கர்நாடகாவில் பண்டிகை மற்றும் விடுமுறை பருவம் தொடங்கியுள்ள நிலையில், தனியார் மற்றும் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து நிறுவனங்கள் புதிய யுத்தியை பயன்படுத்தி அதிகமாக வருமானம் ஈட்டும் முயற்சியில் இறங்கியுள்ளன. பண்டிகை காலத்தையொட்டி, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளிடமிருந்து வழக்கமான கட்டணத்தை விட இரு மடங்கு கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. இந்த திடீர் கட்டண உயர்வு பயணிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தனியார் பேருந்துகள் மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
விடுமுறை காலம் என்பதால், பெங்களூரில் உள்ள பலர் தங்களது சொந்த ஊருக்கு திரும்பும் பயணங்களை திட்டமிட்டுள்ளனர். இன்று மகாவீர் ஜெயந்தியையொட்டி தொடங்கிய விடுமுறை, அதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை ஒருநாள் விடுமுறை எடுத்து ஐந்து நாள் விடுமுறையை அனுபவிக்கும் வகையில் தங்களது விடுமுறை நாட்களை திட்டமிட்டுள்ளனர். அதாவது, சனிக்கிழமை (இரண்டாவது சனிக்கிழமை), ஞாயிற்றுக்கிழமை, அனுமன் ஜெயந்தி மற்றும் திங்கள் (டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஜெயந்தி) பொது விடுமுறை நாட்கள் ஆகும்.

இதன்காரணமாக, நகரத்தை விட்டு வெளியேறும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை பயன்படுத்தி தனியார் பேருந்துகளில் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து பயணி ஒருவர் கூறுகையில், கடந்த செவ்வாயன்று தேவதுர்கா முதல் பெங்களூரு வரை கட்டணம் ரூ.750 இருந்தது, ஆனால் இன்று (வியாழக்கிழமை) ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது அது ரூ.2,000 ஆக உயர்ந்துவிட்டது என்று குற்றம்சாட்டினார்.
தனியார் பேருந்து கட்டண உயர்வு: பெங்களூரு - தார்வாட் இடையே ரூ.750 - ரூ.2,999 ஆக இருந்த பேருந்து கட்டணம் தற்போது ரூ.850 - ரூ.10,000 ஆக உயர்வு
பெங்களூரு - தர்மஸ்தலா இடையே ரூ. 600 - ரூ. 850 ஆக இருந்த கட்டணம் ரூ.1,250 - ரூ.2,000 ஆக உயர்வு
பெங்களூரு - மைசூரு இடையே ரூ.190 - ரூ.1,600 ஆக இருந்த கட்டணம் ரூ.300 - ரூ.5,999 ஆக உயர்வு.
பெங்களூரு - குடகு இடையே ரூ.580 - ரூ.990 ஆக இருந்த கட்டணம் ரூ1,000 - ரூ.1,900 ஆக உயர்வு
பெங்களூரு - சிக்கமகளூரு இடையே ரூ.500 - ரூ.700 ஆக இருந்த கட்டணம் ரூ.599 - ரூ.1,150 ஆக உயர்வு
பெங்களூரு - மங்களூரு இடையே ரூ.600 - ரூ.2,999 ஆக இருந்த பேருந்து கட்டணம் ரூ.900 - ரூ.3,000 ஆக உயர்வு
பெங்களூரு - ஹூப்பள்ளி இடையே ரூ.759 - ரூ.3,800 ஆக இருந்த கட்டணம் ரூ.819 - ரூ.10,000 ஆக உயர்வு
பெங்களூரு - கார்வார் இடையே ரூ.850 - ரூ.2,999 ஆக இருந்த கட்டணம் ரூ.1,499 - ரூ.3,000 ஆக உயர்வு
பெங்களூரு - கலபுர்கி இடையே ரூ.850 - ரூ.4,000 ஆக இருந்த கட்டணம் ரூ.1,399 - ரூ.2,400 ஆக உயர்வு
பெங்களூரு - ஷிவமொக்கா இடையே ரூ.350 - ரூ1,899 ஆக இருந்த கட்டணம் ரூ.799 - ரூ.2,299 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கே.எஸ்.ஆர்.டி.சி.யும் கட்டணங்களை உயர்த்தியுள்ளது: தனியார் பேருந்துகளில் மட்டுமல்ல; கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகமும் (KSRTC) கூட கட்டணங்களை 15 முதல் 20 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது, இது பயணிகளை பெருமளவில் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பெங்களூரு - ஹூப்பள்ளி இடையே( ஏசி ஸ்லீப்பர்) ரூ.1,100 ஆக இருந்த கட்டணம் ரூ.1,350ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பெங்களூரு - ஹூப்பள்ளி (நான் ஏசி ஸ்லீப்பர்) இடையே ரூ.800 ஆக இருந்த கட்டணம் ரூ.1,100 ஆக உயர்வு
பெங்களூரு - பிதார் (ஏசி ஸ்லீப்பர்) இடையே ரூ.1,500 ஆக இருந்த கட்டணம் ரூ.1,900 - ரூ2,100 வரை உயர்வு
பெங்களூரு - பிதார் (நான் ஏசி ஸ்லீப்பர்) இடையே ரூ.1,200 ஆக இருந்த கட்டணம் ரூ.1,850 ஆக உயர்வு
பெங்களூரு - மங்களூரு (ஏசி ஸ்லீப்பர்) இடையே ரூ.1,500 ஆக இருந்த கட்டணம் ரூ.1,850 ஆக உயர்வு
பெங்களூரு - மங்களூரு (நான் ஏசி) இடையே ரூ.1,100 ஆக இருந்த கட்டணம் ரூ.1,500 ஆக உயர்வு.
பல பயணிகள் இந்த கட்டண உயர்வை விமர்சித்துள்ளனர். தனியார் பேருந்துகள் பண்டிகைக் காலங்களில் கட்டண உயர்வுக்கு பெயர் பெற்றிருந்தாலும், KSRTC போன்ற பொதுப் போக்குவரத்து நிறுவனம் இதை பின்பற்றாமல் பயணிகளுக்கு சலுகை அளிக்க வேண்டும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ச்சியான கட்டண உயர்வுகள் மக்களின் பொருளாதார திறன் மற்றும் அணுகல் பற்றிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications