இன்ஜினியரிங் படிச்சிட்டு பூ வியாபாரம் செய்யும் இளைஞன்.. மாசம் 7 லட்சம் வருமானமாம்..!

நாட்டில் பலருக்கும் பிடித்த ஒரு விஷயம் கார்டனிங். சிலர் ஹாபிக்காக இதை செய்தாலும் சிலர் கார்டன் அமைத்து தங்களுக்கு பிடித்த உணவுப் பொருட்கள், காய்கறிகள், பூக்கள் பழங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்து அதிக விலைக்கு விற்பனை செய்து வீட்டில் இருந்தே லாபம் பார்க்கின்றனர். அப்படி ஒரு நபரைப் பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம். வீட்டிலேயே கார்டன் அமைத்து அதில் ஒரு வித்தியாசமான பூவையும் பயிரிட்டு லட்சக்கணக்கில் வருமானம் பார்த்து வருகிறார்.

லோஹித் ரெட்டி என்ற நபர் விஸ்வேஸ்வரய்யா டெக்னாலஜிகள் யுனிவர்சிட்டியில் பிஇ எலக்ட்ரானிக் முடித்த பட்டதாரி. அவரது குடும்பம் கர்நாடகாவின் பெங்களூரு நகர்ப்புற பகுதியில் உள்ள கொம்மாசந்திராவில் வசித்து வருகிறது. பெங்களூரில் வசிக்கும் பல இளைஞர்கள் கார்ப்பரேட் வேலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாலும் லோஹித் ரெட்டிக்கு அதில் விருப்பமில்லை.

இன்ஜினியரிங் படிச்சிட்டு பூ வியாபாரம் செய்யும் இளைஞன்.. மாசம் 7 லட்சம் வருமானமாம்..!

ஆனால் லோஹித் ரெட்டிக்கு பூக்கள் மற்றும் பசுமையான இடத்தில் தனது நேரத்தை செலவழிப்பதே மிகவும் பிடித்த ஒன்று. கட்டிடத்திற்குள் அடைந்து வேலை செய்ய லோஹித்துக்கு துளியும் விரும்பவில்லை. பூக்களுக்கு நடுவில் இருப்பது தனக்கு ஆத்ம திருப்தியை தருவதாக நம்பிய லோகித், வேறு தொழிலில் ஈடுபட முடிவு செய்தார்.

இவருடைய குடும்பமே விவசாய குடும்பம் தான். லோஹித் 2016-ஆம் ஆண்டு இன்ஜினியரிங் முடித்த பிறகு ஒரு மலர் பண்ணை வைத்திருந்த தன் உறவினருக்கு உதவ ஆரம்பித்தார். பிறகு பகலில் பூக்களை கவனித்து இரவில் பெங்களூரு சந்தையில் விற்பனைக்கு பூக்களை எடுத்துச் செல்வார். எந்த ஒரு தொழிலையும் தொடங்குவதற்கு முன்பு சந்தையை புரிந்து கொள்வது முக்கியம். உங்கள் தயாரிப்புகளை யார் வாங்குவார்கள் எங்கு விற்பனை செய்ய இருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொண்டுதான் இறங்க வேண்டும் என்பதே லோஹித்-தின் லாஜிக்.

ஆரம்ப கட்டம்: 2018 வாக்கில் மலர் வளர்ப்பு மற்றும் பூக்களின் விற்பனை பற்றி லோஹித் போதுமான அறிவைப் பெற்றார். அதன் பிறகு சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தார். இவரது குடும்பம் கொம்மசந்திராவில் 4 ஏக்கர் நிலத்தை வைத்திருந்தது. அங்கு ராகி, பயறு மற்றும் பிற பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தது. அரை ஏக்கரில் பூக்களை வளர்ப்பதற்காக ஒரு பாலிஹவுஸ் அமைக்க அனுமதிக்குமாறு தன் தந்தையிடம் கேட்டுள்ளார் லோஹித். ஆரம்பத்தில் மலர் வளர்ப்பின் வாய்ப்புகள் குறித்து லோஹித்-தின் குடும்பம் தயக்கம் காட்டியுள்ளது. ஆனால் தங்கள் மகன் கேட்டதற்காக பாலிஹவுஸ் அமைக்க அவருடைய குடும்பம் ஒப்புக்கொண்டது.

அதோடு லோஹித் தண்ணீருக்காக ஒரு குளத்தையும் கட்டினார். மலர் வளர்ப்பிற்கு தேவைப்படும் உள்கட்டமைப்புகளையும் அமைத்தார். விவசாயத்தில் ஆரம்பித்து புனேவில் உள்ள ஒரு நர்சரியிலிருந்து 12,000 செடிகளைப் பெற்று வளர்க்க ஆரம்பித்தார். ஆலை, நீர் பாசனம், பாலிஹவுஸ், இதர உள்கட்டமைப்பு உட்பட இதற்கு மொத்த முதலீடாக ரூ.20 லட்சம் செலவானது.

ஜெர்பரா என்ற செடியை 2018-ஆம் ஆண்டில் லோஹித் நட ஆரம்பித்தார். அவை மே மாதத்தில் பூக்க தொடங்கின. 3 மாதங்களுக்குப் பிறகு தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு நல்ல மலர்களை தந்தன. ஒவ்வொரு ஜெர்பரா செடியும் ஒரு நாளைக்கு சராசரியாக 4 பூக்களை தந்தது.

பெங்களூரு சந்தையில் மாதம் தோறும் 40,000 முதல் 50,000 ஜெர்பராக்களை விற்பனை செய்து மாதம் 1.5 லட்சம் முதல் வருடத்திற்கு ரூ.18 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு வருடத்திலேயே தன்னுடைய மொத்த முதலீடும் கிடைத்துவிட்டதாக கூறுகிறார் இந்த விவசாயி.

இந்தியாவில் பூக்களுக்கான தேவை அதிகரித்து வருவதால் நம்பிக்கையுடன் லோஹித் இந்தத் தொழிலை தொடங்கியுள்ளார். இந்திய மலர் வளர்ப்பு சந்தை 2023-ஆம் ஆண்டில் 26,210 கோடியாக இருந்தது. 2032-ஆம் ஆண்டில் கண்டிப்பாக 71,460 கோடியாக உயரும் என்று சந்தை ஆராய்ச்சி நிறுவனமான IMARC குழுமம் தெரிவித்துள்ளது.

முதல் முயற்சி வெற்றி: முதல் முயற்சியில் வெற்றி அடைந்ததை அடுத்து தான் பயிரிடும் இடத்தை அதிகப்படுத்த தொடங்கினார். இதனால் 1.5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய ஆரம்பித்தார். உள்ளூர் நர்சரியில் இருந்து கிரிஸான்தமம் செடிகளை வாங்கி நட்டுள்ளார். கிரிஸான்தமம் என்பது வர்ணவர்ண செவ்வந்திப் பூக்கள். ஒரு செடியின் விலை 2 ரூபாய் மட்டுமே. ஆனால் இதில் கிடைக்கும் ஒவ்வொரு பூவையும் 15 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யலாம் என்பதை கருத்தில் கொண்டு கிரிஸான்தமம் செடிகளை நட்டுள்ளார்.

ஒரு ஏக்கரில் சுமார் 1.5 லட்சம் செவ்வந்திச் செடிகளை நட்டு அதன் மூலம் 22.5 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார். இதில் 12 லட்சம் லாபமாக கிடைத்தது. தற்போது வெள்ளை சாந்தினி, இளஞ்சிவப்புச் சாந்தினி, மஞ்சள் சாந்தினி, சிவப்பு கலிமெரோ, தங்க மஞ்சள் செவ்வந்தி மற்றும் பிற வண்ணங்களில் பல்வேறு வகையான செவ்வந்திகளையும் வளர்த்து வருகிறார்.

வெற்றிகரமாக செவ்வந்தி விவசாயம் செய்ததனால் ஒரு ஏக்கர் நிலத்தை 2.5 ஏக்கராக விரிவு படுத்தினார் லோஹித். கோவிட் காலம் வரும் வரை எல்லாம் நன்றாகவே இருந்துள்ளது. ஆனால் லாக் டவுனின் போது சற்று சிக்கலையும் சந்தித்தார். அப்போதுதான் உள்ளூர் பூ சந்தையை தாண்டி விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார். மற்றொரு மலர் விற்பனையாளருடன் கைகோர்த்து ஆகஸ்ட் 2022-ஆம் ஆண்டில் இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் பூக்களை வழங்கத் தொடங்கினார்.

லோஹித் கூறுகையில் "கோவிட்டுக்கு பிறகு சில விஷயங்கள் சிறப்பாக மாறத் தொடங்கின. எனது வேலையை தினமும் சமூக ஊடகங்களில் அப்லோட் செய்வேன். பூக்களுக்கும் மக்கள் என்னை தொடர்பு கொள்ள தொடங்கினர். வாய் வார்த்தையின் மூலம் என்னுடைய சப்ளை அதிகரித்தது", என்று கூறியுள்ளார்.

தற்போது டெல்லி, மும்பை, பெங்களூர், கொல்கத்தா, ஹைதராபாத், கவுகாத்தி என பல்வேறு ஏரியாக்களுக்கும் சப்ளை செய்து வருகிறார். விளை பொருட்களை சொந்தமாக விற்க முடியாமல் திணறும் விவசாயிகளுக்கு பூக்களை கொள்முதல் செய்து அவர்களுக்கு சந்தைப்படுத்தவும் உதவுகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+