கர்நாடக சட்டசபையின் 224 இடங்களுக்கான தேர்தல் புதன்கிழமை அதாவது மே 10 தொடங்க உள்ளது. பிரதமர் மோடி, ராகுல் காந்தி உட்பட பல முக்கிய தலைவர்கள் நேரில் வந்து பெரிய அளவிலான பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக), காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய முக்கிய அரசியல் கட்சிகள் நேருக்கு நேர் போட்டியிடுகின்றன.
இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் மத்தியில் யார் பணக்கார வேட்பாளர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. Association of Democratic Reforms அமைப்பு கர்நாடக தேர்தலில் போட்டியிடுவோர் சமர்ப்பித்துள்ள வேட்புமனு அடிப்படையில் யார் பணக்கார வேட்பாளர் என பட்டியலிட்டு உள்ளது.

ADR அமைப்பின் தரவுகள் படி பெங்களூரின் முக்கிய வர்த்தக பகுதியான சிக்பேட் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக இருக்கும் யூசுப் ஷெரீப் அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 1,633 கோடி ரூபாய் என தனது வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ளது மூலம் 2023 கர்நாடக சட்டசபை தேர்தலின் பணக்கார வேட்பாளராக உள்ளார்.
இவரை தொடர்ந்து ஹொஸ்கோட்டே தொகுதியின் பாஜக வேட்பாளர் என் நாகராஜூ 1,609 கோடி ரூபாய் சொத்துக்களுடன் இரண்டாவது பணக்கார வேட்பாளராக உள்ளார். இவர்களை தொடர்ந்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் 1,413 கோடி ரூபாய் சொத்துக்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
முதல் 3 இடங்களை தாண்டி 4வது இடத்தில் கோவிந்தராஜநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பிரியகிருஷ்ணா ரூ.1,156 கோடி ரூபாய் சொத்துக்களுடனும், காங்கிரஸ் கட்சியின் ஹெப்பால் தொகுதி வேட்பாளர் சுரேஷா BS 648 கோடி ரூபாய் சொத்து மதிப்புடனும் பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளனர்.

இவர்களை தொடர்ந்து சாந்தி நகர் தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் NA ஹரீஸ் 439 கோடி ரூபாய் சொத்து மதிப்புடனும், பெலூர் தொகுதியை சேர்ந்த பிஜேபி வேட்பாளர் ஹெச்.கே. சுரேஷ் 435 கோடி ரூபாய் சொத்து மதிப்புடனும், பெங்களூரில் மிகவும் பிரபலமான பொம்மனஹள்ளி தொகுதியை சேர்ந்த ஜனதா தளம் கட்சியின் வேட்பாளரான என் நாராயண் ராஜு 416 கோடி ரூபாய் சொத்து மதிப்புடனும் பணக்கார வேட்பாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
பணக்காரர் வேட்பாளர் பட்டியலில் கடைசியாக பெல்லாரி தொகுதியை சேர்ந்த ஜனதா தளம் கட்சியின் வேட்பாளரான அனில் ஹெச் லேட் 380 கோடி ரூபாய் சொத்து மதிப்புடனும், காங்கிரஸ் கட்சியின் Haliyal தொகுதி வேட்பாளரான தேஷ்பாண்டே ரகுநாத் 363 கோடி ரூபாய் சொத்து மதிப்புடனும் உள்ளார்.
மேலும் கர்நாடக வேட்பாளர்கள் பட்டியிலில் அதிகபட்சமாக கடன் வைத்துள்ளவர்கள் பட்டியலில் ப்ரியா கிருஷ்ணா ரூ.881 கோடியும், டி.கே.சிவகுமார் ரூ.265 கோடியும், கே.நாராயண் ராஜூ ரூ.125 கோடியும், சிட்லகட்டா தொகுதி பாஜக வேட்பாளர் ராமச்சந்திர கவுடா எஸ்.வி.க்கு ரூ.115 கோடியும், சுரேஷ் பிஎஸ் என்பவருக்கு ரூ.114 கோடிக்கு மேல் கடன்கள் உள்ளது.


Click it and Unblock the Notifications