கர்நாடக முதல்வர் சித்தராமையா வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில் மாநிலத்தின் வருமானத்தை அதிகரிக்க மதுபானம் மீதான வரி உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் வீக்எண்ட், விடுமுறை நாட்களில் பெங்களூரில் நண்பர்கள் உடன் சரக்கு அடிக்க வரும் இளைஞர்களே உஷாரா இருங்க.
கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில் மதுபானங்கள் மீது மாநில அரசு விதிக்கும் கலால் வரி 20% உயர்த்தப்பட்டுள்ளது. கர்நாடக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்துள்ள ஐந்து முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அம்மாநில அரசு நிதி திரட்டும் முயற்சியில் மதுபானம் மீதான வரி உயர்த்தப்பட்டு உள்ளது.

பீர் மீதான கூடுதல் கலால் வரியை 175 சதவீதத்தில் இருந்து 185 சதவீதமாக உயர்த்த கர்நாடக அரசு முடிவு செய்து தனது பட்ஜெட் அறிக்கையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூரு விதான சவுதாவில் தனது 14வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தாக்கல் செய்த பட்ஜெட் இந்த மாத இறுதி வரை மட்டுமே என்று இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மாநில நிதி துறை இலாக்காவை வைத்திருக்கும் சித்தராமையா, தனது 14வது பட்ஜெட்டை அறிக்கையை இன்று தாக்கல் செய்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் இதுவரையில் எந்த ஒரு அமைச்சரும் 14 முறை பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்தது இல்லை, இதேபோல் முதலமைச்சராக அவர் பதவியேற்று ஏழாவது முறையாக பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்கிறார் சித்தராமையா.

கர்நாடக முதல்வர், இந்த வருடத்திற்கான மாநிலத்தின் பட்ஜெட் மதிப்பு 3,35,000 கோடி ரூபாயாக இருக்கும் என்றும், இது முந்தைய பட்ஜெட்டின் அளவை விட 25,000 கோடி ரூபாய் அதிகம் என்றும் கூறியிருந்தார். முந்தைய பாஜக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் அளவு ₹3.08 லட்சம் கோடி.


Click it and Unblock the Notifications