பெங்களூரு: பெங்களூருவில் வெளிமாநிலங்களில் இருந்து வேலைக்கு வருபவர்கள் அதிகம் . அதே போல குடும்பத்தில் இருக்கும் அனைவருமே வேலைக்கு செல்வதும் அதிகம். இப்படிப்பட்ட சூழலில் பெரும்பாலான பெங்களூர் வீடுகளில் வீட்டு வேலைக்கு மற்றும் சமையலுக்கு ஆட்களை வைத்துக் கொள்வது வழக்கமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் இவ்வாறு வீட்டு வேலைக்கு ஆட்களை பணிக்கு அமர்த்தும் போது சரியான வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும் என்பதில் கர்நாடகா அரசு தீவிரமாக இருக்கிறது.
பெரும்பாலும் ஏஜென்சிகள் மூலம் இதுபோல வீட்டு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வார்கள் அல்லது வாய் வழி வார்த்தைகள் மூலம் வீட்டு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வார்கள் . இவ்வாறு வரக்கூடியவர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் என்பது கிடையாது. அதேபோல அவர்களுக்கான விடுமுறை உள்ளிட்ட வசதிகளும் பெருமளவில் கிடைப்பதில்லை .கர்நாடக மாநில அரசு வீட்டு வேலைக்கு ஆட்களை பணிக்கு அமர்த்தும் நடைமுறையில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வர உள்ளது.

இதற்காக கடந்த மாதம் கர்நாடக மாநில தொழில்துறை அமைச்சகம் வீட்டு பணியாளர் மசோதா என்ற ஒரு மசோதாவை உருவாக்கி இருக்கிறது. இதன்படி நீங்கள் வீட்டு வேலைக்கு ஒரு நபரை பணியில் அமர்த்த போகிறீர்கள் என்றால் அவரோடு முறைப்படி ஒரு வேலைக்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் . குறிப்பாக அந்த ஒப்பந்தத்தில் ஒரு நாளைக்கு எவ்வளவு மணி நேரம் வேலை, எந்த மாதிரியான வேலைகளை செய்ய வேண்டும் ,அவர்களுக்கு என்ன மாதிரியான சம்பளம் கிடைக்கும் , சம்பள உயர்வு எப்படி வழங்கப்படும், வேலை சார்ந்த மற்ற பலன்கள் எப்படி கிடைக்கும் உங்களிடம் அனைத்தும் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும் .
இவ்வாறு வீட்டு வேலைக்கு ஒரு நபரை வேலைக்கு அமர்த்தும்போது ஒப்பந்தம் ஏற்படுத்திவிட்டு அந்த விவரங்களை கர்நாடக மாநில தொழில்துறை அமைச்சகத்திடம் 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த பதிவுகளுக்காக ஒரு டிஜிட்டல் தளமும் உருவாக்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
வீட்டு பணியாளர்களுக்கான சங்கத்தின் இணை செயலாளரான கீதா மேனன் வீட்டு வேலை செய்யக்கூடிய நபர்கள் குறித்த தரவுகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதே பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பதாகவும் அரசின் இந்த சட்டம் வீட்டு வேலைக்கு ஆட்களை பணிக்கு அமர்த்துவதை ஒரு நடைமுறை கொண்டு வரும் எனக் கூறியிருக்கிறார் . மேலும் வீட்டு பணியாளர்களுக்கு ஒரு சமூக பாதுகாப்பு திட்டத்தை கொண்டு வருவதில் அரசு கவனமாக உள்ளது என கர்நாடக மாநில தொழில்துறை அமைச்சர் சந்தோஷ் கூறியிருக்கிறார். இதற்காக ஒரு செயலியை உருவாக்கவும் தொழில்துறை அமைச்சகம் முடிவு செய்து இருக்கிறதாம் .
மேலும் வாரத்தில் 48 மணி நேரம் மட்டுமே வேலை, குறைந்தபட்ச சம்பளம், சமையலுக்கு குறைந்தபட்ச சம்பளம், வீடு சுத்தம் செய்வோருக்கு குறைந்தபட்ச சம்பளம் ஆகியவையும் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. சம்பளத்துடன் கூடிய விடுப்பு , பேறுகால விடுப்பு ஆகியவை வீட்டு பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற வகையில் இந்த புதிய சட்டம் கொண்டுவரப்பட இருக்கிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications