சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான அதானி குழுமம் அடுத்த 10 ஆண்டுகளில் தனது விமான நிலைய வர்த்தகத்தில் சுமார் ரூ.60,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது என்று அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கரண் அதானி தெரிவித்தார்.
இதில் மும்பை விமான நிலையத்தின் முதல் கட்ட கட்டுமானத்திற்காக அதானி குழுமம் அறிவித்திருந்த 18,000 கோடி ரூபாய் இல்லாமல், தனிப்பட்ட முறையில் இந்த 60000 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த முதலீட்டை வைத்து அதானி குழுமம் ரன்வே, விமானத்தின் டாக்சி-வே, விமான நிறுத்துமிடம், விமான முனையங்கள் போன்ற விமான நிலைய உள்கட்டமைப்பு வசதிகள் மட்டுமல்லாமல், ஹோட்டல்கள் மற்றும் ஷாப்பிங் மால்கள் போன்ற நகரப்பகுதி உள்கட்டமைப்பு வசதிகளிலும் இந்த முதலீடு செலவிடப்படும் என்று கரண் அதானி தெரிவித்தார்.
மேலும் இதற்கான நிதியை நிறுவனத்தின் சொந்த லாபத்திலிருந்தே நிதி திரட்டப்படும் என்றும் கரண் அதானி தெரிவித்தார். அதாவது கடன் பெறாமல் இந்த முதலீட்டுக்கான நிதியை திரட்ட உள்ளதாக தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும் கரண் அதானி கூறுகையில் இந்தியாவில் விமான போக்குவரத்து வடிவங்கள் மாற்றம் அடைய உள்ளதாக எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து செய்யப்பட்டும் பன்னாட்டு பயணங்கள் முதன்மையாகப் பெருநகர விமான நிலையங்கள் வழியாகவே நடைபெறும் என்ற நிலை விரைவில் மாறும் என்பதை தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
இனிவரும் காலங்களில் இந்தியாவில் பல விமான நிலையங்கள் பன்னாட்டு பயணங்களை மேற்கொள்ளும் முக்கிய முனையாக செயல்படும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் கரண் அதானி தெரிவித்தார்.
அதானி குழும தலைவரான கவுதம் அதானியின் மூத்த மகன் தான் கரண் அதானி. விமான நிலைய வியாபாரம் லாபகரமாக மாறியதும், அதனை பங்குச்சந்தையில் பட்டியலிட திட்டமிட்டுள்ளதாகவும் கரண் அதானி தெரிவித்தார்.
அதானி குழுமம் 2019 ஆம் ஆண்டில் லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், கவுகாத்தி, திருவனந்தபுரம் மற்றும் மங்களூர் ஆகிய ஆறு விமான நிலையங்களை இயக்குவதற்கான உரிமங்களை மத்திய அரசிடம் நீண்ட கால ஒப்பந்தமாகப் பெற்றது.இதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டில், ஜிவி கே குழுமத்திடம் இருந்து மும்பை மற்றும் கட்டி முடிக்கப்பட்டு வரும் நவி மும்பை விமான நிலையத்தையும் இக்குழுமம் கையகப்படுத்தியது.
இதன் மூலம் எட்டு விமான நிலையங்களைக் கொண்ட இந்தக் குழுமம், 2040 ஆம் ஆண்டுக்குள் 250 முதல் 300 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறனை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அதானி ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அருண் பன்சால் தெரிவித்தார்.

தற்போது இயங்கி வரும் ஏழு விமான நிலையங்களில் சுமார் 73 மில்லியன் பயணிகள் பயணிக்கின்றனர். 1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், சுமார் 300 மில்லியன் மக்கள் மட்டுமே இன்று விமான பயணம் செய்கின்றனர் என்று கூறிய பன்சால் இதில் அதிகப்படியான வளர்ச்சி வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவில் இருக்கும் விமான நிறுவனங்கள் தற்போது 700 விமானங்களை கொண்டு இயங்கி வரும் வேளையில், புதிதாக ஆர்டர் செய்யப்பட்டு உள்ள விமானங்கள் மூலம் இதன் எண்ணிக்கை 2030-க்கு 3000 ஆக உயரும் வாய்ப்பை கொண்டு உள்ளது. இதன் பாதையில் தற்போது இருக்கும் 300 மில்லியன் விமான பயணிகள் 1 பில்லியன் ஆக அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார் அருண் பன்சால்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications