( ரயில் பயணக் பாலிசியில் இதுகுறித்த விபரம் இருக்கும்) சமர்ப்பித்து கிளைம் செய்யலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+