ரயில் விபத்து: IRCTC கொடுக்கும் 35 பைசா ரயில் பயண இன்சூரன்ஸ்.. ஒவ்வொருவருக்கும் முக்கியம்..!

சென்னை: ஜூன் 17, திங்கள் கிழமை காலை மேற்கு வங்காளத்தில் பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது, சீல்டா செல்லும் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில், புதிய ஜல்பைகுரி அருகே சரக்கு ரயில் உடன் மோதி விபத்துக்குள்ளாகி பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50 பேர் வரை காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்ற மோசமான ரயில் விபத்து கடந்த ஆண்டு ஒடிஷா மாநிலத்தில் நடத்தது மறக்க முடியாது.

ரயில் விபத்து: IRCTC கொடுக்கும் 35 பைசா ரயில் பயண இன்சூரன்ஸ்.. ஒவ்வொருவருக்கும் முக்கியம்..!

இந்த ஒடிஷா விபத்தில் 288 பேர் உயிரிழந்த நிலையில், 1000 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். ஆனால் வெறும் 624 பேர் மட்டுமே IRCTC வழங்கும் பயண காப்பீடு பெற்றுள்ளனர். இன்று நடந்த விபத்தில் எத்தனை பேர் பயண காப்பீடு வாங்கியுள்ளனர் என்பது இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் இத்தகைய தருணத்தில் தான் இந்த இன்சூரன்ஸ் எவ்வளவு முக்கியம் என்பது தெரிய வருகிறது.

ரயில் பயணத்தின் போது ஏற்படும் ரயில் விபத்தில் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்குக் காப்பீடு எவ்வளவு முக்கியம் என்பதையும், இந்த பயண காப்பீட்டின் அவசியத்தை மேற்கு வங்க ரயில் விபத்து மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) ரயில் பயணிகளுக்காகப் பயணக் காப்பீடு வழங்குகிறது. இது பயணத்தின் போது ஏற்படும் விபத்துக்கள் மற்றும் காயங்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது.

ஐஆர்சிடிசி தளம் மூலம் ரயில் பயணக் காப்பீடு, ஒவ்வொரு டிக்கெட் பதிவுக்கும் வழங்கப்படுகிறது. ரூ.10 லட்சம் தனிப்பட்ட விபத்து காப்பீடு பாதுகாப்புக்கு வசூலிக்கப்படும் பிரீமியம் (premium) தொகை வெறும் 0.35 பைசா மட்டுமே. இந்தக் காப்பீடு, பயணத்தின் போது ரயில் விபத்து காரணமாக ஏற்படும் மரணம்/ உடல் ஊனம் /மருத்துவச் செலவுகளுக்கு அளிக்கப்படுகிறது.

இந்த காப்பீடு பாதுகாப்பு, இரண்டு பொது காப்பீட்டு நிறுவனங்களான எஸ்.பி.ஐ பொது காப்பீடு நிறுவனம் லிமிடெட் மற்றும் லிபர்ட்டி பொது காப்பீடு நிறுவனம் லிமிடெட் ஆகியவை வழங்குகின்றன.

முன்னதாக, ரூ.10 லட்சம் தனிப்பட்ட விபத்து காப்பீடு பாதுகாப்பை ஒவ்வொரு டிக்கெட் முன்பதிவின் போதும் கட்டாயமாக பெற வேண்டும் என்ற கட்டமைப்பில் ஐஆர்சிடிசி இயங்கியது. ஆனால் தற்போது, இந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, காப்பீட்டைத் தேர்வு செய்ய வேண்டாம் என விரும்பும் பயணிகளுக்கு விலகிக் கொள்ளும் விருப்பத்தையும் வழங்கியுள்ளது.

அதாவது, ஐஆர்சிடிசி இணையதளத்தில் தங்கள் ரயில் டிக்கெட்டுகளை பதிவு செய்யும் பயணிகளுக்கு தானாகவே ரூ.10 லட்சம் மதிப்பிலான காப்பீடு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்தக் காப்பீடு தேவையில்லை என்று கருதும் பயணிகள், அதற்கான தேர்வை (opt out) கிளிக் செய்வதன் மூலம் விலகிக் கொள்ளலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+