சமீப காலமாக உணவு பொருட்கள், மசாலா பொருட்கள் ஆகியவற்றில் கலப்படங்கள் இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. FSSAI என்று சொல்லப்படுகிற உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தரமற்ற பொருட்களை தயார் செய்து விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு 111 மசாலா பொருட்களின் உற்பத்தியையும் FSSAI தடை செய்தது.
இதன் காரணமாக உணவுப் பொருட்களின் தரம் குறித்த கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கேரளாவில் தயாரிக்கப்பட்டு குடகு மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் விற்கப்படும் 31 தின்பண்டங்களை கண்டறிந்துள்ளது. இது உணவுப் பிரியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஊடக அறிக்கைகளின் படி கேரளாவிலிருந்து வந்த மசாலா மிக்சர்கள், சிப்ஸ் பாக்கெட்கள், அல்வா, முறுக்கு மற்றும் உலர் பழங்கள் போன்ற பிரபலமான தின்பண்டங்களை சேகரித்து FSSAI ஆய்வுக்கு உட்படுத்தியது. இதற்காக 90 மாதிரிகள் பயன்படுத்தப்பட்டது. சில உணவுப் பொருட்களில் ஆர்டிபிசியல் புட் கலர்களான சன்செட் மஞ்சள், அல்லுரா சிவப்பு, அசோரூபின் மற்றும் டார்ட்ராசின் போன்ற செயற்கை நிறங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
பாதுகாப்பற்ற தின்பண்டங்களை விற்கும் ஹோட்டல்கள் மற்றும் கடைகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து விசாரித்து தகவல் அறியுமாறு கேரள அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் தின்பண்டங்கள் சாமராஜநகர், மங்களூரு, தட்சிண கன்னடா, குடகு, மடிகேரி, மைசூர் போன்ற கர்நாடக பகுதிகளிலும் வழங்கப்பட்டன என்பது தெரியவந்துள்ளது.
ஆர்டிபிசியல் கலர் சேர்க்கப்படுவதனால் ஏற்படும் ஆபத்து என்ன?: அதிக அளவில் ஆர்டிபிசியல் கலரை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை உட்கொள்ளும் போது உடல் நல பாதிப்புகள் ஏற்படும். இந்த வர்ணங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
படை நோய், ஆஸ்துமா, அனாபிலாக்ஸிஸ் போன்ற ஒவ்வாமை நோய்களும் ஆர்டிபிசியல் கலரை உட்கொள்வதனால் ஏற்படுகிறது. டார்ட்ராசைன் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளும் போது புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த அபாயங்கள் இருந்த போதிலும் இன்னும் பல உணவுப் பொருட்களில் செயற்கை நிறங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் சில ஊர்களில் இது குறித்த விளம்பரங்களுடன் தான் பொருட்கள் விற்பனையாகிறது. இதனால் அந்தப் பொருளின் தன்மை மற்றும் அது ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து தெரிந்து கொண்டு சில பெற்றோர்கள் அவற்றை தங்கள் குழந்தைகளுக்கு வாங்கி தராமல் இருக்கின்றனர். ஆனால் சில ஊர்களில் அப்படி கிடையாது. ஐரோப்பா போன்ற நாடுகளில் டார்ட்ராசைன் சாயங்கள் பயன்படுத்தப்பட்டால் அவற்றுக்கான எச்சரிக்கை லேபிள் இருக்க வேண்டும்.
உணவுப் பொருட்களில் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை சேர்ப்பது சமீப காலமாக நடந்து வருகிறது. வெளியில் தின்பண்டங்களை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டில் சமைக்கப்படும் உணவுகளை எடுத்துக் கொள்வது தான் சிறந்தது என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications