டெல்லி: இந்தியாவில் பொருளாதார சட்டத்தை அமல்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட ஒரு துறை தான் அமலாக்கத்துறை. நாட்டில் மத்திய அரசு வகுத்துள்ள பொருளாதார சட்டங்களை அமல்படுத்துவது, முறைகேடுகளை விசாரிப்பது என இந்த அமைப்பு செயல்படுகிறது.
அமலாக்கத்துறை: டெல்லியை தலைமையிடமாக கொண்டு அமலாக்கத்துறை செயல்படுகிறது. அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் மற்றும் பண மோசடி சட்டம் ஆகிய இரண்டு நிதிச் சட்டங்களின் விதிகளை செயல்படுத்தும் அதிகாரம் கொண்ட அமைப்பாக அமலாக்கத்துறை இருக்கிறது. இந்த அமலாக்கத்துறை துறையில் அதிகாரியாக இருந்து இரண்டு முதல்வர்களை கைது செய்த ஒரு ஒரு அதிகாரி திடீரென தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார்.

2 முதலமைச்சர்கள் கைது: டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகிய இருவரையும் கைது செய்தவர்தான் அமலாக்கத்துறை முன்னாள் அதிகாரியான கபில் ராஜ். 2009 ஆம் ஆண்டு பிரிவு இந்திய வருவாய் பணி அதிகாரி இவர். கபில் ராஜ் 16 ஆண்டு காலம் மத்திய அரசில் பணியாற்றி வந்த நிலையில் திடீரென தன்னுடைய வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். மத்திய அரசும் அவருடைய ராஜினாமாவை ஏற்றுக் கொண்டிருக்கிறது.
திடீரென ராஜினாமா: உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கபில் ராஜ் பிடெக் பட்டதாரி. அரசு பணியில் ஆர்வம் கொண்டு இந்திய வருவாய் பணி அதிகாரியாக பணியில் சேர்ந்தார். 8 ஆண்டு காலம் அமலாக்க துறையில் வேலை செய்து வந்த இவர் அண்மையில் தான் டெல்லி சரக்கு மற்றும் சேவைகள் வரி புலனாய்வு பிரிவின் கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். அமலாக்கத்துறை அதிகாரியாக இருந்த போது குற்றம்சாட்டப்பட்டவர்களை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்துவதில் வல்லராக இருந்தார்.

அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தவர்: நில முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை கடந்த ஆண்டு ஜனவரியில் கபில் ராஜ் தலைமையிலான அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு கைது செய்து விசாரணை நடத்தியது. அதேபோல கலால் முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முதலமைச்சராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்த அதிகாரிகள் குழுவுக்கு தலைமை வகித்தவர் தான் கபில் ராஜ்.
கேள்விகளால் திணறடிக்க செய்பவர்: சட்டப்படி சோதனை நடத்துவது, குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டு திணறடிக்க செய்வது என இவர் ஒரு திறமையான அதிகாரி என்கிறது அமலாக்கத்துறை வட்டாரங்கள். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு செய்த வழக்கில் வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவருடைய உறவினர் மெகுல் சோக்ஷிக்கு எதிராக விசாரணை மேற்கொண்டுள்ளார்.
என்ன காரணத்திற்காக ராஜினாமா: இந்த நிலையில் அவர் திடீரென தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். தனிப்பட்ட காரணங்களுக்காக தான் பணியை ராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்திருக்கிறார். இன்னும் 15 ஆண்டு காலம் வேலை செய்வதற்கான வயது இருக்கும் நிலையில் அவர் திடீரென வேலையை ராஜினாமா செய்திருப்பது பேசு பொருளாக மாறி இருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications