பால் விலையை தொடர்ந்து பேருந்து கட்டணமும் உயர்கிறதா? பெங்களூரு மக்களுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி..!!

நமது அண்டை மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் ஏராளமான தமிழ் மக்கள் வசிக்கின்றனர். தினம் தோறும் வேலை மார்க்கமாக ஆயிரக்கணக்கான மக்கள் ஓசூர், கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூருவுக்கு சென்று வருகின்றனர். இதனால் கர்நாடகா அரசு எடுக்கும் எந்த ஒரு முடிவும் தமிழ்நாட்டு மக்களையும் பாதிக்கிறது.

கர்நாடக அரசு நேற்று தான் நந்தினி பால் விலையை உயர்த்தி அதிர்ச்சி தந்தது. நந்தினி பால் லிட்டருக்கு 8 ரூபாய் விலை உயர்த்தப்பட்டு நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்குள் பேருந்து கட்டணமும் உயரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பேருந்து கட்டணம் 15 சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது மீண்டும் பேருந்து கட்டணங்களை உயர்த்த மாநில அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறதாம்.

பால் விலையை தொடர்ந்து பேருந்து கட்டணமும் உயர்கிறதா? பெங்களூரு மக்களுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி..!!

பேருந்து கட்டண திருத்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பு, போக்குவரத்து கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருவது உள்ளிட்ட காரணங்களால் டிக்கெட் கட்டண உயர்வு குறித்து பரிசீலனை செய்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

பேருந்து இயக்க செலவுகள் மற்றும் ஊழியர்களின் ஊதியம் வழங்குவது என அரசு போக்குவரத்து கழகங்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கும் 'சக்தி' திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே கூடுதல் வருமானம் ஏதுமின்றி அதிகப்படியான இயக்க செலவுகள் ஏற்படுவதால் கழகங்களின் நிதிச்சுமை அதிகரித்துள்ளதாம்.

Also Read

நிதி சுமையை சமாளிக்க பேருந்து கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி நடந்தால் காங்கிரஸ் ஆட்சியில் இது இரண்டாவது கட்டண உயர்வாக இருக்கும் . இதற்கிடையே அதுல் குமார் திவாரி தலைமையிலான கட்டண ஒழுங்குமுறை குழு அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

Recommended For You

இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் பைரதி சுரேஷ் நவம்பர் 3ஆம் தேதி நான்கு போக்குவரத்து கழகங்களின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, இறுதி முடிவு நவம்பர் 4ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

ஏற்கனவே நந்தினி பால் விலையை லிட்டருக்கு 8 ரூபாய் உயர்த்தி, அது நவம்பர் 1 முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், தற்போது பேருந்து கட்டணமும் உயர்த்தப்படலாம் என்ற செய்தி பொதுமக்களுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+