பெங்களூர்: கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடும் வேளையில் மக்கள் இனி சொந்த வீடு வாங்க வேண்டுமா என யோசித்து வரும் வேளையில், இனி வாகனங்களையும் கர்நாடகாவில் வாங்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கர்நாடகாவின் மாநிலத்தில் புதிய வாகனங்களைப் பதிவு செய்வதற்கான கட்டணத்தை உயர்த்தும் புதிய சட்டத்திற்குக் கர்நாடக ஆளுநர் தாவர்ச்சந்த் கெலாட் மார்ச் 6 ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன் மூலம் இனி பெங்களூரில் மட்டும் அல்லாமல் கர்நாடகாவின் மாநிலத்தில் எங்கு புதிய வாகனத்தை வாங்கினாலும் கூடுதல் வரி மற்றும் கட்டணத்தைச் செலுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. ஆனால் உண்மையில் இந்த வரி யாருக்கு பொருந்தும்.
கர்நாடக மோட்டார் வாகன வரி (திருத்தம்) சட்டம், 2024: இது என்ன சொல்கிறது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இந்த புதிய சட்டத்தின் கீழ், போக்குவரத்து வாகனங்களுக்கு 3 சதவீதம் கூடுதல் கட்டணம் (Cess) வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. போக்குவரத்து வாகனம் எனில் டாக்சி அதாவது மஞ்சள் நிற நம்பர் பிளேட் கொண்ட வாகனங்களுக்கு இந்த புதிய வரி பொருந்தும்.
தனிநபர் பயன்பாடுக்காக வாங்கும் கார், பைக் போன்ற வொயிட் போர்ட் வாகனங்களுக்கு இந்த வரி பொருந்தாது. மேலும் இந்த கட்டணம் கர்நாடக மோட்டார் போக்குவரத்து மற்றும் பிற தொடர்புடைய தொழிலாளர் சமூக பாதுகாப்பு மற்றும் நல அமைப்பிற்குச் செல்லும் எனக் கூறப்பட்டு உள்ளது.
எலக்ட்ரிக் வாகனம்: கூடுதலாக, எலக்ட்ரிக் வாகனங்களுக்கு (EV) லைஃப் டைம் வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இப்போது உள்ளது. அதனை பயன்படுத்திக்கொண்டுள்ளது கர்நாடக அரசு.
இதன் வாயிலாக புதிய விதிகளின் படி எலக்ட்ரிக் கார், ஜீப், ஓம்னிபஸ் அல்லது தனிநபர் பயன்பாட்டுக்காக வாங்கப்படும் எலக்ட்ரிக் வாகனத்தின் விலை ரூ.25 லட்சத்திற்கு மேல் இருந்தால், பதிவு செய்யும் போது அதன் மதிப்பில் 10 சதவீத வரி lifetime tax ஆக விதிக்கப்படும்.
இந்த புதிய வரி அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும். ஆனால் 25 லட்சம் என்ற அளவீடு இருக்கும் காரணத்தால் அதிகமானோரைப் பாதிக்காது. கர்நாடக மாநிலத்தில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு இதுபோன்ற வரி விதிக்கப்படுவது இதுவே முதல் தடவை. இதுவரையில் எலக்ட்ரிக் வாகனங்களுக்குச் சாலை வரிக்கூட கர்நாடகாவில் இல்லை.
விலை உயர்வு: கர்நாடகாவில் ஏற்கனவே இந்தியாவில் அதிகப்படியான சாலை வரி விதிக்கப்பட்டு வருகிறது, சுமார் 13 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை வாகனங்கள் அடிப்படையில் விதிக்கப்பட்டு வருகிறது. இதோடு 11 சதவீத செஸ் வரியும் விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் போக்குவரத்து வாகனங்களுக்கு (வாடகை வாகனங்களுக்கு) விதிக்கப்படும் புதிய 3 சதவீத வரி, வர்த்தகத்திற்காக வாகனங்கள் வாங்குவோரை அதிகம் பாதிக்கும்.
புது சட்டம்: கர்நாடக மோட்டார் போக்குவரத்து மற்றும் பிற தொடர்புடைய தொழிலாளர் சமூக பாதுகாப்பு மற்றும் நல சட்டம், 2024, மார்ச் 6 ஆம் தேதி ஆளுநர் கெலாட் அவர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த சட்டம் போக்குவரத்துத் துறை தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு மற்றும் நலன் நடவடிக்கைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டம் மூலம் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், கேரேஜ்கள், பட்டறைகள் மற்றும் இதனைப் போன்ற நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தும்.
போக்குவரத்து துறையில் பணிபுரிபவர்களை அரசு ஊழியர்கள் மற்றும் நிர்வாக நிலைகளில் உள்ளவர்கள் போன்ற சில குழுக்களைத் தவிர்த்து, பணியாளர்கள் இச்சட்டத்தில் பலன் அடைவார்கள். இத்திட்டம் வாயிலாக இப்பிரிவு ஊழியர்களுக்கு விபத்து காப்பீடுகள், குழந்தைகளுக்கான கல்வி நிதியுதவி, மகப்பேறு சலுகைகள், ஓய்வூதிய திட்டங்கள் மற்றும் பல சலுகைகள் வழங்கப்பட உள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications