இந்திய சினிமாவை புரட்டிப்போட்ட கன்னட படமான காந்தாரா-வின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, நீண்ட நாள் எதிர்பார்க்கப்பட்ட பிரிக்வெல் படமான காந்தாரா சாப்டர் 1 அக்டோபர் 2ஆம் தேதியன்று தியேட்டர்களில் வெளியானது. ரிஷப் ஷெட்டியின் தொடர் முயற்சி பெரிய வசூலை முதல் நாளிலேயே கொடுத்துள்ளது.
காந்தாரா சாப்டர் 1 படம் நாட்டின் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதால் பல மொழிகளில் வெளியாகியுள்ளது. முதல் படத்தின் ரசிகர்கள் இந்த பிரிக்வெல் படத்தை மிகுந்த ஆர்வத்துடன் நாடு முழுவதும் முதல் நாளிலேயே தியேட்டருக்கு சென்று பார்த்தனர்.

காந்தாரா சாப்டர் 1 பட்ஜெட்
ரிஷப் ஷெட்டி உருவாக்கிய இந்த காந்தாரா உலகம் காலம் கடந்தும் நிற்கும் வகையில் அமைந்துள்ளது மட்டும் அல்லாமல் வரலாற்றையும், ஆன்மீகத்தையும், மக்களின் வாழ்க்கையை இணைக்கும் படமாக காந்தாரா சாப்டர் 1 உருவாகியுள்ளது. Hombale Films நிறுவனம் தயாரித்த இந்த படம் சுமார் 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கியிருக்கிறது.
பாக்ஸ் ஆபீஸ்
காந்தாரா சாப்டர் 1 படம் முதல் நாளிலேயே ரூ.60 கோடி வசூல் செய்து புதிய வரலாறு படைத்துள்ளது. கர்நாடகாவை மையமாகக் கொண்ட இந்தப் படம், தென்னிந்தியாவிலிருந்து வட இந்திய வரை அதிகளவிலான ரசிகர்களை ஈர்த்து, இந்த ஆண்டின் மிகப்பெரிய ஓப்பனர்களில் ஒன்றாக மாறியுள்ளது. காந்தாரா-வின் முதல் பாகத்தின் வெற்றி தான் 2வது பாகத்தின் முதல் நாள் பிரம்மாண்ட வசூலுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
முதல் நாள் வசூல்:
காந்தாரா சாப்டர் 1 படத்தின் முதல் நாள் வசூல், கன்னடாவில் ரூ.18 கோடி, தெலுங்கில் ரூ.12.5 கோடி, ஹிந்தியில் ரூ.19.5 கோடி, தமிழில் ரூ.5.25 கோடி, மலையாளத்தில் ரூ.4.75 கோடி என பல மொழி வாரியாக பங்களித்துள்ளது என sacnilk வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவித்துள்ளது. இந்த வசூல் மூலம் படத்தின் கன்னட திரையுலம் மீண்டும் ஒரு பான்-இந்தியா படத்தை வெளியிட்டு பான் இந்தியா ரசிகர்களை ஈர்த்துள்ளது.
கர்நாடகாவில் முதல் நாள் காலை ஷோக்கள் 73.56% ஆக்குபன்சி, மதிய ஷோக்கள் 96.14%, மாலை ஷோக்கள் 90.78%, இரவு ஷோக்கள் 92.04% என தொடர்ந்து அதிகப்படியான டிக்கெட்களை விற்பனை செய்தது. காந்தாரா சாப்டர் 1 படத்திற்கு கர்நாடாக மாநிலம் முழுவதும் பிரம்மாண்ட வரவேற்பு இருந்து வருகிறது.
OTT வசூல்
இதேபோல் காந்தாரா சாப்டர் 1 படத்தின் OTT உரிமையை Hombale Films நிறுவனம் அமேசான் ப்ரைம்-க்கு கொடுத்துள்ளதாகவும், இதன் மதிப்பு 125 கோடி ரூபாய் என பிக்வில்லா தெரிவித்துள்ளது.
இந்த வருட பிளாக்பஸ்டர்
முதல் நாள் வசூல் அளவில் பார்க்கும் போது இந்த வருடம் வெளியான படங்களில் சையாரா (ரூ.22 கோடி), சிகந்தர் (ரூ.26 கோடி), சாவா (ரூ.31 கோடி) பதிவு செய்துள்ளது. ஆனால் காந்தாரா சாப்டர் 1 அனைத்தையும் உடைத்து ரெக்கார்களை அள்ளியுள்ளது.
காந்தாரா சாப்டர் 1, இந்தியாவின் பாக்ஸ் ஆஃபிஸ் வரலாற்றில் புதிய அளவுகோலை அமைத்துள்ளது. ரிஷப் ஷெட்டியின் இயக்கமும், அவரது முக்கிய பாத்திரமும், படத்தை தேசிய அளவில் பிரபலப்படுத்தியுள்ளன. இந்த வெற்றி, கன்னட சினிமாவின் வலிமையை மீண்டும் நிரூபிக்கிறது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications