டெல்லி: தலைநகர் டெல்லியில் வெங்காயத்தின் விலை உச்சத்தை எட்டிருக்கும் நிலையில் விலையை குறைக்கும் நடவடிக்கையாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் டெல்லிக்கு வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் நாட்டில் அதிகம் வெங்காயம் விளையும் பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாங்கி இருப்பு வைத்துள்ளது.
தற்போது தலைநகர் டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை அடுத்து தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் கொள்முதல் செய்த வெங்காயத்தை, தட்டுப்பாடு நிலவும் பகுதிகளுக்கு கொண்டு செல்ல அரசு ரயில்வேயின் உதவியை நாடியுள்ளது.

இதன் முன்முயற்சியால் 1600 மெட்ரிக் டன் வெங்காயம் ரயில்கள் மூலம் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து டெல்லிக்கு கொண்டுவரப்பட இருக்கிறது. 20ஆம் தேதி இந்த ரயிலானது டெல்லி ரயில் நிலையத்தை வந்து அடையும் என மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ரயிலில் 1600 டன் வெங்காயம் நாசிக்கிலிருந்து ”காந்தா விரைவு ரயில்” மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் இந்த ரயில் 20ஆம் தேதி டெல்லி வந்தடையும் என்றும் கூறியுள்ளார்.
இந்த வெங்காயமானது டெல்லியில் விற்பனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பண்டிகை காலத்தில் நுகர்வோருக்கு போதுமான அளவு வெங்காயம் கிடைப்பது உறுதி செய்யப்படும் என கூறியுள்ளார்.
மேலும் முதன்முறையாக ரயில் ரேக்குகள் மூலம் அதிகமான அளவில் வெங்காயம் கொண்டு வரப்படுகிறது என்றும் இதே வெங்காயத்தை சாலை மார்க்கமாக கொண்டு வரும்போது 84 லட்சம் ரூபாய் செலவாகும் ஆனால் ரயில் மூலம் கொண்டு வரும்போது 70 லட்சம் ரூபாய் செலவாகிறது என தெரிவித்துள்ளார்.
இந்த வெங்காயமானது டெல்லியில் மானிய விலையில் ஒரு கிலோ 35 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்படும் என அவர் கூறுகிறார்.
மேலும் வாரணாசி,அசாம், நாகலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் ரயில்கள் மூலம் வெங்காயத்தை கொண்டு செல்வதற்கு திட்டமிட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார். கடந்த செப்டம்பர் 5 முதல் கிலோவுக்கு 35 ரூபாய் என்ற விலையில் நாடு முழுவதும் உள்ள முக்கிய விற்பனை நிலையங்கள் வழியாக அரசு வெங்காயத்தை விற்பனை செய்து வருகிறது.
இதுவரை சுமார் 92,000 மெட்ரிக் டன் வெங்காயம் நாசிக் மற்றும் பிற கொள்முதல் மையங்களில் இருந்து சாலை மார்க்கமாக லாரிகளில் நுகர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது ரயில்கள் பெட்டிகள் பயன்படுத்தப்படுவதால் எளிமையாக இதனை அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Written by: Devika
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications