இந்த வாரத் தொடக்கத்தில், அதாவது கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதிலிருந்து வருமான வரியை எப்படி தவிர்ப்பது? என்று மக்களுக்கு சொல்லும் வகையில் கண்டெண்ட்டுகளை உருவாக்குபவர்கள் பலர் சோசியல் மீடியா பக்கங்கள் மூலம் வீடியோக்களை பதிவிட்டு வந்தனர். அதில் பல நகைச்சுவை வீடியோக்களும் அடங்கும். அப்படி கண்டெண்ட் உருவாக்கும் நபரான ஸ்ரீநிதி ஹண்டே ஒரு வீடியோவை இணையதளத்தில் பகிர்ந்து உள்ளார்.
ஸ்ரீநிதி ஹண்டே என்ற நபர், சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் தங்கள் வருமான வரியை முழுமையாகச் சேமிக்கக்கூடிய ஒரு நகைச்சுவையான வழியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், வருமான வரியை எப்படி 100 சதவீதம் சேமிப்பது என்பதை உங்களுக்குச் சொல்லப்போகிறேன் என்று ஹண்டே கூறி வீடியோவைத் தொடங்குகிறார். இது மிகவும் சட்டபூர்வமான மற்றும் எளிய செயல்முறை தான்.
அதற்கு முதலில் நீங்கள் உங்கள் வீட்டிலோ, மொட்டை மாடி அல்லது தோட்டத்திலோ புல்லை (grass) வளர்க்க வேண்டும். இது மிகவும் சட்டபூர்வமான செயல்முறையே. இப்போது, உங்கள் HR-க்கு கால் செய்து, உங்களுக்கு சம்பளம் எதுவும் வேண்டாம் என்று சொல்லுங்கள். உடனே அவர்கள் மகிழ்ச்சியாகி விடுவார்கள்.
உங்கள் சம்பளத்திற்கு சமமான அளவு புல்லை உங்கள் நிறுவனம் உங்களிடமிருந்து வாங்க வேண்டும் என்று உங்கள் HR-இடம் சொல்லுங்கள். உங்கள் சம்பளம் ரூ.50,000 என்றால், ஒரு புல் இழைக்கு ரூ.1,000 என 50 புல் இழைகளை நிறுவனத்திற்கு விற்கலாம்.
இப்போது என்ன நடக்கும், உங்கள் சம்பள வருமானம் பூஜ்ஜியமாகிவிடும், உங்களுக்கு விவசாய உற்பத்தியை விற்பதிலிருந்து மட்டுமே வருமானம் கிடைக்கும், அதற்கு இந்தியாவில் வரி விதிக்கப்படாது. இவ்வாறு, நீங்கள் வருமான வரியில் 100 % சேமிக்கலாம். பிடித்தம் அல்லது முதலீடு பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை அவர் பகிர்ந்ததிலிருந்து அதை பயன்படுத்தி பல மீம்ஸ் வெளி வர தொடங்கியுள்ளது. பலரும் தங்களுடைய கருத்துக்களை கமெண்ட் செக்ஷனில் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அவருடைய வீடியோவுக்கு மட்டுமல்லாமல் கமெண்ட் செக்ஷனிலும் நகைச்சுவை நிரம்பி வழிகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications