கர்நாடகாவில் கன்னடர்களுக்கு தான் வேலைவாய்ப்பில் முன்னுரிமை? – சமூக வலைதளங்களில் விவாதம்

பெங்களூரு: கர்நாடகாவில் செயல்படக்கூடிய நிறுவனங்கள் கன்னடர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என ஒரு நபர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வந்து பணி புரிவதால் கன்னடர்களுக்கான வேலை வாய்ப்பு பறிபோவதாக ஒரு சர்ச்சை நிலவி வருகிறது. இந்த நிலையில் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ள ஒரு நபர் கர்நாடக மாநிலத்தில் செயல்படக்கூடிய நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். கன்னடர்களுக்கு மிகப்பெரிய அளவில் திறமை இருக்கிறது ஆனால் எங்களை வேலைக்கு அமர்த்துவதற்கு சாதகமான சூழல் மாநிலத்தில் இல்லை என கூறியுள்ளார்.

கர்நாடகாவில் கன்னடர்களுக்கு தான் வேலைவாய்ப்பில் முன்னுரிமை? – சமூக வலைதளங்களில் விவாதம்

எங்களுடைய சொந்த மாநிலத்திலேயே வேலை வேண்டி எவ்வளவு காலம் தான் சண்டை போடுவது என கூறியுள்ள அந்த நபர் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குங்கள் என நிறுவனங்களுக்கு வலியுறுத்தியுள்ளார். அவருடைய இந்த பதிவு சமூக வலைதளத்தில் பெரிய அளவில் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

நிறுவனங்கள் திறமையான நபர்களை தான் வேலைக்கு தேர்வு செய்ய வேண்டுமே தவிர ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கிறோம் என்பதற்காக அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தந்தால் அது அந்த நிறுவனத்தின் வளர்ச்சியை பாதிக்கும் என ஒரு பயனர் தெரிவித்துள்ளார். இது போன்ற பேச்சுக்கள் நாட்டை பிளவுபடுத்தும் என ஒரு பயனர் தெரிவித்துள்ளார்.

மதத்தின் பெயரால் சண்டை போட்டுக் கொண்டோம், ஜாதியின் பெயரால் சண்டை போட்டுக் கொண்டோம், தற்போது மொழியின் பெயரால் சண்டை போட்டுக் கொள்கிறோமா என ஒரு பயனர் கேள்வி எழுப்பி உள்ளார். ஒரு பயனர் போகிற போக்கை பார்த்தால் சமூக வலைத்தளங்களில் கன்னடர்களுக்கு என தனி தளங்களையே நீங்கள் கேட்பீர்கள் போல என கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடகாவில் கன்னடர்களுக்கு தான் வேலைவாய்ப்பில் முன்னுரிமை? – சமூக வலைதளங்களில் விவாதம்

பெங்களூரில் ஒரு நிறுவனத்தை தொடங்கப் போகிறேன் திறமையான நபர்களுக்கு தான் நான் வேலை வாய்ப்பு வழங்கவேனே தவிர கர்நாடகாவை சேர்ந்தவர் என்பதற்காக மட்டும் அவருக்கு வேலை வாய்ப்பு வழங்க மாட்டேன் என ஒரு பயனர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் தனியார் நிறுவனங்களில் குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளில் கன்னடர்களுக்கு 100 சதவீத இட ஒதுக்கீட்டைக் கட்டாயமாக்கும் மசோதாவுக்கு கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால் நிறுவனங்களின் எதிர்ப்பு காரணமாக அரசு அந்த மசோதாவை நிறுத்தி வைத்தது.

கர்நாடகாவில் வளர்ச்சியும் வேலைவாய்ப்பும் பெங்களூருவில் தான் இருக்கிறது வேறு பகுதிகளுக்கு விரிவடையவில்லை என்ற குற்றச்சாட்டை மக்கள் முன் வைத்து வருகின்றனர், வேலைவாய்ப்பில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தொடர்ந்து கோரி வருகின்றனர்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+