பெங்களூரு: கர்நாடக அரசு பெங்களூருக்கு அருகிலேயே KWIN City என்ற அதிநவீன புதிய நகரத்துக்கான அடிக்கல் நாட்டியுள்ளது. கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் அமைச்சர்கள் இணைந்து இந்த நகரத்துக்கான திட்ட பணிகளை தொடங்கி வைத்தனர்.
Knowledge, Wellbeing, and Innovation (KWIN) என்ற கருப்பொருளின் அடிப்படையில் பெங்களூருக்கு அருகே KWIN நகர் அமைகிறது. பெங்களூருக்கு நிகரான வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை கொண்ட ஒரு நகரமாக KWIN சிட்டி உருவாக இருக்கிறது. இதற்காக தொட்டாஸ்பேட் மற்றும் தொட்டாபெல்லாபூர் பகுதியில் சுமார் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த நகரம் அமைக்கப்படுகிறது.

பெங்களூரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலேயே இது அமைகிறது. இந்த நகரத்தை பொருத்தவரை உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள், ஸ்டார்ட் அப்கள், ஆய்வு மையங்கள் மற்றும் சர்வதேச மருத்துவமனைகள் கொண்ட நவீன மற்றும் மக்களுக்கு தேவையான அனைத்தும் கொண்ட ஒரு நகரமாக இருக்கும் என கர்நாடகா அரசு கூறுகிறது.
இந்தத் திட்டத்தினை கர்நாடக மாநிலத்தின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தலைமை தாங்கி நடத்துகிறது. இது பெங்களூருக்கு அருகிலேயே அதே வேளையில் கெம்பக்கவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஒரு மணி நேரம் பயண தூரத்திலேயே இருப்பதால் பல்வேறு முதலீட்டாளர்களும் இங்கே முதலீடு செய்ய முன்வருவார்கள் என கர்நாடகா அரசு கருதுகிறது.
KWIN நகரம் குறித்து அறிவிப்பு வெளியான உடனேயே தொட்டபெல்லாபூர் பகுதியில் ரியல் எஸ்டேட் மதிப்புகள் உயர்ந்துவிட்டன.
கர்நாடக அமைச்சர் எம்.பி பாட்டில், KWIN நகரம் மாநில ஜிடிபிக்கு மிகப்பெரிய அளவில் பங்களிக்க போகிறது என தெரிவித்திதுள்ளார்.
தற்போது மாநிலத்தில் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன, முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் கர்நாடகாவை சேர்ந்த மக்களுக்கு வேலையை உருவாக்குவதற்காகவும் பெங்களூருக்கு அருகிலேயே இப்படி ஒரு புதிய நகரத்தை அமைப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த நகரம் அமைந்துவிட்டால் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்படும் என்றும் 80 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கர்நாடக அரசு தெரிவிக்கிறது.
5 லட்சம் மக்கள் குடியிருக்கும் வகையில் இந்த நகரம் அமைக்கப்படும் என்றும் 465 ஏக்கர் பரப்பளவில் சோலார் மின் உற்பத்தி மையம் அமைக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நகரத்திற்கு தேவையான பெருபான்மையான மின்சாரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் மூலமே தயாரிக்கப்பட உள்ளது.
மேலும் நவீன மழை நீர் சேகரிப்பு முறையின் அடிப்படையில் இந்த நகரத்துக்கு 50 சதவீத தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட இருக்கிறது. செமி கண்டக்டர், வாகனங்கள் ,ஏரோஸ்பேஸ் பாதுகாப்பு , விண்வெளி தொழில்நுட்பம் , மருந்து உள்ளிட்ட துறைகளுக்கான ஒரு நகரமாக KWIN சிட்டி இருக்கும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications