கங்கனா ரனாவத் MP சம்பளம் எவ்வளவு தெரியுமா? அம்மாடியோ இவ்வளவு நன்மைகளா!

சென்னை: நமக்கு பிடித்த பிரபலங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களின் சம்பளம், அவர்கள் உபயோகிக்கும் பொருட்கள், துணிகளின் விலை, மேலும் அவர்கள் பயணிக்கும் வாகனங்களின் விலையைப் பற்றித் தெரிந்து கொள்ள நமக்கு ஆர்வமாக இருக்கும். அவ்வாறு நீங்கள் ஆர்வம் உள்ளவராக இருந்தால் இந்தப் பதிவு உங்களுக்காக தான்.

சில மாதங்களுக்கு முன்பு வெளியான சந்திரமுகி பாகம் 2-இல் நடித்த கங்கனா ரனாவத், தற்போது நடந்து முடிந்த 2024ஆம் ஆண்டின் லோக்சபா தேர்தலில் ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் வெற்றி பெற்று தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார். அரசியல்வாதியாக மாறிய நடிகை கங்கனா ரனாவத், தற்போது நாடாளுமன்ற உறுப்பினரின் சம்பளத்திற்கும் சலுகைகளுக்கும் தகுதி பெற்றுள்ளார். கங்கனா ரனாவத் ஒரு எம்பி-யாக (MP) பெரும் அனைத்து நன்மைகளையும் பின்வருமாறு பார்ப்போம்.

கங்கனா ரனாவத் MP சம்பளம் எவ்வளவு தெரியுமா? அம்மாடியோ இவ்வளவு நன்மைகளா!

மாத சம்பளம்: பண வீக்கம் மற்றும் அதிகபடியான வாழ்க்கை செலவை கட்டுப்படுத்த 2018-இல் ஊதிய உயர்வு ஏற்பட்டது. அந்த ஊதிய உயர்வுக்குப் பிறகு ஒரு MP-இன் அடிப்படை சம்பளம் மாதம் ரூ. 1 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொகுதி கொடுப்பனவு: கங்கனா அவர் பகுதியில் உள்ள அலுவலகங்களை சீரமைக்கவும், பராமரிக்கவும், மேலும் வாக்காளர்களிடம் தொடர்பு கொள்வதற்கும் உதவித்தொகையாக மாதம் ரூ.70,000 ரூபாயைப் பெறுகிறார்.

அலுவலக செலவுகள்: தொலைத்தொடர்பு, ஊழியர்களின் சம்பளம் எனும் அலுவலக செலவுகளுக்காக மாதம் ரூ.60,000 தரப்படுகிறது. இதில் இன்னும் பல செலவுகள் அடங்கும்.

தினசரி கொடுப்பனவு: பாராளுமன்ற கூட்டமைப்பு மற்றும் குழு கூட்டங்களின் கலந்து கொள்ளும்போது, ​​ அவர் தேசிய தலைநகரான டெல்லியில் தங்கும் நிலை ஏற்படும். ஆகவே அவருக்கு தங்கும் இடம், உணவு மற்றும் இதர செலவுகளுக்கு தினசரி ரூ. 2,000 ரூபாய் தரப்படுகிறது.

பயணப்படி: MP-க்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு வருடத்தில் 34 இலவச உள்நாட்டு விமானப் பயணங்களுக்கு உரிமை உண்டு. தொழில் சம்பந்தமாகவோ அல்லது தனிப்பட்ட நோக்கங்களுக்காகவோ அவர்கள் முதல் வகுப்பு ரயில் பயணத்தையும் மேற்கொள்ளலாம்.

வீடு மற்றும் தங்குமிடம்: MP-க்களுக்கு அவர்களின் 5 ஆண்டு காலத்தின் போது, ​​பங்களாக்கள், பிளாட்கள் அல்லது தங்கும் விடுதி அறைகள் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் வாடகை இல்லாமல் தங்கும் வசதிகள் சீனியாரிட்டி அடிப்படையில் வழங்கப்படும். உத்தியோகபூர்வ தங்குமிடங்களைப் பயன்படுத்தாதவர்கள் மாதத்திற்கு ரூ. 2,00,000 வீடமைப்புப் படியைப் பெறலாம்.

மருத்துவ வசதிகள்: கங்கனா மற்றும் அவருக்கு நெருங்கிய குடும்பத்தினர் மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் (CGHS) கீழ் இலவசமாக மருத்துவம் பெறலாம். இதில் அரசு மற்றும் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.

மற்றவை: MP-க்களுக்கு ஒரு வருடத்திற்கு ரூ. 1,50,000 இலவச தொலைபேசி அழைப்புகளும் அவர்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இலவச அதிவேக இன்டர்நெட் வசதிகளும் செய்து தரப்படுகிறது. மேலும் அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 50,000 யூனிட் வரை இலவச மின்சாரமும், 4,000 கிலோ லிட்டர் இலவச தண்ணீரும் வழங்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+