போக்குவரத்து விதிகளை மீறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து – கர்நாடகா முதலமைச்சர் அதிரடி..!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் நபர்களின் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்யும்படி முதலமைச்சர் சித்தராமையா பரிந்துரை செய்துள்ளார்.

பெங்களூருவில் முதலமைச்சரின் அவசரகால ஆம்புலன்ஸ் சேவை என்ற திட்டத்தின் கீழ் 65 புதிய ஆம்புலன்ஸ்கள் மருத்துவ சேவையில் இணைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் சித்தராமையா கலந்து கொண்டு 65 புதிய ஆம்புலன்ஸ்களின் சேவையை தொடங்கி வைத்தார்.

போக்குவரத்து விதிகளை மீறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து – கர்நாடகா முதலமைச்சர் அதிரடி..!

இதனை அடுத்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் சித்தராமையா என்னதான் கடுமையான போக்குவரத்து விதிகள் அமலில் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் அதனை மதிப்பது கிடையாது என்றார்.

இது போல ஒரு சிலர் விதிகளை மதிக்காமல் அலட்சியம் செய்வதால் பலரது அப்பாவி உயிர்கள் பறிப்போகின்றன என குறிப்பிட்ட முதலமைச்சர் சித்தராமையா போக்குவரத்து விதிமுறைகளை அனைவரும் கடுமையாக பின்பற்றினால் பெருமளவிலான சாலை விபத்துகளை நம்மால் குறைக்க முடியும் என கூறினார்.

மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என கூறினார்.

போக்குவரத்து விதிகளை மீறும் தனிநபர்களின் வாகன ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்யும்படி போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டிக்கு அவர் பரிந்துரை செய்தார். ஒரு விபத்து நேர்ந்து அந்த விபத்தில் சிக்கிய நபர்கள் குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட வேண்டும்.

இதனை கோல்டன் அவர்ஸ் என ஆங்கிலத்தில் கூறுவார்கள். இந்த கோல்டன் அவர்ஸ் முடிவதற்குள் பாதிக்கப்பட்ட நபர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உயிரை காப்பாற்றுவதற்கு மிக உதவிகரமாக இருப்பவை ஆம்புலன்ஸ்கள். தற்போது அரசு பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கக்கூடிய இந்த ஆம்புலன்ஸ்கள் நவீன வசதி கொண்டிருக்கும் என முதலமைச்சர் கூறினார்.

விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக அனைத்து வகையான முதலுதவியையும் வழங்கும் வசதிகள் ஆம்புலன்ஸ்களில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டூ ராவ் தெரிவித்துள்ளார். இந்த 65 புதிய ஆம்புலன்ஸ்களில் 26 ஆம்புலன்ஸ்கள் அட்வான்ஸ்டு லைவ் சப்போர்ட் சிஸ்டங்களை (advanced life-support systems) கொண்டிருப்பதாகவும் வென்டிலேட்டர் உள்ளிட்ட வசதிகள் இவற்றில் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மாநிலம் முழுவதும் அடிக்கடி விபத்து நேரும் 65 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் அந்தப் பகுதிகளில் எல்லாம் உடனடியாக ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நவீன ஆம்புலனஸ்களை இயக்குவது மற்றும் முதலுதவி அளிப்பது உள்ளிட்டவை குறித்து பணியாளர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்க இருப்பதாகவும் அதற்காக அரசு 25 கோடி ரூபாயை ஒதுக்கி இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+