கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூரு விதான சவுதாவில் தனது 14வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் அறிக்கையில் 2022-23 ஆம் நிதியாண்டில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 7.9 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா இந்த பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்யும் போது வணிகத் துறையிலிருந்து 1,01,000 கோடி ரூபாய், கலால் துறையிலிருந்து 36,000 கோடி ரூபாய், முத்திரைகள் மற்றும் பதிவுத் துறையிலிருந்து 25,000 கோடி ரூபாய் என மூன்று துறைகளில் இருந்து மொத்தம் 1,62,000 கோடி ரூபாய் அளவிலான வருவாயை வசூல் செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் 10 கிலோ இலவச அரிசி பெறும் அன்ன பாக்யா திட்டத்திற்கு (Anna Bhagya scheme) ஆண்டுக்கு 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். இத்திட்டத்தின் மூலம் 4.42 கோடி மக்கள் பயன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு குடும்பத்தின் பெண் தலைவருக்கும் மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவி வழங்கும் க்ருஹ லட்சுமி திட்டத்திற்கு (Gruha Lakshmi scheme), சித்தராமையாவின் 14வது பட்ஜெட்டில் ₹24,166 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் புதிய இந்திரா கேன்டீன்கள் அமைக்கவும், தற்போதுள்ள கேன்டீன்களை மேம்படுத்தவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். இந்திரா கேன்டீன் என்பது தமிழ்நாட்டில் இருக்கும் அம்மா உணவகம் போன்றது.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளுக்காக கர்நாடகாவில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள காங்கிரஸ் அரசு சுமார் 45,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது பட்ஜெட் அறிக்கையில் மொத்த பட்ஜெட் தொகையில் சுமார் 11 சதவீதம் அதாவது 37,587 கோடி ரூபாய் தொகையை கல்விக்காக மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளார். இதோடு பெண் மற்றும் குழந்தை நலனுக்காக 24,166 கோடி ரூபாய் மொத்த தொகையில் 7 சதவீதம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications