இந்திய கோடீவரரான கௌதம் அதானியின் மகன் கரண் அதானி, அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் எக்கனாமிக் ஜோனின் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக அந்த நிறுவனத்தின் சிஇஓவாக கரண் அதானி பதவி வகித்தார்.
அதானி குரூப்பின் தலைவரான கௌதம் அதானி இதுவரை அந்த நிர்வாக இயக்குநர் பதவியை வகித்து வந்தார். தன் மகனுக்கு வழிவிட்டுள்ள கௌதம் அதானி இப்போது அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் எக்கனாமிக் ஜோனின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் எக்கனாமிக் ஜோனின் புதிய சிஇஓ-ஆக நிஸான் மோட்டார்ஸின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக இருந்த அஷ்வனி குப்தா நியமிக்கப்பட்டார்.
அமெரிக்காவில் உள்ள பர்டியூ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பை கரண் அதானி முடித்து, 2009இல் அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் வேலைக்கு சேர்ந்தார். 2016இல் சிஇஓவாக பதவியேற்று, இப்போது அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் எக்கனாமிக் ஜோனின் நிர்வாக இயக்குநராக உள்ளார். இதன் சந்தை மதிப்பு ரூ.2,36,000 கோடி ஆகும்.
அதானி குரூப்பின் அன்றாட வேலைகளை செயல்படுத்துவதில் முக்கியப் பங்கை கரண் வகித்துவந்தார். அத்துடன் 2022 செப்டம்பரில் இருந்து கரண் அதானி ஏசிசி என்ற சிமெண்ட் உற்பத்தி நிறுவனத்தின் இயக்குநராகவும் பதவி வகித்தார்.
கரண் அதானி பரிதி ஷெராஃபை திருமணம் செய்து கொண்டார். இவர் சிரில் அமர்சந்த் மங்கள்தாஸ் சட்ட நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரரான சிரில் ஷெராஃபின் மகள் ஆவார். இதன் மூலம் கரண் அதானிக்கு உள்ள சக்தி வாய்ந்த தொடர்புகளில் புதியதொரு வரவாக வந்து சேர்ந்தார் பரிதி ஷெராஃப். கரண் அதானிக்கும் பரிதி ஷெராஃபுக்கும் ஒரு மகள் இருக்கிறார்.
படிப்பு முடிந்தவுடனேயே கரண் அதானி தனது குடும்ப நிறுவனமான அதானி குரூப்பில் சேர்ந்து விட்டார். அப்போது நிதி, மார்க்கெட்டிங், ஆபரேஷன்ஸ் போன்ற பல துறைகளை நிர்வகித்து பன்முக அனுபவத்தைப் பெற்றார்.
கார்ப்பரேட் ஏணியில் மடமடவென உச்சாணிக்குச் சென்ற கரண் அதானி 2016இல் அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் எக்கனாமிக் ஜோனின் சிஇஓவாக ஆனார். அங்கு அவர் நிறுவனத்தின் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கை ஆற்றினார். அவரது தலைமையின் கீழ் பல புதிய துறைமுகங்கள், டெர்மினல்கள் உருவாகின.
அத்துடன் புதிதாக துறைமுகங்களை வாங்கியது மற்றும் இருக்கும் துறைமுகங்களை நிர்வகித்தது இவரது பாராட்டத்தக்க செயலாகும். இதன் மூலம் உலகளாவில் அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் எக்கனாமிக் ஜோன் நிறுவனம் மிக விரைவாக வளரும் துறைமுக ஆப்பரேட்டர்களில் ஒன்றாக உருவெடுத்தது.
அதானி போர்ட்ஸ் தவிர அம்புஜா சிமெண்ட்ஸின் நான்-எக்ஸிகியூட்டிவ் இயக்குநராக பணியாற்றினார். அம்புஜா சிமெண்ட்ஸ் வருடத்துக்கு ரூ.16,151 கோடியை ஈட்டியது. அதானி குரூப்பின் விமான புராஜெக்ட்டையும் நிர்வாகம் செய்தார் கரண் அதானி.
மேலும் மும்பை சார்ந்த சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான ஏசிசி லிமிடெட்டின் தலைவரானார். கரண் அதானியின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications