ஒரே நாளில் ரூ.17,183 கோடி முதலீடு.. கர்நாடகாவுக்கு யோகம் தான்..!!

தென்னிந்திய மாநிலங்கள் மத்தியில் புதிய முதலீடுகளையும், புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்குவதில் பெரும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக கடந்த சில வருடங்களாக புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் தொய்வடைந்த கர்நாடக அரசு தற்போது பணிகளை வேகப்படுத்தியுள்ளது. இதனிடையில் ஆந்திர பிரதேச அரசு கர்நாடகாவில் உள்ள நிறுவனங்களை அழைத்து வருகிறது.

தமிழ்நாடு அரசு ஒரு படிக்கு மேல் சென்று, எதிர்காலத்தில் ஹைய் டெக் வேலைவாய்ப்புகளையும், உயர் திறன்மிக்க வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் பொருட்டு விண்வெளி, ஏஐ, ரோபோட்டிக்ஸ், 4ஆம் தலைமுறை தொழிற்துறை டார்கெட் செய்து முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இத்தகைய கடுமையான போட்டிக்கு மத்தியில் தென்னிந்திய மாநிலங்கள் அனைத்தும் தனித்துவமான வழிகளில் புதிய முதலீடுகளையும், புதிய வேலைவாய்ப்புகளையும் ஈர்த்து வருகிறது.

ஒரே நாளில் ரூ.17,183 கோடி முதலீடு.. கர்நாடகாவுக்கு யோகம் தான்..!!

இந்த நிலையில் கர்நாடக அரசு, மொத்தம் 17,183 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டங்கள் மூலம் சுமார் 12,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் தொழில்துறை அமைச்சர் எம்பி பாட்டில் தலைமையிலான குழு இந்த 17,183 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

முதலமைச்சரின் குழு, டால்மியா சிமெண்ட் நிறுவனத்தின் இரண்டு திட்டங்களுக்கு 6,020 கோடி ரூபாய், ஸ்ரீ சிமெண்ட் நிறுவனத்திற்கு 2,406 கோடி ரூபாய், மற்றும் எம்வீ எனர்ஜி நிறுவனத்திற்கு 5,495 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், கலர்டோன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் 190 கோடி ரூபாய் மற்றும் பாஷ் ஆட்டோமோட்டிவ் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் 1,330 கோடி ரூபாய் மதிப்பிலான கூடுதல் முதலீட்டு திட்டங்களும் அங்கீகரிக்கப்பட்டன. இந்த முதலீடுகள் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது மட்டும் அல்லாமல் தொழில்துறை அமைச்சர் எம்பி பாட்டில் தலைமையிலான குழு, மாநிலம் முழுவதும் 60 முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் பெரும்பாலான திட்டங்கள் பெங்களூர், மைசூர் போன்ற பெரு நகரங்களை தாண்டி 2ஆம் மற்றும் 3ஆம் நிலை நகரங்களில் செயல்படுத்தப்பட உள்ளது,

தக்ஷிண கன்னடா, தும்கூர், கோலார், விஜயபுரா, சித்ரதுர்கா, சிக்கமகளூர், பெலகாவி, ராய்ச்சூர், யாதகிரி, கலபுராகி மற்றும் பெங்களூரு ஊரக பகுதிகளில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதேபோல் முதலமைச்சரின் குழு, பல்வேறு கட்டங்களில் செயல்படுத்தப்படும் 10 திட்டங்களை முடிக்க கால அவகாசத்தை நீட்டித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+