கர்நாடக அரசியலின் பட்ஜெட் கிங் என்று அழைக்கப்படும் முதல்வர் சித்தராமையா, தனது 17-வது பட்ஜெட்டை ஒரு வரலாற்று சிறப்புமிக்க இலக்குடன் தாக்கல் செய்துள்ளார். சுமார் 4.48 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த பட்ஜெட், வெறும் எண்களின் விளையாட்டு மட்டுமல்ல, இது சாமானிய மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு சோஷியல் இன்ஜினியரிங் மாடல். பள்ளி மாணவர்களின் பாதுகாப்பிற்காக சமூக வலைதளங்களுக்கு தடை, கல்லூரிகளில் சமூக நீதியை நிலைநாட்ட ரோஹித் வெமுலா சட்டம் மற்றும் ஏழை எளிய குழந்தைகளின் ஆரோக்கியத்தை காக்க இலவச இன்சுலின் பேனாக்கள் என இந்த பட்ஜெட்டில் அதிரடிகளுக்கு பஞ்சமில்லை.
ஐடி சிட்டியின் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிய பாய்ச்சலாகவும், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் கேரண்டி திட்டங்களின் தொடர்ச்சியாகவும் அமைந்துள்ள இந்த பட்ஜெட்டின் சிறந்த 10 அம்சங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

1. இந்தியாவிலேயே முதல் முறையாக குழந்தைகளின் மனநலம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தனி சட்டம் இயற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. ரோஹித் வெமுலா சட்டம் (Rohith Vemula Act) கல்வி நிறுவனங்களில் பட்டியலின (SC) மற்றும் பழங்குடியின (ST) மாணவர்கள் எதிர்கொள்ளும் சாதி பாகுபாடுகளை தடுக்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும் ரோஹித் வெமுலா சட்டம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது கல்லூரி மாணவர்களிடையே சாதிய பாகுபாடுகளை தடுக்க வழிவகுக்கும்.
3. சுகாதார துறையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை கொடுத்துள்ளது. இது டைப்-1 நீரிழிவு நோயால் (Type-1 Diabetes) பாதிக்கப்பட்ட 18 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச இன்சுலின் பேனாக்கள் மற்றும் குளுக்கோமீட்டர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4. மாநிலத்தின் வளர்ச்சியை 11 முக்கிய தூண்களாக பிரித்து 11G மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் நலத்திட்ட பொருளாதாரம், தரமான கல்வி, அனைவருக்கும் ஆரோக்கியம் போன்றவை அடங்கும்.
5. வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்க, பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள 56,432 பணியிடங்களை நிரப்பும் பணி இந்த ஆண்டே தொடங்கும். மேலும், வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
6. பெங்களூரு நகரில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்க, உலக வங்கி உதவியுடன் அடுத்த 5 ஆண்டுகளில் 5,000 கோடி ரூபாய் செலவில் விரிவான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
7. கிராமப்புற இளைஞர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்க, இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் உள்ள 50 அரசு கல்லூரிகளில் 10 கோடி ரூபாய் செலவில், நவீன AI டேட்டா லேப்கள் (AI Data Labs) அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏஐ வளர்ச்சியின் மத்தியில் இத்தகைய அறிவிப்பானது வந்துள்ளது மாணவர்களின் திறனை மேம்படுத்த உதவிகரமாகவும் இருக்கும்.
8. கர்நாடக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த 800 பள்ளிகள், கர்நாடக பப்ளிக் ஸ்கூல்களாக தரம் உயர்த்தப்படும். இதற்கு 3,900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
9. பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 2-வது சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கும். மேலும் மெட்ரோ ரயில் சேவையை 41 கி.மீ அளவிற்கு விரிவாக்கம் செய்யத் திட்டம் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மேற்கொண்டு பெருங்களூரின் வணிக வளர்ச்சிக்கும், ரியல் எஸ்டேட் சார்ந்த மற்ற வளர்ச்சிகளுக்கும் உதவிகரமாக இருக்கும்.
10. சிறுபான்மையின மாணவர்களுக்காக 25 புதிய விடுதிகள் அமைக்கப்படும். மேலும், வக்ஃப் சொத்துகளில் நவீன கற்றல் மையங்கள் மற்றும் சேவை மையங்கள் உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications