46 வயதான ரேப்பர் பாடல் இசைக்கலைஞரான கன்யே வெஸ்ட் தனது பற்களை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக டைட்டானியம் உலோகத்தால் ஆன பற்களை கட்டியுள்ளார். தனது டைட்டானியம் பற்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கன்யே வெஸ்ட் பகிர்ந்துள்ளார்.
ஸ்பை ஹூ லவ்டு மீ, மூன்ரேக்கர் ஆகிய ஜேம்ஸ்பாண்டு படங்களில் நடித்த வில்லன் ஜாஸ் தனது உலோகப் பற்களால் படத்தில் பயமுறுத்துவார். அவருடன் கய்னே வெஸ்ட் ஒப்பிட்டு விமர்சிக்கப்படுகிறார்.

கய்னே வெஸ்ட்டின் இந்த ஆடம்பரமான புதிய செயற்கைப் பற்கள் 'வைரங்களை விட விலை அதிகம்' என்றும், அவற்றை மிக நுணுக்கமாக இதை வடிவமைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த செயற்கை பல்செட்டின் விலை 850,000 அமெரிக்க டாலர்கள் என்று கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் இது ரூ. 7.07 கோடி ஆகும்.
18.7 மில்லியன் ஃபாலோயர்களை கொண்ட வெஸ்டின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில், செயற்கைப் பற்களின் புகைப்படங்கள் மற்றும் பாண்ட் வில்லன் ஜாஸுடன் ஒப்பிடப்பட்டு கருத்துகள் பதிவிடப்பட்டு உள்ளது.
2010 ஆம் ஆண்டில், "ஹார்ட்லெஸ்" பாடகர் தனது பற்களின் கீழ் வரிசை முழுவதையும் அகற்றி, வைரம் மற்றும் தங்க இம்பிளாண்டுகளை வைத்ததாகக் கூறினார்.
கன்யே வெஸ்ட் தனது 850,000 அமெரிக்க டாலர் மதிப்பிலான செயற்கைப் பற்கள் நிரந்தரமானவை என்று கூறியுள்ளார். இவை 'நிலையான புரோஸ்டோடோன்டிக்ஸ்' என்று அழைக்கப்படுகின்றன. இது ஒரு வகையான பரிசோதனை பல் மருத்துவம். 'பேஜ் சிக்ஸ்' படி, "இது வெனியர்ஸ் அல்லது கிரில்ஸ்களுக்கு அப்பாற்பட்டது. இந்த குறிப்பிட்ட இம்பிளாண்ட் முன்பு செய்யப்பட்ட எதையும் போலல்லாமல் உள்ளது."
வெஸ்ட் தனக்கு சிகிச்சை அளித்த 'வைர பல் மருத்துவத்தின் தந்தை' டாக்டர் தாமஸ் கான்னெல்லியுடன் இணைந்து, பல்லேடியம் மற்றும் பிளாட்டினம் ஆகியவற்றால் ஆன பற்களை பொருத்தியுள்ளார்.
2010 ஆம் ஆண்டு 'தி எலன் டிஜெனெரஸ் ஷோ' நிகழ்ச்சியின் எபிசோடில் பங்கேற்று, அவர் தனது கீழ்ப் பற்களை வெளியே எடுத்ததாகக் கூறினார். கன்யே வெஸ்ட்டுக்கு பிரத்யேகமாக இந்த டைட்டானியம் பல்செட்டை பல் மருத்துவர் நவோகி ஹயாஷி வடிவமைத்தார்.
அதை டாக்டர் தாமஸ் கான்னெல்லி அறுவை சிகிச்சை மூலம் பாடகர் கன்யே வெஸ்ட்டுக்குப் பொருத்தினார். இந்தப் பல்செட்டுடன் கன்யே வெஸ்ட் சௌகரியமாக உள்ளார் என்று டாக்டர் தாமஸ் கான்னெல்லி கூறினார்.
ரூ.7.07 கோடி மதிப்பிலான இந்த டைட்டானியம் பல்செட் கன்யே வெஸ்ட்டுக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications