காஞ்சிபுரம்: 2023ஆம் நிதியாண்டில் இந்தியா மிகப்பெரிய மின்னணுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக உருவெடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு மின்னணு ஏற்றுமதியில் நம்பர் 1 இடத்தை அடைந்துள்ளது.
2024ஆம் நிதியாண்டில் அனைத்து மின்னணுப் பொருட்களின் தமிழ்நாட்டின் ஏற்றுமதி மட்டும் 40% க்கும் மேல் ஆகும். இதற்கு முன், 2022ஆம் நிதியாண்டு வரை உத்தரப் பிரதேசமும் கர்நாடகவும், முன்னணியில் இருந்தன. இருப்பினும், சில ஆண்டுகளில், தமிழ்நாடு மட்டுமே மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் அதன் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, மற்ற மாநிலங்கள் அவற்றின் எண்ணிக்கை குறைந்துவிட்டன.

கடந்த ஆண்டுகளில் பார்க்கும் பொழுது, இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் எலக்ட்ரானிக் பொருட்கள் துறையின் பங்கு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது, முக்கியமாக தமிழ்நாட்டின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. இந்த வளர்ச்சியானது ஸ்மார்ட்போன் ஏற்றுமதியின் அதிகரிப்பால் இருக்கிறது. கடந்த இரண்டு
நிதியாண்டுகளில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களில் கிட்டத்தட்ட 40% தமிழ்நாட்டில் சென்னை அருகே அமைந்துள்ள காஞ்சிபுரத்தில் இருந்து வெவ்வேறு நாடுகளுக்கு எக்ஸ்போர்ட் செய்யப்பட்டவை. இந்த எலக்ட்ரானிக் பொருட்கள், முக்கியமாக மொபைல் போன்கள்,அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நெதர்லாந்திற்கும் போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஏப்ரல் 2023 மற்றும் ஜனவரி 2024 க்கு இடைப்பட்ட காலத்தில், தமிழ்நாடு 7.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது, இது FY22 ஐ விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம். 2022 ஆம் நிதியாண்டில் 1.9 பில்லியன் டாலர்.
2024ஆம் நிதியாண்டில், தமிழ்நாட்டின் ஏற்றுமதி உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவையும் சேர்த்து, மொத்த ஏற்றுமதியை விட அதிகம். சுமார் $6.7 பில்லியன். இந்த இரண்டு மாநிலங்களும் மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய மாநிலங்களாக இருந்தன. மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு குறிப்பிடத்தக்க அளவில் முன்னிலை பெற்றுள்ளது என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. இதற்கிடையில், மற்ற மாநிலங்களான குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து மின்னணு பொருட்களின் ஏற்றுமதி சமீப ஆண்டுகளாக பின்தங்கி உள்ளது.
இந்தியாவின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதிகள் பெரும்பாலும் இரண்டு பெரிய சந்தைகளில் விற்கப்படுகின்றன அவை அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ். 2024 நிதியாண்டில், பிப்ரவரி வரை, இந்தியாவின் எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 35% ஐ அமெரிக்கா வாங்கியது, இது $8.7 பில்லியன் மதிப்புடையது, அதே நேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் $3 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை வாங்கியது, இது சுமார் 12% ஆகும். இந்தியாவின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து தலா 5% பொருட்களை வாங்கியுள்ளது.
2024 நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் பல்வேறு வகையான பொருட்களின் அடிப்படையில் இன்ஜினியரிங் கூட்ஸ் அதிகபட்சமாக $98 பில்லியன், பெட்ரோலியம் கூட்ஸ் $78 பில்லியன், ரத்தினங்கள் மற்றும் கோல்ட் $30 பில்லியன், மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் $25 பில்லியன் . இதற்கு நேர்மாறாக, 2018 நிதியாண்டில், மின்னணு பொருட்கள் முதல் 10 ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் இடம் பெறவில்லை மற்றும் ஏற்றுமதியில் $0.8 பில்லியன் மதிப்பை மட்டுமே கொண்டிருந்தது.
இதனை வைத்து பார்க்கும்போது, கடந்த இரண்டு நிதியாண்டுகளில் (2023 மற்றும் 2024) தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள் இந்தியாவின் மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க பெரிதும் உதவியது,
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications