கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் - CONCOR சரக்கு ரயில் மோதல்: ரூ.16.88 கோடியில் உருவான Kavach செயல்படாதது ஏன்?

சென்னை: மேற்கு வங்காளத்தில் பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. ஜூன் 17, திங்கள் கிழமை காலை சீல்டா சென்றுக்கொண்டு இருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது, புதிய ஜல்பைகுரி அருகே சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20 முதல் 25 பேர் வரை காயமடைந்துள்ளதாக 10.45 மணிக்கு தகவல் வெளியாகியுள்ளது. 12 மணியளவில் உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் - CONCOR சரக்கு ரயில் மோதல்: ரூ.16.88 கோடியில் உருவான Kavach செயல்படாதது ஏன்?

வடக்கு எல்லைப்புற ரயில்வே (NFR) மூத்த அதிகாரி இதுகுறித்து கூறுகையில், "காலை 9 மணி அளவில் நடைபெற்ற இந்த விபத்தில் சிலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துகொண்டு இருக்கின்றன. ஆகர்டாலா எக்ஸ்பிரஸ் 13174 (Kanchanjunga Express) ரயில் மீது நியூ ஜல்பைகுரி நிலையம் அருகே உள்ள ரங்கபானி பகுதியில் சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது" என்றார்.

Kavach system: இந்த ரயில் விபத்து, இந்திய ரயில்வேயின் தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பான "கவச்" தொடர்பான கேள்வியை எழுப்பியுள்ளது. கவச் என்பது Signal Passed at Danger - SPAD பிரச்சனை மூலம் ஏற்படும் ரயில் மோதல்களைக் குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு ரயில் மற்றொரு ரயில் மீது மோதும் தருணத்தில் கவச் அமைப்பு, ரயில் ஓட்டுநருக்கு எச்சரிக்கை விடுப்பது மட்டுமல்லாமல், ரயில் தண்டவாளத்தில் குறிப்பிட்ட தூரத்திற்குள் வேறு ஒரு ரயில் இருப்பதைக் கண்டறிந்தால், தானாகவே பிரேக்கைக் கட்டுப்படுத்தி ரயிலை நிறுத்தும் திறன் கொண்டது. அது கார்களில் இருக்கும் ADAS Forward Collision Avoidance அமைப்புக்கு நிகரானது. ஆனால் ரயிலில் பல கிலோமீட்டருக்கு முன்பே இந்த அமைப்பு இயங்கும் வல்லமை கொண்டவை.

கவச் அமைப்பை உருவாக்கியது யார்? : இந்திய ரயில்வே துறையினரின் மேற்பார்வையில், ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலைகள் அமைப்பு (RDSO) உடன் மூன்று இந்திய நிறுவனங்களுடன் இணைந்து உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது. கவச் அமைப்பு உருவாக்கத்திற்கான மொத்த செலவு ரூ.16.88 கோடி ஆகும்.

கவச் அமைப்பு இல்லாதது ஏன்?: கவச் அமைப்பு 10,000 கி.மீ தூரத்திற்கு பொருத்தப்பட இந்திய ரயில்வே டெண்டர் விட முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை, 6,000 கி.மீ தூரம் வரையிலான கவச் அமைப்புக்கான டெண்டர் மட்டுமே விடப்பட்டுள்ளது.

இதில் தென் மத்திய ரயில்வேயில் 1,465 கி.மீ தடங்களிலும் 139 ரயில்களிலும் மட்டுமே கவச் அமைப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஆனால் குவஹாத்தி வழித்தடத்தில் கவச் இல்லை என்று ரயில்வே வாரியம் ஜெய வர்மா சின்ஹா ​​கூறினார்.

concor நிறுவனம்: கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில், மத்திய அரசுக்குச் சொந்தமான concor நிறுவனத்தின் ரயில் பெட்டிகளை கொண்ட சரக்கு ரயில் மீது மோதியுள்ளது. கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CONCOR) என்பது ஒரு இந்திய பொதுத்துறை நிறுவனமாகும்.

CONCOR நிறுவனம் கண்டைனர் போக்குவரத்து மற்றும் கண்டைனர் கையாளும் பணியில் ஈடுபட்டுள்ளது. மத்திய அரசு இந்திய நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் மார்ச் 1988 இல் இந்த நிறுவனத்தை உருவாக்கியது. CONCOR மூன்று முக்கிய வணிகங்களை இயக்குகிறது: கார்கோ கேரியர்; டெர்மினல் ஆப்ரேட்டர், கிடங்கு ஆப்ரேட்டர் & MMLP செயல்பாடு ஆகிய பணிகளைச் செய்து வருகிறது.

மத்திய அரசின் தனியார்மயமாக்கல் திட்டத்தில் CONCOR நிறுவனமும் உள்ளது. தற்போது CONCOR நிறுவனத்தில் இந்திய அரசு சுமார் 54.8 சதவீத பங்குகளை வைத்திருக்கும் வேளையில், இதில் 30.8 சதவீத பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள ருரிதாஷா பகுதியில் CONCOR நிறுவனத்திற்குச் சொந்தமான பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில், கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, சீல்டா கிழக்கு ரயில்வே ரங்கபானி நிலையத்தில் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது ரயில்வே துறை அமைச்சகம். மூத்த டிக்கெட் பரிசோதகரான ராஜு பிரசாத் யாதவ் கூறுகையில், "இதுவரை எந்த தகவலும் எங்களிடம் வரவில்லை. இரு பெண்கள் விசாரிக்க வந்திருந்தார்கள்..." என்றார்.

"வடக்கு எல்லைப்புற ரயில்வே மண்டலத்தில் ஏற்பட்டு உள்ள விபத்து, மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. ரயில்வே, தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை (SDRF) ஆகியவை ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றன. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். மூத்த அதிகாரிகள் விபத்து தளத்தை சென்றடைந்துள்ளனர்" என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+